காலம் இப்படியே போனால் ரணில்கூட இங்கு வர தயாராகுவாா்- கெஹலிய - TK Copy காலம் இப்படியே போனால் ரணில்கூட இங்கு வர தயாராகுவாா்- கெஹலிய - TK Copy

  • Latest News

    காலம் இப்படியே போனால் ரணில்கூட இங்கு வர தயாராகுவாா்- கெஹலிய

    ஒன்று போனால் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் விசேட திறமை படைத்தவர் எமது ஜனாதிபதி, திஸ்ஸ அத்தநாயக்கவோடு இன்னும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


    ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

    கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று.

    திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த போது குண்டசாலையில் ஐ.தே.க. அமைப்பாளராக அவர் செயற்பட்டார்.

    கட்சியின் செயலாளர் போகும் போது உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு. எனினும் எமது ஜனாதிபதிக்கு ஒரு விசேட திறமையுள்ளது. கண்ணுக்குக் கண் என பெற்றுக் கொள்ளும் திறமை அது. இங்கிருந்து செயலாளர் போனபோது அங்கிருந்து கட்சியின் பொதுச் செயலாளரே இங்கு வந்துவிட்டார்.

    எதிர்வரும் காலங்களிலும் அப்படியே இங்கிருந்து கட்சித் தலைவர்கள் யாராவது போனால் ரணில் விக்ரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார். அத்தகை திறமை எமது ஜனாதிபதிக்கு உள்ளது. அதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: காலம் இப்படியே போனால் ரணில்கூட இங்கு வர தயாராகுவாா்- கெஹலிய Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top