12.2 எமது அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக கைவிடப்பட்ட நெற்காணிகளை புனரமைப்பு செய்வதற்கான மூன்று வருட நிகழ்ச்சித்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதுடன் சேதனப் பசளையினை பயன்படுத்தி நெல்,பழங்கள் மரக்கறி மற்றும் மலர்ச்செடி பயிரிடலுக்காக அந்நிலங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். இந்த காணி பிரதேசங்களில் மீன் வளர்ப்பு மற்றும் விலங்குணவு, பயிர்ச்செய்கை, நீர்த்தேக்கங்கள், சமுதாய பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும்.
இந் நடவடிக்கைகளுக்காக 2015 இல் ரூபா 2300 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். அத்தகைய காணிகளில் பயிரிடுபவர்களுக்கு விவசாயக் கடனை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். பதவியணிக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் அதேவேளை, விரிவாக்கற் சேவைகளுக்காக கமத்தொழில் சேவைகள் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாய பிரிவுகள் என்பவற்றிற்கான பதவியணியினை நாம் ஏற்கனவே அதிகரித்துள்ளோம்.
13. சிறுபற்று நில பெருந்தோட்டம்
13.1. கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய உற்பத்தியினை அதிகரிப்பதற்காக சிறுபற்று நில தேயிலைச் செய்கையாளர்களுக்கு நீரினை தேக்கி வைப்பதற்காக நிலத்தினை தயார்படுத்தல், மண் பாதுகாப்பு, சேதனப் பசளைகளின் பிரயோகம் என்பவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஏக்கர் ஒன்றிற்கு 5000 ரூபாவினை தொடர்ந்து உதவியாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்த பயிர்கள் அனைத்திற்கும் 50 கிலோ கிராம் உரப்பசளை ரூபா 1250 மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும்.
சமையல் எண்ணெய், தேங்காயெண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் என்பவற்றின் மீது தற்பொழுது சுங்கத்தில் விதிக்கப்படும் உயர்ந்த வரிகள் தெங்கு பெருந்தோட்டத்தின் நீண்ட கால நலனை கருத்திற் கொண்டு தொடர்ந்து பேணப்படும். தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா மற்றும் மிளகு என்பன மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்படும் பொழுது விதிக்கப்படும் செஸ் வரி அத்தகைய பயிர்களின் அபிவிருத்தி, செய்கையினை ஊக்குவித்தல் என்பவற்றிற்காக வருமானத்தினை பயன்படுத்தும் வகையில் மேலும் உறுதியளிக்கப்பட்டது.
13.2. தேயிலை, சிறுபற்று நில செய்கையாளர்களுக்கு மீள் நடுகை மானியம் ஏக்கர் ஒன்றிற்கு ரூபா 875000 இலிருந்து ரூபா 1 மில்லியனாகவும் புதிய நடுகைக்கான உதவு தொகை ரூபா 625000 இலிருந்து ரூபா 750000 ஆக அடுத்த வருடத்திலிருந்து அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். நவீன இயந்திரங்கள் மற்றும் பதனிடல் உபகரணங்களுடன் சிறிய தேயிலை தொழிற்சாலைகளை முழுமையாக நவீன மயப்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
இறப்பர் வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறப்பர் இறக்குமதி மீதான செஸ் வரியினை கிலோ கிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் 2014 நவம்பரில் இருந்து சிறியளவிலான இறப்பர் செய்கையாளர்களுக்கு கிலோ கிராம் ஒன்றிற்கான உத்தரவாத விலை ரூபா 300 ஆக செயற்படுத்தப்படுவதற்கும் நான் முன்மொழிகின்றேன். ஈர வலயத்திலுள்ள சிறிய இறப்பர் செய்கையாளர்களுக்கு மழைக்கவச உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் இறப்பர் செய்கைக்காக வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும். இதற்காக இறப்பர் திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டினை ரூபா 3500 மில்லியனாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
