ஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன ? - TK Copy ஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன ? - TK Copy

  • Latest News

    ஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன ?


    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால்
    இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­கான விசா­ரணைக் குழுவின் விசேட நிபு­ணர்கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சாங்கம் இந்த விட­யத்தில் மாற்று வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது.

    ஆனால், அர­சாங்கம் எவ்­வா­றான மாற்­றுத்­திட்­டங்­களை ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை செயற்­பாட்டில் மேற்­கொள்ள முயற்­சிக்­கின்­றது என்ற விடயம் இது­வரை தெரி­ய­வ­ர­வில்லை. மாறாக திட்­டங்கள் உள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    ஆனால் தற்­போது விசா­ரணைக்குழுவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் விசா­ரணை செயற்­பா­டு­களும் ஆரம்­ப­மா­கப்­போ­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்ற கேள்வி எழு­கின்­றது. அதா­வது அர­சாங்­கத்தின் மாற்­றுத்­திட்டம் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பதும் அது எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்ற விட­யமும் இங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற – ஆரா­யப்­ப­டு­கின்ற விட­ய­மா­க­வுள்­ளது.

    சர்­வ­தேச விட­யத்தில் அர­சாங்கம் வெறு­மனே இருக்­க­வில்லை என்றும் தேவை­யான மாற்­றுத்­திட்­டங்கள் குறித்து ஆராய்ந்­து­வ­ரு­வ­தா­கவும் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போது அதற்­கு­ரிய மாற்­றுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­விக்­கிறார்.

    இந்­நி­லையில், ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் 3 விசேட நிபு­ணர்­களை நிய­மித்­துள்ளார்.

    விசா­ரணைக் குழுவில் மொத்­த­மாக 12 உறுப்­பி­னர்கள் இடம்­பெ­று­கின்ற நிலையில் இந்த மூன்று விசேட நிபு­ணர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். பின்­லாந்தின் முன்னாள் ஜனா­தி­பதி மார்டி அத்­தி­சாரி, நியூ­சி­லாந்தின் உயர்நீதி­மன்ற முன்னாள் நீதியரசர் சில்­வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதி­மன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த விசா­ர­ணைக்­கு­ழுவின் நிபு­ணத்­துவ ஆலோ­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

    விசா­ரணைக் குழுவின் தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டேம் சில்­வியா கார்ட்ரைட் கம்­போ­டி­யாவில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அனைத்­து­லக தீர்ப்­பா­யத்தின் நீதி­பதி பொறுப்­பி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    டேம் சில்­வியா கார்ட்ரைட் இந்த அனைத்­து­லக தீர்ப்­பா­யத்தின், இரண்டு நீதி­ப­தி­களில் ஒரு­வ­ராக செய­லாற்­றி­வந்த நிலை­யி­லேயே அவர் அந்தப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் குழுவை நிய­மித்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவி­பிள்ளை நேர்­மையும், சுயா­தீனத் தன்­மையும், பக்­கச்­சார்­பற்ற நிலை­யையும் கொண்ட சிறந்த நிபு­ணர்­களை ஆலோ­சனைக் குழுவில் நிய­மிக்க கிடைத்­தமை மகிழ்ச்­சியும் பெரு­மி­தமும் அளிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

    இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பொருட்டு, ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக இந்த விசா­ர­ணைக்­குழு நிறு­வப்­பட்­டுள்­ள­துடன் அடுத்­தக்­கட்ட நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

    பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் விசா­ரணைக் குழுவை நவ­நீதம்பிள்ளை எவ்­வாறு நிய­மிக்­கப்­போ­கின்றார் என்று அனை­வரும் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அதா­வது இலங்­கை­யா­னது இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை முற்­றாக நிரா­க­ரித்­தி­ருந்த நிலை­யிலும் விசா­ரணைக் குழு­வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்று கூறி­வந்த நிலை­யிலும் நவி­பிள்ளை எவ்­வாறு குழுவை நிய­மிப்பார் என்­பது கேள்­வி­யாக இருந்து வந்­தது.

    இந்­தியா கூட ஜெனிவா வாக்­கெ­டுப்­பின்­போது பிரே­ர­ணையை ஆத­ரிக்­காமல் நடுநிலை வகித்­தி­ருந்­தது. எவ்­வா­றெ­னினும் தற்­போது விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் விசா­ரணைச் செயற்­பா­டு­களும் ஜுலை மாதத்தில் ஆரம்­பிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

    விசா­ரணைக் குழு வட அமெ­ரிக்க நாடுகள், ஐரோப்­பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடு­க­ளுக்கு விஜ­யங்­களை மேற்­கொண்டு சாட்­சி­யங்­களை திரட்­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்றது. விசா­ரணைக் குழு உறுப்­பி­னர்­களின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்­கான ஆவ­ணப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. 

