2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் II - TK Copy 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் II - TK Copy

  • Latest News

    2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் II


    2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் நேற்றைய தொடர்ச்சி....


    மலே­ரியா நோயி­லி­ருந்து முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்ட நாடொன்­றாக மாறி­யது ஆரம்ப பாட­சா­லை­க­ளுக்கு செல்­கின்ற சிறு­வர்­களின் எண்­ணிக்கை 98 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­துள்ள அதே­வேளை இரண்டாம் நிலைப் பாட­சா­லை­க­ளுக்கு 84 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­துள்­ளது.

    கிரா­மிய வேலை­யின்­மை­யா­னது 7.8 சத­வீ­தத்­தி­லி­ருந்து 4.5 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இளை­ஞர்­க­ளுக்கு மத்­தியில் 18–-30 வய­தெல்­லையில் வேலை­யின்­மை­யா­னது 15.8 சத­வீ­தத்­தி­லி­ருந்து 13.1 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­தது.

    2.30 எவ்­வா­றா­யினும் வரட்சி தொற்­றாத நோய்கள் தர­மான குடிநீர் கிடைக்­கப்­பெ­றாமை மற்றும் துப்­ப­ர­வேற்­பாடு போஷாக்­கின்மை என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­ப­டு­கின்­றமை உள்­ள­டங்­க­லாக வறுமை நிலை தொடர்ந்து காணப்­ப­டு­வ­துடன் வறுமை ஒழிப்­பினை தொடர்ந்து மேற்­கொள்­வ­தற்கும் வேலை­யின்­மை­யினை குறைப்­ப­தற்­கு­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

    3 மெய்ப்­பொ­ரு­ளா­தாரம் - 2014

    3.1 எமது சமு­தா­யத்தின் முது­கெ­லும்­பான நெற்­ப­யிர்ச்­செய்கை கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ஏற்­பட்ட கடும் வரட்சி நிலை­மை­யினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டது. 2013/14 பெரும்­போகச் செய்கை மற்றும் 2014 சிறு­போகம் அத்­துடன் சோளம் உற்­பத்தி பாரி­ய­ளவு நட்­டத்­தினை அடைந்­தது. குடி நீர் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­ட­துடன் கைவி­டப்­பட்ட கிண­றுகள் புன­ர­மைக்­கப்­பட்­டன.

    ஹம்­பாந்­தோட்டை, மொன­ரா­கலை, அநு­ரா­த­புரம், குரு­நாகல், மன்னார், பொல­ன­றுவை மற்றும் வவு­னியா மாவட்­டங்­களில் மேல­திக நீர் சேமிப்பு அள­வினை உரு­வாக்­கு­வ­தற்கு வரட்­சி­யினை சந்­தர்ப்­ப­மாகப் பயன்­ப­டுத்தி பல்­வே­று­பட்ட சிறிய மற்றும் பாரிய நீர்ப்­பா­சன முறை­மைகள் புன­ர­மைக்­கப்­பட்­டன. ரூபா 3000 மில்­லியன் மொத்த செல­வீ­னத்தில் பிர­தான மற்றும் சிறி­ய­ளவு நீர்ப்­பா­சன திட்­டங்கள் 678 புன­ர­மைக்­கப்­பட்­டன. போதி­ய­ளவு உணவு வழங்­க­லினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அரிசி இறக்­கு­மதி தற்­கா­லி­க­மாக திறந்து விடப்­பட்­ட­துடன் சந்­தையில் எதிர்­பா­ராத விலை அதி­க­ரிப்பு தடுக்­கப்­பட்­டது.

    3.2 நெல் உற்­பத்தி வீழ்ச்­சி­ய­டைந்த போதிலும் உளுந்து, பாசிப்­ப­யறு, பெரிய வெங்­காயம், உரு­ளைக்­கி­ழங்கு, பழங்கள் மற்றும் மரக்­க­றி­களின் உற்­பத்தி அதி­க­ரித்­தது. பால், கோழி வளர்ப்பு, மீன்­பிடி மற்றும் முட்டை உற்­பத்­திகள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­றத்­தினை காட்­டின. தெங்கு முக்­கோண வல­யத்தில் ஏற்­பட்ட நீண்ட வரட்­சியின் கார­ண­மாக தெங்கு உற்­பத்தி கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­ட­துடன் சாத­க­மான உற்­பத்திப் போக்­கினை நோக்கி வளர்ச்­சி­ய­டைந்­தது.

    தேயிலை, கறுவா மற்றும் ஏனைய ஏற்­று­மதிப் பயிர்­களின் உற்­பத்தி முன்­னேற்­ற­மொன்­றினை காட்­டி­யது. சலுகை அளிக்­கப்­பட்ட பண்ணை விலைகள், உர­மா­னியம், இறக்­கு­ம­தியின் போதான வரிக்­கட்­ட­மைப்பு, விலை ஸ்திரத்­தன்மை, தர­மான விதைகள் மற்றும் நாற்றுப் பொருட்­க­ளினை வழங்­குதல் சிறந்த களஞ்­சி­யப்­ப­டுத்தல் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தானியச் செய்­கையின் மூலம் எமது விவ­சா­யி­களின் உற்­பத்தி அதி­க­ரிப்­புக்கு உத­வி­யாக இருந்­தன.

    3.3 சுற்­றுலா கைத்­தொ­ழி­லா­னது வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை 1.1 மில்­லி­யனால் அதி­க­ரிக்­கப்­பட்­ட­துடன் உள்­நாட்டு சுற்­றுலா தற்­பொ­ழுது 5.1 மில்­லி­ய­னாக விரி­வ­டைந்து வளர்ச்சிப் போக்­கினை நிலை­யாக பேணி­யது. வெளி­நாட்டு வரு­மானம் செப்­டெம்பர் வரைக்கும் 1.9 பில்­லியன் ஐ. அ. டொல­ராகக் காணப்­பட்­ட­துடன் இவ்­வ­ரு­டத்தில் 2.5 பில்­லியன் ஐ.அ. டொல­ராக அதி­க­ரிக்­கு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. உட்­கட்­ட­மைப்பில் அதி­க­ரித்த முத­லீ­டுகள் கார­ண­மா­கவும் நகர ஆதன அபி­வி­ருத்தி, வீட­மைப்பு, சுற்­றுலா வச­திகள், புதிய தொழிற்­சா­லைகள் மற்றும் ஏனைய வச­தி­ய­ளிப்­பு­களில் உயர்ந்த தனியார் துறை முத­லீ­டுகள் காணப்­பட்­ட­த­னாலும் ஏறக்­கு­றைய 17 சத­வீ­தத்­தினால் வளர்ச்­சி­ய­டைந்த உள்­நாட்டு கம்­ப­னி­க­ளினால் நாட்டின் நிர்­மாணக் கைத்­தொழில் பங்­க­ளிப்பு அதி­க­ரித்­தது.