13.3. தெங்கு செய்கையாளர்களுக்கான புதிய மற்றும் மீள் நடுகை மானியம் ஏக்கருக்கு ரூபா 7000 இலிருந்து ரூபா 10000 ஆக அதிகரிப்பதற்கும் தெங்குக் காணிகளை புனரமைப்பதற்கான மானியமாக ஏக்கருக்கு ரூபா 15000 இலிருந்து ரூபா 20000 ஆக அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். தெங்குக் காணிகளில் மண் மேம்பாடு மற்றும் நீர் கிடைப்பனவு என்பவற்றிற்காக கப்புறுக முதலீட்டுக் கடனை ரூபா 3 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
இந் நடவடிக்கைகளுக்காக ரூபா 1000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழிகின்றேன். சிறிய ஏற்றுமதி பயிர்களுக்கான நடுகை உதவு தொகையினை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முன்மொழிவதுடன் விவசாய ஏற்றுமதி திணைக்களத்திற்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்கள் மற்றும் மரக்கறிகளின் நடுகைக்காக வழங்கப்பட்ட மானியத்தினை 50 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் முன்மொழியப்படுகின்றது. 14. பாரியளவிலான பெருந்தோட்டங்கள்
14.1. பாரியளவிலான பெருந்தோட்டங்கள் 50 வருட குத்தகை ஏற்பாட்டின் பேரில் 1992 இல் தனியார் மயப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் ஒரு சில பெருந்தோட்டக் கம்பனிகள் மாத்திரமே அவற்றினது உற்பத்தித் திறனை அதிகரித்திருப்பதற்கான குறிப்பிடத்தக்க அபிவிருத்தியினைக் காட்டியுள்ளன. எனவே, எனது கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் உடன்படாத ஒவ்வொரு பெருந்தோட்டக் கம்பனியும் பிரதான பங்காளராக அரசாங்கம் இருக்கும் வகையில் குத்தகையினை இரத்துச் செய்தல் உள்ளடங்கலாக ஒவ்வொரு கம்பனியின் கீழுள்ள பெருந்தோட்டங்களை அபிவிருத்திச் செய்வது தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்காக 6 மாத அறிவித்தல் விடுக்கப்படும்.
14.2. ஒவ்வொரு கம்பனிக்கும் 8 வருட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட 6 சதவீத வட்டியுடன் கடன் திட்டங்களை செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிவதுடன் அவை சிறந்த செயலாற்றுகையுடைய கம்பனியாக இருக்க வேண்டுமென்பதுடன் மீள் நடுகை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களில் உடன்படுகின்ற அதேவேளை பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை ஏற்றுமதியின் அளவினையும் அதிகரித்தல் வேண்டும். இவ்வசதியானது அரசாங்கத்திற்கு வாடகை கொடுப்பனவு நிலுவையினை செலுத்தாத கம்பனிகளுக்கு அவை அந்நிலுவைகளை செலுத்தும் வரை வழங்கப்படமாட்டாது. 15. பெருந்தோட்ட உயர் தொழில் திறமைகள் மற்றும் ஆராய்ச்சி
15.1 சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் தொடர்பாக உயர்தொழில் திறன்மிக்க பெருந்தோட்டக்காரர்கள் மற்றும் சிறு தோட்டக்காரர்களின் புதிய சந்ததியினரை உருவாக்குவதற்காக பெருந்தோட்ட கல்வி நிறுவகமொன்றினை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவகங்கள் மீதான அரசாங்க முதலீடுகள் இரட்டிப்பாக்கப்படுவதுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான வரியினை மூன்று மடங்காக குறைப்பதன் மூலம் தனியார் துறை முழுமையான நன்மையினை பெற்றுக்கொள்ள முடியும். தலவாக்கலையிலுள்ள தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அகலவத்தையிலுள்ள இறப்பர் ஆராய்ச்சி நிறுவகத்தினை சகல வசதிகளும் கொண்ட ஆராய்ச்சி நிறுவகமாக மாற்றுவதற்கும் ரூபா 3000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
16. விவசாய ஓய்வூதியமும் பயிர் காப்புறுதி திட்டமும்