    வட அமெ­ரிக்க நாடுகள், ஐரோப்­பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடு­க­ளுக்­கான விஜ­யங்கள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்­களில் இடம்­பெறும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது 10 மாதங்கள் விசா­ரணை செயற்­பாட்டு காலப்­ப­கு­தி­யாக அமையும் என்று கூறப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையே விசா­ரணை காலப்­ப­குதி அமைந்­துள்­ளது.

    ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 31 ஆம் திக­தி­யா­கும்­போது விசா­ரணைக் குழுவின் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்து முழு­மை­யான அறிக்கை தயார் செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் அதனை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 28 ஆவது அமர்வில் சமர்ப்­பிக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

    இது தொடர்பில் அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் தலைவர் கலா­நிதி பிர­தீபா மஹா­னாம ஹேவா, விசா­ர­ணை­களை நடத்தி முடித்த பின்னர் விரி­வான அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு 2015 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேர­வையின் 28 ஆவது அமர்­வுக்கு சமர்ப்­பிக்­கப்­படும்.

    அதன் பின்னர் அறிக்­கையை எங்கு சமர்ப்­பிப்­பது என்­ப­தனை மனித உரிமைப் பேரவை தீர்­மா­னிக்கும்'' என்று கூறி­யி­ருந்தார். ஒரு­வேளை இந்த அறிக்கை பாது­காப்புச் சபைக்கு வழங்­கப்­பட்டால் அங்கு எமக்கு சீனாவும் ரஷ்­யாவும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறி­யி­ருந்தார். 

    அத்­துடன், இவ்­வா­றான அழுத்தம் ஒன்றை சமா­ளிப்­ப­தற்­கான வழி குறித்தும் மஹா­னாம ஹேவா இவ்­வாறு கூறு­கின்றார். அதா­வது, கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­ற­வேண்டும். இந்த விட­யத்தில் நாங்கள் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்'' என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

    இந்த செயற்­பாட்டை சிறப்­பாக முன்­னெ­டுத்து தீர்வை அடை­ய­வேண்டும். இவ்­வாறு உள்­ளக செயற்­பாட்டை உரியமுறையில் முன்­னெ­டுத்தால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அறிக்­கையை வலு­வி­ழக்கச் செய்ய முடியும் என்று அவர் அறி­வு­ரையும் கூறி­யி­ருந்தார்.

    ஆனால், அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணை­யையும் விசா­ரணைச் செயற்­பாட்­டையும் முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருந்­தது. பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட தினத்­தன்று உரை­யாற்­றிய இலங்கைப் பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க, விசா­ரணைக் குழு­வி­னரின் பரந்­து­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்று குறிப்­பிட்டார்.

    அத்­துடன், இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணை­யா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் அரை­வா­சிக்கும் குறை­வான உறுப்பு நாடு­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. இது ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் இறை­மையை மீறு­வ­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன், சர்­வ­தேச சட்­டங்­களின் விதி­மு­றைகளை மீறு­வ­தா­கவும் அமைந்­துள்­ளது என்றும் ரவி­நாத ஆரி­ய­சிங்க திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

    அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவா மனித உரிமைப் பேர­வை­யிலும் இலங்கை பாரா­ளு­மன்­றத்­திலும் உரை­யாற்­றி­ய­போது இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்­தி­ருந்தார். அதே­வேளை அமைச்­சர்­க­ளான கெஹெ­லிய ரம்­புக்­வெல, மஹிந்த சம­ர­சிங்க, நிமால் சிறி­பால டி. சில்வா ஆகி­யோரும் பிரே­ர­ணை­யையும் விசா­ர­ணை­யையும் நிரா­க­ரிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.

    இந்­நி­லையில் விசா­ரணைக் குழு­வுக்­கான நிபு­ணர்கள் குழு நிய­ம­னத்­துக்கு அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் வர­வேற்பு வெளி­யிட்­டுள்­ளன. குறிப்­பாக இது குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள அமெ­ரிக்கா ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மை­க­ளுக்­கான விசா­ரணைக் குழு­விற்கு, ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் நவி­பிள்­ளை­யினால் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை வர­வேற்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளன.