    3.4 சீமெந்து, உருக்கு, இறப்­ப­ரினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட உற்­பத்திப் பொருட்கள், விவ­சாயம் மற்றும் கைத்­தொழில் இயந்­தி­ரங்கள், உப­க­ர­ணங்கள், உதி­ரிப்­பா­கங்கள், மின் உற்­பத்தி மற்றும் ஊடு­க­டத்தல் இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்கள், கட்­டிடப் பொருட்கள், தள­பாடம் மற்றும் படகு அத்­துடன் கப்பற் கட்டற் தொழில் போன்ற கைத்­தொழிற் பொருட்­களின் இறக்­கு­மதி அதி­க­ரித்­தது. இதே போன்று உணவு தயா­ரிப்பு, சீனி மற்றும் மரக்­கறி எண்ணெய் தயா­ரிப்பு, பாற்­பொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்­பத்தி, புதுப்­பிக்க கூடிய சக்திக் கைத்­தொழில் என்­ப­வற்றில் புதிய முத­லீ­டு­களின் அதி­க­ரிப்பும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

    இச்­செ­யற்­பா­டு­களில் பெரு­ம்பா­லா­னவை நடுத்­தர காலத்தில் ஏற்­று­மதிச் சந்­தை­க­ளுக்கு மாற்றக் கூடிய ஆற்­ற­லினைக் கொண்­டுள்­ளன. வெளி­நாட்டு முத­லீ­டா­னது ஏறக்­கு­றைய 2 மில்­லியன் ஐ. அ. டொல­ராகக் காணப்­ப­டு­கின்­றது. இன்று நள்­ளி­ர­வி­லி­ருந்து அமு­லுக்கு வரு­கின்ற சுங்­கத்­தீர்­வைகள் அத்­த­கைய பெறு­மதி உரு­வாக்கும் இறக்­கு­ம­திக்கு போட்­டி­யான கைத்­தொ­ழில்­களின் விரி­வாக்­கத்­திற்கு வச­தி­ய­ளிக்கும் இறக்­கு­மதிப் போட்டி கைத்­தொ­ழில்­க­ளினை ஊக்­கு­விப்­ப­தற்கு இறக்­கு­ம­திகள் மற்றும் ஏற்­று­ம­திகள் மீது தர நிர்­ண­யங்கள் அமுல்­ப­டுத்­தப்­படும். வெளி­நாட்டு வர்த்­த­கத்தில் நியா­ய­மான நடை­மு­றை­களை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தரம் குறைந்த பொருட்­க­ளுக்­கெ­தி­ரான சட்­ட­வாக்­க­மொன்று மிக விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.

    3.5 ஏற்­று­மதிக் கைத்­தொ­ழில்கள் 12 சத­வீத வளர்ச்­சி­யினை காட்­டி­யது. ஆடைக்­கைத்­தொழில் 15 சத­வீத வளர்ச்­சி­யினைக் காட்­டி­ய­துடன் இவ்­வ­ரு­டத்தில் 5000 மில்­லியன் ஐ.அ. டொலர் ஏற்­று­மதி சம்­பாத்­தி­யத்­தினை பெற்­றுக்­கொள்ளும் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. பெறு­மதி சேர்க்­கப்­பட்ட தேயிலை, இறப்பர் மற்றும் கறுவா உற்­பத்­திகள் ஏற்­று­மதி வரு­மா­னத்­தினை 3000 மில்­லியன் ஐ.அ. டொல­ராக அதி­க­ரிக்கச் செய்­தன. மென்­பொருள் இரத்­தி­னக்­கற்கள் மற்றும் ஆப­ரணம் கைத்­தறிப் பொருட்கள் மற்றும் இனிப்புப் பண்ட கைத்­தொ­ழில்கள் அதி­க­ரிப்­பினை காட்­டின. ஏற்­று­மதி சம்­பாத்­தி­யங்கள் இவ்­வ­ரு­டத்தில் 11500 மில்­லியன் ஐ.அ. டொலர்­க­ளாக இருக்­கு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

    3.6 திறன் வகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பினை அதி­க­ரித்­த­துடன் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக சென்­ற­வர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­தது. இவ்­வ­ரு­டத்தில் வெளி­நாட்டு ஊழிய வரு­மானம் ஏறக்­கு­றைய 7000 மில்­லியன் ஐ.அ. டொலர்­க­ளாக காணப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

    3.7 அர­சாங்கம் விலைகள் மற்றும் உணவு வழங்­கலில் ஸ்திரத்­தன்­மை­யினை பேணி­யுள்­ளது. வரு­டாந்த சரா­சரி பண­வீக்கம் 4.2 சத­வீ­த­மாகக் காணப்­பட்­ட­துடன் வரட்சி காணப்­பட்ட போதிலும் இவ்­வ­ரு­டத்தின் பண வீக்­கத்­தினை நடுத்­தர ஒற்றை இலக்க பண வீக்­க­மாக பாது­காப்­ப­தற்கும் எம்மால் முடி­யு­மாக இருந்­தது. நாண­ய­மாற்று விகிதம் ஒப்­பீட்டு ரீதியில் வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு சரா­சரி 10 சத­வீ­த­மாகக் காணப்­பட்­டது. அத்­துடன் நாம் விவ­சா­யி­க­ளுக்கு உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­காயம், மிளகாய், பாசிப்­ப­யறு, பசும்பால் என்­ப­வற்­றிற்­கான உத்­த­ர­வாத விலை­யினை அறி­மு­கப்­ப­டுத்­தினோம். இவை எமது விவ­சா­யி­களின் புதிய வரு­மான மூலங்­க­ளாகக் காணப்­பட்­ட­துடன் அவர்­களை பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பயிர்ச்­செய்­கையில் ஈடு­படச் செய்­தது. பொரு­ளா­தாரம் மற்றும் அர­சிறை நட­வ­டிக்­கைகள் பற்­றிய விப­ரங்­க­ளையும் தக­வ­லையும் வழங்­கு­கின்ற இலங்கை மத்­திய வங்கி மற்றும் நிதி திட்­ட­மிடல் அமைச்சின் அறிக்­கை­களை இங்கு நான் சமர்ப்­பிக்­கின்றேன்.

    04. 2020 மற்றும் அதற்­க­டுத்த அபி­வி­ருத்தி இலக்­குகள்

    4.1 2005 இல் 80 சத­வீ­த­மாகக் காணப்­பட்ட வேலை­வாய்ப்பு மட்டம் 2014 இல் 95 சத­வீ­தத்­தினை அடைந்­துள்­ள­துடன் 2020 இல் எமது ஊழிய இலக்­கா­னது ஊழி­யப்­ப­டையில் 97 சத­வீ­த­மாக காணப்­படும் வகையில் நிலை­யா­ன­தாக இருக்கும். எமது நோக்­கா­னது க.பொ.த. சாதா­ரண தர மற்றும் உயர்­த­ரத்­தினை அடைந்த மாண­வர்­களை பட்­டப்­ப­டிப்­பு­க­ளுக்­கான உயர் கல்­வியில் அல்­லது எமது ஊழிய உபா­யத்தில் குறிப்­பீடு செய்­யப்­பட்ட இலக்­காக காணப்­படும் எமது ஊழியப் படையின் அறிவு மற்றும் ஆற்­றல்­களை வாழ்க்கைத் தொழிற் கல்­வி­யின்பால் ஈடு­ப­டுத்­து­வ­தாகும். இளைஞர் வேலை­வாய்ப்­பினை 95 சத­வீ­த­மாக பேணு­வது எமது ஊழிய உபா­யத்தின் விசேட இலக்­கொன்­றாகும்.

    4.2 முன் பள்­ளிக்­கூட சிறுவர் அபி­வி­ருத்தி ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக்­கல்­வியில் 100 சத­வீத பாட­சாலை அனு­மதி, 100 சத­வீத எழுத்­த­றிவு மற்றும் 90 சத­வீத கணனி அறிவு, ஆங்­கிலம், கணிதம் மற்றும் விஞ்­ஞா­னத்தில் அறிவு அத்­துடன் அடிப்­படை தொழிற்­ப­யிற்சி ஆற்­றல்கள் மற்றும் விளை­யாட்­டுத்­து­றையில் சிறு­வர்­களின் ஈடு­பாடு என்­பன எமது பொதுக் கல்­விக்­கான இலக்­கு­க­ளாக இருக்கும். மனித வளங்கள் துறையில் ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்தில் உயர்ந்த நிலை­யினை நோக்கி செல்­வதே 2020 இல் கல்­வியில் எமது முக்­கிய இலக்­காகும்.

    அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­களின் சுகா­தார தரத்­திற்கு சம­மான சுகா­தார தரத்­தினை விருத்தி செய்­வதே சுகா­தார துறையின் இலக்­காகும். இந்த வகையில் எவ்­வித தாய் - சேய் இறப்பும் இடம்­பெ­றாத நாடொன்­றாக மாற்­று­வ­தற்கு எமது சிறு­வர்கள் மற்றும் தாய்­மாரின் சுகா­தார பரா­ம­ரிப்­பினை அதி உயர்ந்த மட்­டத்தில் பேணும் வகையில் விருத்தி செய்­வதும் எமது இலக்­காகும். சிறு­வர்­க­ளுக்கு மத்­தியில் போஷாக்கு குறை­பாட்­டினை இல்­லா­தொ­ழிப்­பது உயர்ந்த முன்­னு­ரிமை வழங்க வேண்­டிய விட­ய­மொன்­றாகும். அதேபோன்று எமது மக்­களை தொற்று மற்றும் தொற்றா நோய்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான முயற்­சிகள் இரட்­டிப்­பாக்­கப்­ப­டு­வ­துடன் ஆயுட்­கால எதிர்­பார்க்கை 2020 அளவில் 80 வரு­டங்­களை விட கூடு­த­லாக அதிகரிப்பதாகும்.

    4.3 2014 வரவு செல­வுத்­திட்­டத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­ட­வாறு எமது சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்­காக விஞ்­ஞான அறி­வினை ஊக்­கு­விப்­ப­தற்கும் தேசிய விஞ்­ஞான நிலை­ய­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அர­சாங்கம் மற்றும் தனியார் துறை ஒத்­து­ழைப்­பா­னது உயர் தொழில்­நுட்ப மற்றும் ஆராய்ச்சி தயா­ரிப்புத் துறையில் நானோ தொழில்­நுட்­பத்­தினை ஊக்­கு­விப்­ப­தற்­காக விஞ்­ஞானப் பூங்கா ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு கடு­மை­யாக உழைத்­துள்­ளது.

    உயர் விஞ்­ஞா­னத்தில் விசேட ஆராய்ச்சி மற்றும் தொழில்­நுட்ப அபி­வி­ருத்­தி­யினை ஊக்­கு­விப்­ப­தற்கு அணு­சக்தி அதி­கார சபை­யொன்று உரு­வாக்­கப்­படும். கணக்­கீடு, வர்த்­தகம், நிதி, சட்டம், மருத்­துவம், தகவல் தொழில்­நுட்பம், பொறி­யியல், கட்­டி­டக்­கலை போன்ற துறை­களில் ஈடு­பட்­டுள்ள உயர் தொழில் புரி­நர்கள் பலர் நியா­ய­மா­ன­ளவு அதி­க­ரித்­துள்­ளனர். 2020 இல் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தி­யினை 100 000 ஆக அதிகரிப்பதும் எமது பல்கலைக்கழகங்களை ஆசியாவில் 30 இற்குள் இடம்பெறச் செய்வதும் எமது இலக்காகும்.

    4.4 விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி செயற்பாடு­களுக்கு வசதியளிப்பதுடன் மருந்துப் பொருட்கள் ஒழுங்கு விதியினை உருவாக்குவதற்குமான தேசிய மருந்துக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திக்கு சமாந்தரமாக மருத்துவ பட்டப்பின் படிப்பு பாடப் பரப்பினை விரிவாக்குவதற்கும் மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்புகளுக்கான அனுமதி­யினை இரட்டிப்பாக்குவதற்கும் நாம் முன்மொழிந்துள்ளோம்.

    மருத்­துவப் பட்­டப்பின் படிப்பு நிறு­வ­க­மா­னது பட்­டப்பின் படிப்பு ஆராய்ச்சி மற்றும் உயர் கற்­கை­க­ளுக்­காக அரு­கா­மை­யி­லுள்ள போதனா வைத்­தி­ய­சா­லை­க­ளுடன் இணைக்­கப்­ப­டு­வ­துடன் எமது சமூகம் எதிர்­நோக்­கு­கின்ற சம­கால நோய்­க­ளான சிறு­நீ­ரக நோய், போஷாக்கு குறை­பாடு என்­ப­வற்­றிற்கு சிகிச்சை அளிக்­கக்­கூ­டிய மருத்­துவ விசேட நிபு­ணர்­களை அதி­க­ரிக்கும் வகையில் அடுத்து 2 வரு­டங்­க­ளுக்குள் சகல வச­தி­க­ளையும் கொண்ட நிறு­வ­ன­மாக மாற்­றப்­படும்.

    4.5. ஏறக்­கு­றைய ஒரு பில்­லியன் ஐ.அ. டொலர்­களை வெளி­நாட்டு வரு­மா­ன­மாக சம்­பா­திக்­கு­மெ­னவும் ஏறக்­கு­றைய 100,000 வேலை வாய்ப்­பினை உரு­வாக்­கு­மெ­னவும் எதிர்­பார்க்­கப்­பட்­டுள்ள தகவல் தொழில்­நுட்ப துறை 2020 இல் இலங்­கை­யினை உலகில் தகவல் தொழில்­நுட்ப துறைக்கு பெயர் போன இடங்­களில் ஒன்­றாக மாற்­று­வ­துடன் இளை­ஞர்­க­ளுக்கு பிர­தான வேலை வாய்ப்­பினை பெற்­றுக்­கொ­டுக்கும் துறை­யா­கவும் 5 பில்­லியன் ஐ.அ. டொல­ராக வெளி­நாட்டு வரு­மா­னத்­தினை அதி­க­ரிப்­பதும் எமது இலக்­காகும். ஹம்­பாந்­தோட்­டை­யி­லுள்ள தகவல் தொழில்­நுட்ப வல­ய­மா­னது சர்­வ­தேச தகவல் தொழில்­நுட்ப சேவை­யினை வழங்­கு­வதன் மூலம் இலங்­கை­யினை தென்­னா­சி­யாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்­நுட்ப மைய­மாக கரு­து­ம­ள­விற்கு மாற்­றப்­படும்.

    4.6. பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது சாதா­ரண மற்றும் குறைந்­த­ளவு பொரு­ளா­தார நன்­மை­ய­டை­யு­னர்­க­ளி­னதும் வாழ்க்கைத் தரத்­தி­னையும் வரு­மா­னத்­தி­னையும் மேம்­ப­டுத்­தாத வரை அப்­பொ­ரு­ளா­தார வளர்ச்­சியில் எவ்­வித அர்த்­தமும் இல்லை என்­ப­தனை இப்­பா­ரா­ளு­மன்­றத்­திலும் ஏனைய சர்­வ­தேச மாநா­டு­க­ளிலும் நான் குறிப்­பிட்­டுள்ளேன். எனவே, குறை வரு­மானம் பெறும் மக்­களின் வரு­மானம் மற்றும் வாழ்­வா­தார வாய்ப்­புக்­க­ளினை அதி­க­ரிப்­பது எமது இலக்­காகும்.

    அவர்­க­ளது வரு­மா­னத்­தினை உயர்த்­து­வது மாத்­திரம் எமது நோக்­க­மல்ல. ஆனால், சூழல் தொடர்­பான சவால்கள், தொற்­றாத நோய்கள், அங்­க­வீனம் போன்ற அவர்­க­ளது பாதிப்­புக்­க­ளையும் இல்­லா­தொ­ழிப்­ப­துடன் தர­மான குடி­நீ­ரினைப் பெற்றுக் கொள்ளல், மரி­யா­தை­யான வீடு மற்றும் துப்­புர­வேற்­பாடு, பாட­சாலை மற்றும் வைத்­தி­ய­சாலை வச­தி­களை இல­கு­வாக அடைந்து கொள்ளல் போன்­ற­வற்­றினை முன்­னேற்­று­வ­து­மாகும்.

