கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் - TK Copy கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் - TK Copy

  • Latest News

    கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

    கச்சத்தீவைத் திரும்பப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம், எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     

    சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு இலங்கைக்குத் வழங்கப்பட்டமையாகும்.  \தமிழக மீனவர்கள் எவ்வித துன்பங்களும் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும்.

       பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.   இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.   

    சட்டப்பேரவை உறுப்பினர்களான பலர் இதனை ஆதரித்துப் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.   குறித்த தீர்மானத்திற்கு எதிராக எந்த கட்சிகளும் வாக்களிக்காத நிலையில் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top