இன்றைய நாள் இராசி பலன் 06.06.2014 - TK Copy இன்றைய நாள் இராசி பலன் 06.06.2014 - TK Copy

  • Latest News

    இன்றைய நாள் இராசி பலன் 06.06.2014

    இன்றைய நாள் இராசி பலன்

    மேஷம் 

    பரபரப்பாகச் செயல்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. உறவினர்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். 

    ரிஷபம் 

    சகோதர வகையில் சகாயம் கிடைக்கும் நாள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்த உதவிக்கு பலரும் நன்றி செலுத்துவர். சாமர்த்தியமான பேச்சுகளால் சில சாதனை படைப்பீர்கள். 

    மிதுனம் 

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். பிரியமான சிலரின் சந்திப்பு கிடைக்கும். குடும்ப நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். 

    கடகம் 

    புண்ணிய காரியங்களில் ஈடுபடும் சிந்தனை அதிகரிக்கும் நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முட்டுக்கட்டைகள் அகலும். அமைதி கூட அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. 

    சிம்மம் 

    வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். 

    கன்னி 

    புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெளியூர்களிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். மனதில் புதுப்புது சிந்தனைகள் தோன்றும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். 

    துலாம் 

    சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். 

    விருச்சகம்

    குதூகலம் அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியன்று வந்து சேரும். கூட்டுத்தொழில் தனித் தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். வி.ஐ.பி.க்களின் வருகை உண்டு. 

    தனுசு 

    ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணவேண்டிய நாள். வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 

    மகரம் 

    நீண்ட நாளையக் கனவு நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள். 

    கும்பம் 

    மனக்குழப்பங்கள் அகலும் நாள். எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொழிலுக்காக எடுத்த புது முயற்சி வெற்றியைத் தேடித்தரும். 

    மீனம் 

    குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். அதிரடியான முடிவுகளால் சில ஆச்சர்யங்கள் நிகழலாம். வீடு, மனை வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இன்றைய நாள் இராசி பலன் 06.06.2014 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top