    4.7. 2020 இல் நாம் எமது ஏற்­று­மதி இலக்­கு­களை 20 பில்­லியன் ஐ.அ. டொல­ராக திட்­ட­மிட்­டுள்ளோம். உயர் பெறு­மதி தேயிலை, ஆடை மற்றும் கைத்­தறி உற்­பத்­திகள் மற்றும் இறப்பர் பொருட்கள் என்­ப­ன­வற்றின் ஏற்­று­மதி சம்­பாத்­தி­யத்­தினை 2020 இல் 15 பில்­லியன் ஐ.அ. டொல­ராக அதி­க­ரிப்­பதும் எமது நோக்­க­மாகும். தேயிலை, ஆடை, கறுவா ஏற்­று­ம­தியில் இலங்­கை­யினை உல­கி­லுள்ள உயர்­தர பொருட்­களை உற்­பத்தி செய்யும் முதல் 10 நாடு­களில் ஒன்­றாக 2020 இல் மாற்­று­வதும் எமது நோக்­க­மாகும். இயற்கை இறப்பர், கறுவா மற்றும் வாசனைத் திர­வி­யங்­களின் ஏற்­று­மதி உயர்­தரம் கொண்­ட­தாக பேணப்­ப­டு­வ­துடன் அபி­வி­ருத்­தியில் எமது சுற்­றாடல் மற்றும் உயி­ரியல் பல்­வ­கைத்­தன்மை அக்­க­றை­யினை ஊக்­கு­விப்­ப­து­மாகும். இலங்கை கறு­வா­வினை இட அமைவு அடை­யா­ளத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட குறிப்­பீடு செய்­யப்­பட்ட உற்­பத்­தி­யொன்­றாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு உலக வர்த்­தக அமைப்­பிடம் நாம் கோரிக்கை விடுத்­துள்ளோம்.

    எமது மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சிறு­பற்று நில உட­மை­யா­ளர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர் என்ற வகையில் பரந்த அடிப்­ப­டை­யி­லான அபி­வி­ருத்­தியின் நன்­மை­யினை அவர்கள் பெற முடி­யு­மா­க­வுள்­ளது. பழங்கள், மரக்­க­றிகள், கீரை மற்றும் கோழி வளர்ப்பு என்­ப­வற்­றினை ஏற்­று­மதிச் செயற்­பா­டு­க­ளா­கவும் எமது உற்­பத்­தி­யா­ளர்கள் சர்­வ­தேச தரா­த­ரங்­களை ஈடு செய்யக் கூடிய வகையில் இவ்­வுற்­பத்­தி­களை அபி­வி­ருத்தி செய்யும் வகை­யிலும் ஊக்­கு­விப்­பதும் எமது விருப்­ப­மாகும். அன்­னாசி, மாங்காய், பப்­பாசி, வாழைப்­பழம், ட்ரகன் பழம் மற்றும் ஸ்ரோபரி என்­ப­வற்றின் ஏற்­று­மதி 2020 இல் 500 மில்­லியன் ஐ.அ. டொலர்­க­ளாக காணப்­ப­டு­மென இலக்­கி­டப்­பட்­டுள்­ளது.

    4.8. இலங்கை கனிய மணல், கிறபைட், இல்­மனைட் மற்றும் இரத்­தி­னக்கல் போன்ற உயர் பெறு­ம­தி­யு­டைய பொருட்­களின் ஏற்­று­ம­தி­யிலும் சிறந்து விளங்­கு­கின்­றது. எனவே, இந்த பெறு­ம­தி­யான இயற்கை வளங்கள் உள்­நாட்டில் முழு­மை­யான பெறு­மதி சேர்ப்­புடன் தயா­ரிப்பு கைத்­தொ­ழி­லி­லி­ருந்து சிறந்த ஏற்­று­மதி வரு­மா­னத்­தினை பாது­காக்கும் வகையில் முழு­மை­யான சுற்­றாடல் விதி­க­ளுக்கு உடன்­பட்டு ஏற்­று­மதி செய்­யப்­ப­டுதல் வேண்டும். கப்பல் மற்றும் படகு கட்­டுதல், இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களில் ஏற்­று­மதிச் செய­லாற்­று­கை­யா­னது 2020 இல் 20 பில்­லியன் ஐ.அ. டொலர்­களை விட அதி­க­மான ஏற்­று­ம­தி­களை தயா­ரித்த பெறு­ம­தி­யினை அதி­க­ரிக்கும் வகையில் உயர் பொறி­யியல் அந்­தஸ்­து­டைய கைத்­தொ­ழி­லாக வளர வேண்­டி­யுள்­ளது.

    முன்­மொ­ழி­வுகள் 1.

     2015– -17 நடுத்­தர கால வரவு செல­வுத்­திட்ட வேலைச்­சட்­ட­கத்­திற்குள் 2015 ஆம் ஆண்­டிற்­கான வரவு செல­வுத்­திட்ட முன்­மொ­ழி­வு­க­ளையும் அர­சாங்க நிதி அபி­வி­ருத்தி, மக்­களின் நலன்­புரி போன்­ற­வற்­றினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சிறை கொள்­கை­யினை அர­சாங்கம் எவ்­வாறு மறு­சீ­ர­மைப்புச் செய்யும் என்­ப­த­னையும் இங்கு குறிப்­பி­டு­வ­தற்கு விரும்­பு­கின்றேன்.

    2. அர­சாங்க வரு­மானம்

    2.1 அர­சாங்க சேவைகள் நலன்­புரி நிகழ்ச்­சித்­திட்­டங்கள், பொது முத­லீ­டு­களை அதி­க­ளவில் ஏற்­பாடு செய்ய வேண்­டு­மென்ற அர­சாங்­கத்தின் கடப்­பாடு அதி­க­ரித்­துள்­ளது என்ற வகையில் அர­சாங்கம் வரு­மானம் தேடு­வ­தற்­கான முயற்­சி­களை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இறக்­கு­ம­தி­க­ளின்­போது விதிக்­கப்­படும் அனைத்­து­வி­த­மான வரி­க­ளுக்குப் பக­ர­மாக மோட்டார் வாக­னங்­களின் இறக்­கு­மதி மீதான உற்­பத்தி (விசேட ஏற்­பா­டுகள்) வரி­யினை விதிப்­ப­னவு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.

    இந்த இல­கு­ப­டுத்­தப்­பட்ட வரி விதிப்­ப­ன­வா­னது ரூபா 5000 மில்­லியன் மேல­திக வரு­மா­னத்­தினை பெற்­றுத்­தரும் சுப்பர் மார்க்கெட் அள­வி­லான சில்­லறை வியா­பா­ரங்கள் மீது விதிக்­கப்­படும் பெறு­மதி சேர் வரி மற்றும் தேச கட்­டு­மான வரிக்­கான வரி விலக்­க­ளிப்பு எல்­லை­யினை காலாண்டு ஒன்­றிற்கு ரூபா 100 மில்­லி­ய­னாக நிர்­ண­யிக்கும் அதே­வேளை சிறிய வியா­பார முயற்­சி­க­ளுக்கு வரி விலக்­க­ளிப்­பினை வழங்­கு­வ­தற்­காக பெறு­மதி சேர் வரி மற்றும் தேசக்­கட்­டு­மான வரிக்­கான விலக்­க­ளிப்பு மட்­டத்­தினை வரு­ட­மொன்­றிற்கு ரூபா 15 மில்­லி­ய­னாக அதி­க­ரிப்­ப­தற்கு முன்­மொ­ழி­கின்றேன்.

