கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது! - TK Copy கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது! - TK Copy

  • Latest News

    கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது!

    மன்னர் வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து
    புத்த மதத்தை தோற்றுவித்தவர், கவுதம புத்தர்.

    கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற புத்தப் பெருமான், உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டம், சாரநாத் என்ற இடத்தில் தனது பிரதம சீடர்கள் ஐவருக்கு ’தர்ம சக்கரம்’ என்னும் ஞான உபதேசத்தை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் போதித்தார். 

    அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் ஒரு கிளையை அசோகப் பேரசரின் மகளான சங்கமித்திரை இலங்கைக்கு கொண்டு சென்று நட்டு, வளர்த்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அந்த மரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிளை புத்தர் முதன்முதலாக ஞான உபதேச பிரசாரம் செய்த சாரநாத்தில் உள்ள மலகந்தகுத்தி புத்த விகாரத்தில் நடப்பட்டு, அந்தக் கிளை பல்கிப் பெருகி பெரிய மரமாக வளர்ந்திருந்தது. 

    முதிர்ச்சியடைந்திருந்த அந்த போதி மரத்தின் ஒரு கிளை நேற்று முறிந்து விழுந்தது. கிளையின் உள் தண்டு சக்தியிழந்து விட்டதால் அது முறிந்து, விழுந்ததாக குறிப்ப்பிட்ட புத்த பிக்‌ஷுக்கள் நேற்றைய பகல் பூஜைக்கு பின்னர் கிளையை அறுத்து வெளியேற்றினர். இச்சம்பவத்தினால் புத்த விகாரத்துக்கோ, உள்ளே இருந்தவர்களுக்கோ எந்த சேதமும் இல்லை என்று இந்திய மகா போதி சங்க தலைமை பிக்‌ஷுவின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top