16.1 2014 ஜனவரியிலிருந்து 63 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியமாக ஆகக் குறைந்தது ரூபா 1250 இனை வழங்குவதற்கான ஓய்வூதியத் திட்டத்தினை நான் செயற்படுத்தினேன். இந்த பங்களிப்பு ஓய்வூதிய நிதியினை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்திலிருந்து ரூபா 1000 மில்லியனை மூலதன பங்களிப்பாக நான் ஏற்கனவே வழங்கியுள்ளேன். இந்நிதியமானது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயிர்க் காப்புறுதி திட்டத்தின் பயிர் அழிவுக்கான நட்ட ஈட்டிற்கும் விரிவாக்கப்படும். இந்த ஓய்வூதிய திட்டம் செயற்படாதிருந்த காலப்பகுதியில் பங்களிப்புச் செய்யாதவர்களை தொடர்ந்தும் பங்களிப்புச் செய்வதற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். எனவே விவசாய ஓய்வூதியத் திட்டத்திற்கு அடுத்த மூன்று வருடங்களின் போது ரூபா 5000 மில்லியனை மூலதன பங்களிப்பாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
17 ஏற்றுமதி கைத்தொழில்கள்
17.1 ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் 12 சதவீத குறைந்த வருமான வரியினை பெற்றுள்ளதுடன் உயர்தர இயந்திரங்களுக்கான அதிக தேய்வு பெறுமான ஏற்பாடுகளையும் சுங்க முறி மற்றும் சுதந்திர துறைமுக வசதிகளையும் கொண்டிருக்கின்றனர். அத்தகைய ஏற்றுமதிகளுக்கு மேலும் வசதியளிக்கும் வகையில் வங்கித் தொழில், தொற்று நோய் தடுப்பு, தர நிர்ணயம் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குகின்ற நிலையமொன்று சுங்கத் திணைக்களத்தில் தாபிக்கப்படும் ஏற்றுமதி கைத்தொழிலினை நவீன மயப்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் துரிதப்படுத்தப்பட்ட தேய்வுப் பெறுமான ஏற்பாடு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட முதலீட்டினைக் கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பங்கிலாபங்கள் மீதான வருமான வரியிலிருந்து விலக்களிப்பு என்பவற்றினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
17.2 அத்தகைய கைத்தொழில்களின் ஆராய்ச்சி புத்தாக்கம் மற்றும் வியாபாரக் குறியீட்டு ஊக்குவிப்பு மீதான செலவினங்களுக்கு மூன்று மடங்கு கழிவு வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். உயர் பெறுமதிமிக்க உற்பத்திகளான தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா மற்றும் வாசனைத்திரவியம் என்பனவற்றின் ஏற்றுமதி இப்பயிர்களின் செய்கையினை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிக்கப்படுவதுடன் ஆரம்ப நுகர்வுப் பொருள் ஏற்றுமதிகள் மீதான உயர்மட்ட செஸ் வரியும் பேணப்படும். இலங்கையின் பொருள் என்ற அடையாளத்துடன் உலக சந்தையில் உயர் பெறுமதி கொண்ட தேயிலையினை ஊக்குவிப்பதற்காக உள்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்களுடன் தேயிலை சபையினால் சேகரிக்கப்பட்ட விசேட செஸ் வரியில் 50 சதவீதத்தினை பகிர்ந்து கொள்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினூடாக இந்த நுகர்வுப் பொருட்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த வகையில் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 2015 இன் அரையாண்டிலிருந்து செயற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சியினை ஏற்படுத்தும். ஏற்றுமதிக்கு தேவையான பொதியிடல் பொருட்கள் மீதான இறக்குமதி தீர்வையினை அத்தகைய பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனை எவ்வகையிலும் பாதிக்காத வகையில் குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
18. மீன்பிடிக்கைத்தொழில்