    சிக­ரெட்­டுக்கள், மது­பா­னங்கள் மீதான மது­வரி 2015 இல் மேல­திக வரு­மானம் ரூபா 14000 மில்­லி­ய­னாக காணப்­படும் வகையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சூதாட்ட நிலை­யங்­க­ளுக்­கான அனு­மதிக் கட்­ட­ணத்தை ஆளொ­ரு­வ­ருக்கு 100 அமெ­ரிக்க டொல­ராக விதிப்­ப­தற்கும் மேல­திக வரு­மா­ன­மாக ரூபா 2500 மில்­லி­யனை பெற்­றுக்­கொள்ளும் வகையில் சூதாட்ட அற­வீட்­டினை 10 சத­வீ­த­மாக அதி­க­ரிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.

    2.2 அர­சாங்­கத்­திற்கு சேர வேண்­டிய வரி வரு­மானம் பிணக்­கு­க­ளினால் தாம­த­மாதல் அல்­லது அத்­த­கைய கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­ப­டாமல் தவிர்க்­கப்­ப­டு­வது வழக்­கா­றாக மாறி வந்­துள்­ளது. எனவே அனை­வரும் நிய­திச்­சட்ட ஒழுங்­கு­களை பின்­பற்­று­வ­தற்கு வச­தி­ய­ளிக்கும் வகையில் 2010 இலி­ருந்து தற்­பொ­ழுது வரை செலுத்­தப்­ப­டாது நிலு­வை­யி­லுள்ள வரி­களை செலுத்­து­வ­தற்கும் 2014 மார்ச் 31 ஆந் திகதி வரைக்­கு­மான சேம­லாப நிதிய கொடுப்­ப­ன­வு­களை மேற்­கொள்­வ­தற்கும் முடி­யு­மான வகையில் 6 சத­வீத வட்­டியில் 5 வருட கடன் வச­தி­யொன்­றினை வங்­கி­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பாட்­டினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.

    இந்­ந­ட­வ­டிக்­கை­யினால் நிலு­வை­யா­க­வுள்ள ரூபா 40 000 மில்­லி­யனை அறவி­டு­வ­தற்கு முடி­யு­மென நான் எதிர்­பார்க்­கின்றேன். நிலு­வை­யா­க­வுள்ள வரி மற்றும் ஊழியர் சேம­லாப நிதியக் கொடுப்­ப­ன­வு­களை மேற்­கொள்­வ­தற்கு இவ்­வ­ச­தி­யினைப் பயன்­ப­டுத்­து­மாறு நீதித்­துறை வரித் திணைக்­க­ளங்கள் மற்றும் நிலுவை வரி­களை செலுத்­தா­தி­ருப்­ப­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

    2.3 ஊழி­யர்கள் மற்றும் உயர்­தொழில் புரி­நர்­களின் சுமை­யினைக் குறைப்­ப­தற்கு உழைக்கும் பொழுது செலுத்தும் வரி விகி­தத்­தினை 16 சத­வீ­த­மாக நிர்­ண­யிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். பெறு­மதி சேர் வரி­யினை 11 சத­வீ­த­மாக குறைப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன்.

    2.4 அரச மற்றும் தனியார் காணி­களை வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு மாற்­று­வ­தனை மட்­டுப்­ப­டுத்­து­கின்ற சட்­டங்­களை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. புதிய உட்­கட்­ட­மைப்­பாக மாற்­றப்­ப­டு­கின்ற காணி­களின் நீண்ட கால பெறு­ம­தி­யினை பாது­காப்­ப­தற்கு குத்­தகை வரி­களை செலுத்­து­வதன் மூலம் குத்­தகை அடிப்­ப­டையில் மாத்­திரம் வெளி­நாட்­ட­வர்கள் காணி­களை பெற்றுக் கொள்­வ­தற்கு முடியும்.

    இந்த வகையில் புதிய சட்­டத்தின் கீழ் காணி குத்­தகை மீதான ஏனைய ஏற்­பா­டு­க­ளுடன் 7.5 அல்­லது 15 சத­வீத வரி­யினை விதிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். அடுத்த வரு­டத்தில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு காணி பரா­தீ­னப்­ப­டுத்தல் வரி மூல­மாக ரூபா 2000 மில்­லி­யனை பெற முடி­யு­மென எதிர்­பார்க்­கின்றேன். சட்ட விரோத காணி கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்­காக உள்­நாட்டு பெயர்­க­ளையும் கம்­ப­னி­க­ளையும் வெளி­நாட்­ட­வர்கள் பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கு வெளி­நாட்டு செலா­வணிக் கட்­டுப்­பாட்டு ஒழுங்கு விதி­களை விதிப்­ப­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். அர­சாங்க நிதி முகா­மைத்­து­வத்தில் சிறந்த கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கு செலவீன மற்றும் ஏனைய அரசாங்க துறை நிறுவனங்களினது செலவீனம் தவிர்ந்த அனைத்து மேலதிக நிதிகளையும் மாற்றம் செய்யும் வகையில் நிதிச் சட்டத்தினை திருத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    2.5 வரி நிர்­வா­கத்­தினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அனைத்து கொடுக்கல் வாங்­கல்­க­ளையும் இனங்­காணல் இலக்­க­மொன்­றினைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனைத்து தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களும் இணைக்­கப்­படும் வகையில் உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் தற்­பொ­ழுது கணணி மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வரிக் கொடுப்­ப­ன­வு­களை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக வருமான வரி கொடுப்பனவுகள் மற்றும் ஏற்றுமதிகள் இறக்­கு­மதிக் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான வரிப்­ப­தி­வினை நாளை­யி­லி­ருந்து இணைய வலை­ய­மைப்பு மூல­மாக மேற்­கொள்­ளு­மாறு நான் வேண்­டுகோள் விடுக்­கின்றேன்.

    03. அரச வியா­பார தொழில்­மு­யற்­சி­ களை வலுப்­ப­டுத்தல் 

    3.1 இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் அதன் நட்­டங்­களை கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் வங்­கி­க­ளுக்கு செலுத்த வேண்­டி­யி­ருந்த கடன்­க­ளையும் குறைத்­துள்­ளது. அண்­மையில் பெற்றோல் 5 ரூபா­வி­னாலும் டீசல் லீற்­ற­ரொன்று 3 ரூபா­வி­னாலும் மண்­ணெண்ணெய் ரூபா 20 இனாலும் விலை குறைக்­கப்­பட்­டமை அதன் நிதி நிலை­மைகள் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ள­தனை காட்­டு­கின்­றது. 

    எனவே அர­சாங்கம் அதன் படு­க­ட­னான ரூபா 150 பில்­லி­யனை குழாய் வலை­ய­மைப்பு களஞ்­சி­யப்­ப­டுத்தல் வச­திகள் மற்றும் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆற்­ற­லினை 1,500 மெற்றிக் தொன்­க­ளாக விரி­வாக்­குதல் போன்­ற­வற்­றிற்கு வச­தி­ய­ளிக்கும் வகையில் பங்­கு­க­ளா­கவும் உத்­த­ர­வா­தங்­க­ளா­கவும் மாற்­ற­வுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்­தினால் இந்­திய கம்­ப­னிக்கு விற்­பனை செய்­யப்­பட்ட திரு­கோ­ண­மலை எண்ணெய் தாங்கி பண்­ணையின் கட்­டுப்­பாட்­டினை தன்­ன­கப்­ப­டுத்­து­வ­தற்கும் களஞ்­சி­யப்­ப­டுத்தல் வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் துணை கம்­ப­னி­யொன்­றினை உரு­வாக்கும். 