    அத்­துடன் நல்­லாட்சி, மனித உரிமை விவ­காரம், நல்­லி­ணக்கம் மற்றும் குற்றச் செயல்­க­ளுக்கு தண்­டனை விதித்தல் ஆகிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நிலு­வை­யாக உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் காத்­தி­ர­மா­னதும் நிலையா­ன­து­மான தீர்வுத் திட்­ட­மொன்றை முன்­வைக்­க­வேண்டும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

    அதே­வேளை நிபு­ணர்கள் நிய­ம­னத்தை வர­வேற்­றுள்ள பிரிட்­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் வில்­லியம் ஹேக் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­மாறும் இலங்­கையை தொடர்ச்­சி­யாக நான் வலி­யு­றுத்­து­கின்றேன் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

    அத்­துடன் அர­சியல் தீர்வு, நல்­லி­ணக்கம், நீதி மற்றும் பொறுப்­புக்­கூறல் போன்­றவை குறித்தும் கவனம் செலுத்­து­மாறும் கோரு­கின்றேன். இந்த விட­யங்­களில் இலங்­கைக்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு பிரிட்டன் தயா­ரா­கவே உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இவ்­வாறு சர்­வ­தே­சத்­தினால் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கின்ற நிலையில் இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் எவ்­வா­றான அணு­கு­மு­றை­மையை கையா­ளப்­போ­கின்­றன என்று பார்க்­க­வேண்டும்.

    இந்­நி­லையில், கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யை­ பொ­றுத்­த­மட்டில் நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டே நிறை­வேற்­றப்­பட்­டது.

    இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணையை அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கொண்­டு­வந்­தி­ருந்­தன. இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் இந்­தியா உள்­ளிட்ட 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன.

    கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருந்த இந்­தியா இவ்­வ­ருடம் நடு­நிலை வகித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். சில வாரங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் ஜெனிவா பிரே­ர­ணைக்கு எதி­ராக பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்த ஆளும் கட்­சியின் எம்.பி. க்கள் அதனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றினர். அதா­வது ஜெனிவா மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்­கையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கக்­கூ­டாது என்று கோரியே இந்த பிரே­ரணை தாக்கல் செய்­யப்­பட்­டது.

    இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 144 வாக்­குகள் பாரா­ளு­மன்­றத்தில் கிடைத்­தன. எதி­ராக 10 வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன. ஜெனிவா பிரே­ர­ணை­யையும் ஐக்­கிய நாடு­களின் விசா­ர­ணை­யையும் அர­சாங்கம் எதிர்ப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதியில் மேற்­கொண்ட முயற்­சி­யாக இதனை குறிப்­பி­டு­கின்­றனர். ஆனால், அதற்கு அப்­பா­லான அர­சாங்­கத்தின் மாற்­றுத்­திட்டம் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பதே தற்­போ­தைய விட­ய­மாகும்.

    குறிப்­பாக, சர்­வ­தேச அழுத்­தங்­களை வலு­வி­ழக்கச் செய்­ய­வேண்­டு­மாயின் உண்­மையில் அரசாங்கம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே யதார்த்தமாகும். இதனை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில் கடந்தகால யுத்த வடுக்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே ஆறுதல் அளிக்க முடியும் என்பதனையும் யாரும் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்காக தமிழ் பேசும் மக்கள் பல தசாப்தங்களாக முயற்சித்துவருகின்றனர். ஆனால், தீர்வுத்திட்டம் என்னவோ தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. 

    எனவே எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அது தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பாதையை திறப்பதாக அமையவேண்டும். மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத் தீர்வுப் பிரச்சினையானது பூகோள அரசியல் சித்து விளையாட்டில் சிக்கிவிடக்கூடாது என்பதில் அனைத்துத் தரப்பினரும் கவனமாக இருக்கவேண்டும்.

    காரணம் கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்த சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. அவ்வாறான நிலைமைகள் இதற்கு பின்னரும் ஏற்பட்டுவிடக்கூடாது. அரசியல் தூரநோக்குடன் தீர்வுத்திட்டத்துக்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும் என்பதனை இந்த இடத்தில் வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும்.

    -ரொபட் அன்ரனி-

    தொடர்புடைய செய்தி

    ஐ.நா, அமெரிக்கா இரு அதிகாரிகள் திடீர் விஜயம் எதற்கு ? 

    சிறிலங்கா ஒத்துழைக்க மறுப்பது குறித்து நவநீதம்பிள்ளை ஆழ்ந்த வருத்தம்



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top