18.1 கடந்த 5 வருடங்களுக்குள் மீன்பிடி இரட்டிப்பாக அதிகரித்துள்ளதுடன் 500,000 மெற்றிக் தொன்னினை விஞ்சியதாக காணப்படுகின்றது. கருவாடு உற்பத்தி அதிகரித்ததுடன் நெத்தலி, மாசி, தகரத்திலடைத்த மீன் மற்றும் மீன் உணவு என்பன அதிகரித்த அதேவேளை குறித்த உற்பத்திகள் தொடர்பான இறக்குமதிகளும் 70,000மெற்றிக் தொன்னாக குறை வடைந்தன. தெரிவு செய்யப்பட்ட மீன்பிடி துறைமுகங்களில் கருவாடு பதனிடல் நிலையங்களை உருவாக்குவதுடன் அனைத்து மீனவர்களினதும் சிறு அளவிலான மீனவர்களின் மீன் உற்பத்தியினை உத்தரவாத விலையொன்றில் கொள்வனவு செய்வதனை செயற்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியானது மொத்த மீன் உற்பத்தியில் 20 சதவீதமாக காணப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கிடையில் நீரியல் வள உற்பத்திகள் நியாயமானளவு கவனத்திற்கொள்ளப்பட்டது. எனவே அத்தகைய தொழில்முயற்சியாளர்கள் தமது மீன் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு கடன் திட்டங்களை நான் முன்மொழிகின்றேன். 1000 உள்நாட்டு மீன் பண்ணை கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு ரூபா 200 மில்லியனையும் வளர்ப்பு மீன் ஏற்றுமதியினை விரிவாக்குவதற்கு ரூபா 50 மில்லியனையும் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். உடவளவை, தம்புள்ளை, இங்கினியாகலை மற்றும் பொலனறுவை போன்ற இடங்களில் காணப்படும் தேசிய நீரியல் வளங்கள் அதிகார சபையின் மீன் வளர்ப்பு நிலையங்கள் சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் மேலும் விரிவாக்கப்படும்.
18.2 குளிரூட்டப்பட்ட அறைகளை புனரமைத்தல் நியாயமான விலைகளில் வழங்கலினை மேம்படுத்துவதற்காக சந்தைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குதல் என்பவற்றிற்காக ரூபா 1500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். சந்தைப்படுத்தல் வசதிகளை விரிவாக்குவதற்கான உபகரணங்கள் மீதான இறக்குமதி தீர்வைகள் குறைக்கப்படும்.
19. மீனவ சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாடு
19.1 மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வாழ்க்கைத்தர மேம்பாடு என்பன அவசியமாகும். எனவே முன் பள்ளிக்கூடங்கள் ஆரம்ப பாடசாலைகளுக்கு செல்லுகின்ற சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், இளைஞர்களுக்கான திறன் விருத்தி மற்றும் மீனவ சமூகத்தின் வீடமைப்பு தேவைப்பாடுகளினை மேம்படுத்தல் என்பவற்றிற்கான 3 வருட விசேட திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். மாகாண சபைகளுடன் இணைந்து செயலாற்றுவதற்காக 2015 இலிருந்து ஒவ்வொரு வருடமும் கடற்றொழில் அமைச்சுக்காக ரூபா 750 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
20. கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கைத்தொழில்கள்
20.1 உள்நாட்டு பால் உற்பத்தி, உள்நாட்டு நுகர்வு தேவைகளில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறை பாற்பண்ணைகள் அதேபோன்று சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் இத்துறையில் அவற்றினது முதலீட்டினை கணிசமானளவு அதிகரித்துள்ளன. சில உள்நாட்டு நிறுவனங்கள் திரவ பால் உற்பத்தியினையும் ஏனைய பாற்பொருள் உற்பத்திகளையும் அதிகரித்துள்ளன. மில்கோ நிறுவனத்தின் உற்பத்தி ஆற்றலினை இரட்டிப்பாக விரிவாக்குவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர பாற்பண்ணைகள் அதேபோன்று அரசாங்க பண்ணைகளை ஊக்குவிப்பதற்கு உயர்தர கறவைப்பசுக்கள் 20,000 இனை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20.2 பாற்பண்ணைகள் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் உபகரணங்களை அதிகரித்தல், விலங்குணவு உற்பத்தியினை அதிகரித்தல் என்பவற்றிற்கு சிறிய நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் விசேட கடன் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவிற்கான செஸ் வரி கிலோ ரூபா 150 ஆகவும் பட்டர், யோகட் மற்றும் பால் பொருள் உற்பத்திகளின் இறக்குமதி மீதான அதிக்கூடிய செஸ் வரி இக்கைத்தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொடர்ந்தும் பேணப்பட்டது.