    3.2 நீர் வழங்கல் சபையின் தொழிற்­பாட்டு இலா­பங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் அதன் சொந்த கருத்­திட்ட நிதி­ய­ளிப்பு ஏற்­பா­டு­க­ளுக்­கான சேவை­யா­கவும் திறை­சே­ரிக்கு செலுத்த வேண்­டி­யுள்ள முன்­னைய கடன்கள் மற்றும் வட்­டிக்­கொ­டுப்­ப­ன­வான ரூபா 60 பில்­லி­யனை அர­சாங்க பங்­காக மாற்­று­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 25 அல­குகள் வரைக்­கு­மான வீட்­டுப்­பா­வனை நீர்க்­கட்­ட­ணத்­தினை 10 சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    எனது கடந்த வருட வரவு செல­வுத்­திட்ட முன்­மொ­ழி­வினை தொடர்ந்து சமு­தாய நீர் வழங்கல் திட்­டங்­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கு­மாக தேசிய சமு­தாய நீர்­வ­ழங்கல் திணைக்­க­ள­மொன்று தாபிக்­கப்­பட்­டது. சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு விசேட முக்­கி­யத்­துவம் வழங்கி இத்­தி­ணைக்­க­ளத்தின் கீழ் சமு­தாய நீர் வழங்கல் திட்­டங்­களை புன­ர­மைப்­ப­தற்கும் புதிய திட்­டங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் ரூபா 750 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    3.3 கிரா­மிய போக்­கு­வ­ரத்து சேவை­களை முன்­னேற்­று­வ­தற்­கான வரவு செல­வுத்­திட்ட முன்­மொ­ழி­வு­களை தொடர்ந்து இவ்­வ­ருடம் 400 சிறிய பேருந்­து­களை சேவைக்­க­மர்த்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கிரா­மிய சேவை­களை விரி­வாக்­கு­வ­தற்கு மேலும் 500 சிறிய பேருந்­து­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் பேருந்து தொகு­தி­யினை மேலும் 2000 பேருந்­து­க­ளினால் அதி­க­ரிக்கும் நோக்கில் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு அர­சாங்க முத­லீ­டாக ரூபா 1000 மில்­லியன் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

    அர­சாங்க சேவை சம்­பளக் கட்­ட­மைப்­பினைப் பெறு­கின்ற ஊழி­யர்­களின் ஆகக்­கு­றைந்த சம்­ப­ளங்­களை ஒத்­த­தாக இ.போ.சபை ஊழி­யர்­க­ளது சம்­ப­ளங்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இரத்­ம­லானை, திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம், பலாலி, மட்­டக்­க­ளப்பு போன்ற தேசிய விமான நிலை­யங்­களை புன­ர­மைப்­ப­தற்கும் பாதைப்­போக்­கு­வ­ரத்­தினை இல­கு­ப­டுத்தி உள்­நாட்டு போக்­கு­வ­ரத்து மற்றும் சுற்­று­லா­வினை ஊக்­கு­விக்கும் வகையில் கண்டி மற்றும் நுவ­ரெ­லி­யாவில் புதிய விமான நிலை­யங்­களை உரு­வாக்­கு­வ­தற்கும் 2015 -– 17 இன்­போது ரூபா 10 பில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    3.4 அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான குரு­நாகல் மற்றும் பெருந்­தோட்ட கம்­ப­னிகள் சிறந்த முறையில் செய­லாற்­றி­யுள்­ள­துடன் திறை­சே­ரிக்­கான பங்­கி­லா­பங்­க­ளையும் செலுத்­தி­யுள்­ளன. இந்த வகையில் ரூபா 1000 மில்­லியன் மூல­தன பங்­க­ளிப்­புடன் மக்கள் தோட்ட அபி­வி­ருத்திச் சபை மற்றும் இலங்கை பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளுக்­கான அனைத்து காணி­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு தனி­யான அரச உடமை பெருந்­தோட்ட கம்­ப­னி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    அரச நிர்­மாண கம்­ப­னி­க­ளினை ஸ்திரப்­ப­டுத்தும் வகையில் அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­பனம், அரச பொறி­யியல் உசா­வுகைப் பணி­யகம் மற்றும் அரச அபி­வி­ருத்தி நிர்­மா­ணக்­கம்­பனி என்­ப­வற்­றிற்கு மூல­தன பங்­க­ளிப்­பினை வழங்­கு­வ­தற்கு ரூபா 3000 மில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். மது­பானம் தயா­ரிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட ஹிங்­கு­றானை மற்றும் பெல­வத்தை சீனி பெருந்­தோட்ட கைத்­தொ­ழி­லா­னது கைவி­டப்­பட்­ட­துடன் 2012 இல் மீண்டும் அர­சாங்­கத்­தினால் பொறுப்­பேற்­கப்­பட்டு சீனி உற்­பத்­தி­யினை அதி­க­ரிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள ஏறக்­கு­றைய 25000 குடும்பங்களின் வாழ்வாதார சம்பாத்தியத்தினை முன்னேற்றுவதற்கு உதவ முடியும். எனவே 2015 -– 16 காலப்பகுதியில் இலங்கை சீனிக் கம்பனியின் கீழ் கந்தளாய், ஹிங்குறான மற்றும் பெலவத்தை ஆகிய இடங்களில் நவீன சீனி தயாரிப்பு தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் சிறுபற்று நில பெருந்தோட்ட அபிவிருத்திக்காகவும் ரூபா 5000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன். கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதனை அதிகரிப்பதற்கு ஊக்குவிப்பு வழங்கும் வகையில் கரும்புக்கான பண்ணைக் கொள்வனவு விலைகளை மெற்றிக்தொன் 4500 ரூபாவாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    04. வங்­கித்­தொழில் மற்றும் நிதி நிறு­வ­னங்­களை ஸ்திரப்­ப­டுத்தல் 

    4.1. இவ்­வ­ருடம் மத்­திய வங்­கிக்­கான மூல­த­னப்­ப­டுத்தல் ரூபா 50 பில்­லி­ய­னாக காணப்­ப­டு­வ­துடன், இந்­நாட்டில் நிதி முறை­மை­யினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான உறு­தி­யான அடித்­தளம் இடப்­ப­டு­கின்­றது. முன்­னைய வருட வரவு செலவுத் திட்ட முன்­மொ­ழி­வினைப் போன்றே எமது நிதி முறை­மையில் உறு­தி­யான ஆதன அடிப்­ப­டை­யினை கொண்­டி­ருப்­ப­தற்­காக நிதிக் கம்­ப­னிகள் மற்றும் வங்­கிகள் ஒத்­து­ழைக்­கப்­பட்­டுள்­ளன. 

    நிதித் துறை­யினை ஸ்திரப்­ப­டுத்­து­வதன் ஒரு பகு­தி­யாக இரண்டு அபி­வி­ருத்தி வங்­கிகள் அடுத்த வரு­டத்தில் இந்­நாட்டில் உறு­தி­யான அபி­வி­ருத்தி வங்­கி­யொன்­றினை உரு­வாக்கும் வகையில் ஒருங்­கி­ணைக்­கப்­ப­ட­வுள்­ளன. இலங்கை வங்­கி­யினை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக ரூபா 10 பில்­லி­யனை மூல­த­ன­மாக வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். வங்­கி­களில் வைப்­பி­லிட்­டோ­ருக்­கான பாது­காப்­பினை வழங்கும் வகையில் வைப்புக் காப்­பு­று­தி­யினை 50 சத­வீ­த­மாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    4.2. ஒரு திறில்­லியன் ரூபா­வினை ஆதன அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யினை இலங்கை மத்­திய வங்கி முகாமை செய்­கின்­றது. மத்­திய வங்­கி­யா­னது அதன் ஆத­னத்தில் ஏறக்­கு­றைய 10 சத­வீ­தத்­தினை கடந்த காலங்­களில் வரு­மா­னத்­தினை பெற்­றுத்­த­ரு­கின்ற வர்த்­தக ஆத­னங்­களில் முத­லீடு செய்­த­துடன் மூல­தன தேய்­வாக இவ் வரு­டத்தில் ஏறக்­கு­றைய ரூபா 10 பில்­லி­யனை பெற்­றுக்­கொண்­டது. பத்து வரு­டங்கள் தொடர்ந்து கணக்­கினைப் பேணி வரு­கின்ற ஊழியர் சேம­லாப நிதிய உறுப்­பி­னர்­க­ளுக்கு பங்­கி­லாபம் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இதுவே சேம­லாப நிதி­யத்­தினால் பங்­கி­லாபம் பகி­ரப்­ப­டு­கின்ற முத­லா­வது சந்­தர்ப்­ப­மாகும். இதற்கு மேல­தி­க­மாக ஒவ்­வொரு வரு­டமும் நிதி­யத்தின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் வட்டி வரு­மா­னத்தில் 10 சத­வீ­தத்­தினை வழங்­கு­ம­ளவு இந்­நி­தியம் சக்தி பெற்­றுள்­ளது. 

