இன்றைய இராசி பலன்
மேஷம்
பூர்வீக சொத்துப்பிரச்சினை அகலும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சரிசெய்யும் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம்
உடன்பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
கடகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிடலாம்.
கன்னி
தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டம் நிறைவேறலாம். மறக்க முடியாத புதிய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.
விருச்சகம்
நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
தனுசு
தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. சாப்பிடக் கூட நேரமில்லாமல் சில வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கும்பம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவும் செலவும் சமமாகும். பிரியமான சிலரைச் சென்று சந்திப்பீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையலாம்.
மீனம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பணத்தை செலவிட நேரிடலாம். ஆரோக்கிய குறைவுகள் படிப்படியாக குணமாகலாம். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தோன்றும்.