    4.3 சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி என்­ப­வற்றில் உறுப்­பு­ரி­மை­யினை இலங்கை பெற்­றுள்­ளது. இவ்­வ­ருடம் ஆசி­யாவின் உட்­கட்­ட­மைப்பு நிதி வழங்கல் தேவை­யினை நிவர்த்தி செய்­வ­தற்­காக ஆசிய உட்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்­கி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு சீன மக்கள் குடி­ய­ர­சினால் எடுக்­கப்­பட்ட முன்­னெ­டுப்­புக்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்ளோம். இந்த வங்­கி­யினை உரு­வாக்­கிய உறுப்பு நாடுகள் பல­வற்­றிற்கு மத்­தியில் ஸ்தாபக உறுப்­பி­ன­ராக நாம் கைச்­சாத்­திட்­டுள்ளோம் என்­ப­தனை இப்­பா­ரா­ளு­மன்­றத்­திற்கு நான் சந்­தோ­சத்­துடன் தெரி­வித்துக் கொள்­கின்றேன். 

    05. பங்கு மற்றும் கடன் சந்தை 

    5.1 பங்கு மற்றும் படு­கடன் சந்­தை­யினை ஊக்­கு­விப்­ப­தற்கு 2013 வரவு செலவுத் திட்­டத்தில் வழங்­கப்­பட்ட ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­ன­வு­க­ளினால் சந்தை மூல­த­ன­மாக்­க­லா­னது 3 திறில்­லியன் ரூபா­வாக அதி­க­ரித்­தது. தேறிய வெளி­நாட்டு உட்­பாய்ச்சல் ஏறக்­கு­றைய ரூபா 100 பில்­லி­யனை அடைந்­துள்­ளது. அலகு நம்­பிக்­கை­களின் பெறு­மதி ரூபா 70 பில்­லி­யனை விட அதி­க­மாக காணப்­பட்­டது. பல்­வேறு கம்­ப­னிகள் அவற்­றி­னது படு­க­டனை பட்­டி­ய­லிட்­ட­துடன் மூல­தன உரு­வாக்­கத்­திற்­காக பண சேக­ரிப்பின் குறைந்த செலவின் மூல­மாக ஏறக்­கு­றைய ரூபா 100 பில்­லி­யனை கொண்ட மொத்த பெறு­மதி காட்­டப்­பட்­டது. குறைந்த வட்டி விகித பின்­ன­ணியில் அதனை நாம் மீள­மைத்­துள்­ள­துடன் அதி­க­மான பங்கு மற்றும் படு­கடன் நிதி­ய­ளிப்பு எமது வியா­பார சமூ­கத்­தினால் வியா­பார அபி­வி­ருத்­திக்­காக அதி­க­ரிக்­கப்­படும் என்­பது எனது நம்­பிக்­கை­யாகும். 

    06. சட்டம் மற்றும் நீதித்­துறை மறு­சீ­ர­மைப்பு 

    6.1. துரி­த­மான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் சட்­டங்­களின் தாம­தங்­க­ளினால் அர­சாங்­கத்­திற்­கான வரு­மானம் தடைப்­ப­டாது இருப்­ப­தற்கும் வச­தி­ய­ளிக்கும் வகையில் கொழும்பில் சர்­வ­தேச நடுத்­தீர்ப்பு மைய­மொன்­றினை தாபிப்­ப­துடன் உயர் பெறு­ம­தி­யான வரி, நிதி மற்றும் ஒப்­பந்த முகா­மைத்­துவ பிணக்­கு­களை தீர்ப்­ப­தற்­கான விசேட நீதி­மன்­றத்­தினை உரு­வாக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. நீதிச் சேவை­களின் உயர்தொழில் மதிப்பினை அதிகரிக்கும் நடவடிக்கையாக நீதிபதிகளுக்கான ஆள்சார் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதுடன் அவர்களது வதிவிட வசதிகள் புனரமைக்கப் பட்டுள்ளன. அத்தகைய புனரமைப்புச் செலவினங்களுக்காகவும் நீதிபதிகளின் மனிதவள அபிவிருத்திக்காகவும் ரூபா 750 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    07. நீர்ப்பாசன அபிவிருத்தி 

    7.1. நீர்ப்பாசன முறைமைகளை மேம்படுத்தல் தரமான குடிநீர் வழங்கல் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பு என்பன 2015 –- 17 நடுத்தர கால வரவு செலவுத் திட்ட வேலைச்­சட்­ட­கத்தில் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்ட விட­யங்­க­ளாகும். இதற்­க­மை­வாக யான் ஓயா, உமா ஓயா மற்றும் மொற­க­ஹ­கந்தை அபி­வி­ருத்தி திட்­டங்கள் என்­ப­வற்­றினை விரை­வாக நிறைவு செய்­வ­தற்கும் ஜின் நில்­வள ஆறு, மா ஓயா மற்றும் களனி ஆறு, ஹப்பே வெளி திட்டம், பத்­துலு ஓயா, றனெல்ல, கலிங்­க­நு­வர, வீலி­ஓயா, களு­கல்­ஓயா, மகா­கல்­க­முவ மற்றும் தல்­பிட்­டி­கல நீரேந்து பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்தி மற்றும் தெற்கில் மேல­திக அபி­வி­ருத்­திகள் வெஹெ­ரல, றம்­புக்­கண்­ஓயா, தெது­று­ஓயா நீர்த்­தேக்­கங்­க­ளுடன் தொடர்­பான வாழ்­வா­தார செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்­கான நீர்ப்­பா­ச­னத்­திற்­கான வரவு செல­வுத்­திட்­டத்­தினை மேலும் ரூபா 15,000 மில்­லி­யனால் அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். நீரேந்து நிலை­களை உரு­வாக்­கு­வ­தற்கு வரண்ட வலய சம நிலங்­களை ஊட­றுத்துச் செல்­கின்ற ஆறு­களை மறைத்து சிறிய அணைக்­கட்­டு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக ரூபா 2,000 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன் 

    08. மாகாண மற்றும் கிரா­மியப் பாதைகள் 

    8.1 அபி­வி­ருத்தி முக­வர்­களின் ஒத்­து­ழைப்­புடன் மிகவும் சன நெருக்­க­டி­யான 1,000 கிரா­மங்­களை இணைக்­கின்ற மாகாண மற்றும் கிரா­மியப் பாதைகள், பாலங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான புதிய முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த கிரா­மிய மைய அபி­வி­ருத்தி முன்­னெ­டுப்­பு­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் கிரா­மியப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள பாதை­களை புன­ர­மைப்­ப­தற்­காக மாகாண மற்றும் தேசி­யப்­பாதை அபி­வி­ருத்தி அதி­கார சபை­க­ளுக்­கான பங்­க­ளிப்­பினை ரூபா 20,000 மில்­லி­ய­னாக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    09. இலங்கை புகை­யி­ரத சேவை 

    9.1 எல்­ரீ­ரீஈ பயங்­க­ர­வா­தி­க­ளினால் அழிக்­கப்­பட்ட வடக்கு புகை­யி­ரத பாதை உட்­கட்­ட­மைப்பு தற்­பொ­ழுது முழு­மை­யாக புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ள­துடன் யாழ்­தேவி மீண்டும் இயங்க ஆரம்­பித்­துள்­ளது. மாத்­தறை, - கதிர்­காமம் விரி­வாக்கல் பணி தற்­பொ­ழுது இடம்­பெற்று வரு­கின்­றது. பய­ணிகள் போக்­கு­வ­ரத்­தினை மேம்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் பாரிய கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள பிர­தான நக­ரங்­களை இணைக்கும் வகையில் வவு­னியா, அநு­ரா­த­புரம், பொல்­க­ஹ­வலை மற்றும் கண்­டிப்­பி­ரி­வுகள் இரட்­டைப்­பா­தை­க­ளாக மாற்­று­கின்ற புகை­யி­ரத உட்­கட்­ட­மைப்­புக்­கான நடுத்­தர கால அபி­வி­ருத்தி உபா­ய­மொன்­றினை நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    புகை­யி­ரத சேவை­க­ளுக்­கான பத­வி­ய­ணியை 1993 பத­வி­களைக் கொண்ட 13,000 ஊழி­யர்­க­ளாக மீள­மைப்­ப­தற்கும் புதிய சேவைப்­பி­ர­மாண குறிப்­புக்­க­மை­வாக அதனை விசேட சேவை­யொன்­றாக மாற்­று­வ­தற்கு நியா­ய­மான ஆட்­சேர்ப்பு மற்றும் சம்­பள கட்­ட­மைப்­பினை மேற்­கொள்­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். புகை­யி­ரத ஊழி­யர்­க­ளுக்கு மத்­தியில் மிக நீண்ட கால­மாக காணப்­படும் சம்­பள முரண்­பா­டுகள் இதன் மூலம் தீர்த்து வைக்­கப்­படும். 2015 இல் ரூபா 2,000 மில்­லி­யனை மேல­திக ஏற்­பாடாக ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    10. தபால் திணைக்­களம் 

    10.1 திறை­சே­ரிக்கு பெரும் நிதிச்­சு­மை­யினை ஏற்­ப­டுத்­து­கின்ற ஏறக்­கு­றைய 25,000 ஊழி­யப்­ப­டை­யினைக் கொண்ட தபால் திணைக்­களம் கடந்த வரு­டங்­களில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்றம் அடைந்­துள்­ளது. இந்த வகையில் இத்­தி­ணைக்­க­ளத்­தினை விரி­வாக்­கு­வ­தற்கு தபால் அலு­வ­லக கட்­டிடத் தொகு­தி­களை புன­ர­மைப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். திணைக்­க­ள­மா­னது புதிய இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களை வழங்­கு­மாறும் அதன் பகிர்வு முறை­மை­யினை முன்­னேற்­று­மாறும் வேண்­டி­யுள்­ளது. 

    அதன் தனித்­து­வ­மான சேவை­யினை கவ­னத்திற் கொண்டு மனி­த­வள விருத்தி மற்றும் சேவை வழங்­க­லினை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக தபால் திணைக்­க­ளத்­திற்­கான தனி­யான சேவைப்­பி­ர­மாண குறிப்­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். தகவல் சேவை­யினை நவீன மயப்­ப­டுத்­து­வ­தற்­காக 2015 – 17 காலப்­ப­கு­தியில் ரூபா 2,500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். அனைத்து தபாற்­கா­ரர்­க­ளுக்கும் 2015இல் நியா­ய­மான விலையில் மோட்டார் சைக்­கிள்­களை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    11. வன­சீ­வ­ரா­சிகள் பாது­காப்பு 

    11.1 ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட பிர­தே­சங்­களில் விலங்­கு­ண­வு­களை பயி­ரி­டு­வ­தற்கும் நீர் நிலை­களை புன­ர­மைப்­ப­தற்கும் கிரா­மங்­க­ளுக்குள் விலங்­குகள் நுழை­வ­தனை தடுப்­ப­தற்­கான ஏனைய வச­தி­களை மேற்­கொள்­வ­தற்கும் அத்­த­கைய பிர­தே­சங்­களின் விசேட தேவை­க­ளினை கவ­னத்திற் கொண்டு வன­சீ­வ­ரா­சிகள் பாது­காப்பு மற்றும் சமு­தாய பாது­காப்பு திட்­டங்­களை விரி­வாக்­கு­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட ஒவ்­வொரு பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கும் ரூபா 10 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொழி­கின்றேன். 

    சமு­தாய அடிப்­படை பாது­காப்பு நிகழ்ச்­சித்­திட்­டங்­க­ளுக்கு தலை­மைத்­து­வத்­தினை வழங்­கு­கின்ற பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு வெளி­நாட்டு பயிற்­சி­களில் முன்­னு­ரிமை வழங்­கு­வதன் மூலம் விசேட அங்­கீ­கா­ரத்­தினை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். தேவை­யான வாக­னங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக வன­சீ­வ­ரா­சிகள் பாது­காப்­புத்­தி­ணைக்­க­ளத்­திற்கு ரூபா 200மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் மேலும் முன்­மொ­ழி­கின்றேன். யானை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஆத­னங்கள் மற்றும் மனித உயிர்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்­கு­வ­தற்கு 2013 வரவு செல­வுத்­திட்­டத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட காப்­பு­று­தித்­திட்­டத்­தினை 2015 இலி­ருந்து பயிர் அழி­வு­க­ளையும் உள்­ள­டக்கும் வகையில் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    12. கமத்­தொழில் அபி­வி­ருத்தி 

    12.1 எமது கிரா­மிய மைய அபி­வி­ருத்தி உபா­ய­மா­னது உண­வுப்­பா­து­காப்பு மற்றும் கிரா­மிய மக்­களின் உயர்ந்த வரு­மா­னத்­திற்­கான விவ­சா­யத்­தினை மையப்­ப­டுத்தி இருக்க வேண்­டு­மென்­பதில் நாம் அக்­கறை கொண்­டுள்ளோம். எனவே சிறு மற்றும் பெரும் போகங்கள் இரண்­டிலும் செய்கை பண்­ணப்­படும் நெல்­லுக்­காக 50 கிலோ கிராம் உறை ரூபா 309 ஆக அனைத்து வகை­யான பச­ளை­க­ளையும் வழங்­கு­வ­தற்­கான உர மானி­யத்­திட்­டத்­தினை தொடர்ந்தும் மேற்­கொள்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    அண்­மையில் ஏற்­பட்ட வரட்­சி­யினால் விவ­சா­யிகள் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என்ற வகையில் 2014/15 பெரும் போகத்தில் அனைத்து சிறிய விவ­சா­யி­க­ளுக்கும் விதை நெல்­லினை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. நெல்­லுக்­கான உத்­த­ர­வாத விலை­யினை கிலோ கிராம் ஒன்­றுக்கு 34 – 40 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இறக்குமதியின் போது விதிக்கப்படும் அதிக வரி தொடர்ந்து இருக்கும் அதேவேளை உருளைக்கிழங்கு, வெங்­காயம், செத்தல் மிளகாய், சோளம் என்­ப­வற்­றிக்­கான உத்­த­ர­வாத விலை­யினை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    லங்கா சதொச நிறு­வ­னத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்ள திவி­நெ­கும கமத்­தொழில் சேவைகள் கொள்­வ­னவு நிலை­யங்கள் விவ­சா­யிகள் உத்­த­ர­வாத விலை­யினை பெற்­றுக்­கொள்ளும் வகையில் களஞ்­சி­யப்­ப­டுத்தல் வச­தி­க­ளுடன் உற்­பத்திப் பிர­தே­சங்­க­ளுக்கு விரி­வாக்­கப்­படும்.


    தொடரும்.....


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பாகம் II Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top