உள்நாட்டு உற்பத்திகளை பிரசித்தப்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பால்மா கிலோ 100 ரூபாவினாலும் யோகட் ஒன்று 3 ரூபாவினாலும் குறைப்பதற்கு உள்ளூர் பாலுற்பத்தியினை அதிகரிப்பதற்கு லீற்றர் ரூபா 60 ஆக திரவப்பாலுக்கான உத்தரவாத விலையினை அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். மாகாண மட்டத்தில் கால்நடைப் பண்ணைகளை ஊக்குவிப்பதற்கு தரமான விலங்குணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கும் சிறிய பண்ணையாளர்களுக்கும் உதவியளிப்பதற்கு மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
20.3 வெளிக்கள அலுவலகர்கள் அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர பாற்பண்ணையாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அதிகரிப்பதற்காக மஹாபெரித்தென்ன, தல்பொக்குணை, கேகுந்துர, கரந்தகொல்ல, சிப்பிக்குளம், வவுனியா, வன்னிகம, கொட்டதெனியாவ, உடுகொட, உப்புவெளி மற்றும் வீரவில ஆகிய இடங்களில் காணப்படும் பயிற்சி நிலையங்களின் கொள்ளளவினை விரிவாக்குவதற்கும் ரூபா 700 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
20.4 சில வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட உற்பத்திப் பற்றாக்குறையினை நீக்கும் வகையில் கோழி இறைச்சி உற்பத்தி 155,000 மெற்றிக் தொன்னாக அதிகரித்தது. கடந்த 5 வருடங்களை விட ஆளுக்குரிய நுகர்வு ஏறக்குறைய இரட்டிப்பாக 7.5 கிலோ கிராம்களாக காணப்பட்டது. இத்தொழிற்துறையானது ஏற்றுமதி சந்தையிலும் கால் பதித்துள்ளது. சிறிய கோழிப் பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் சோள உற்பத்தியினை கிலோ ஒன்றுக்கு ரூபா 40இற்கு வழங்குவதனை அறிமுகம் செய்வதுடன் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் ஏற்றுமதிக்காக ஊக்குவிப்பு உதவு தொகைகளை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். கோழி வளர்ப்பு தொடர்பான விலங்கு வைத்திய சேவைகளை நவீன வசதிகளுடனும் உபகரணங்களுடனும் உறுதிப்படுத்துவதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். விரிவாக்கற் பணிகளை மேற்கொள்வதற்காக 2015இல் விலங்கு வளர்ப்புத் துறையில் 500 தொழில்நுட்ப உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
21 சுகாதார சேவைகள்
21.1 சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் சிறுநீரக சுகாதார பராமரிப்பு சேவையினை வழங்குவதற்கான வசதிகள் துரிதப்படுத்தப்பட்ட அடிப்படையில் விரிவாக்கப்பட்டன. சிறுநீரக நோய்களுக்கெதிராக தடுப்பு நடவடிக்கைகள் வடமத்திய மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கு நீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதிகளை வழங்கியதன் மூலம் மேற்கொள்ளப்பட்டதுடன் சுதேச மருத்துவ சிகிச்சை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். அதிகளவிலான சிறுநீரக நோயாளர்களை பராமரிக்கும் வகையில் மாளிகாவத்தையிலுள்ள சிறுநீரக வைத்தியசாலையின் வசதிகளை விரிவாக்குவதற்கும் அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கும் ரூபா 750 மில்லியனை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்
21.2 மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை அதிக எண்ணிக்கையிலான உள்ளக மற்றும் வெளி நோயாளர்களை பராமரிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, அநுராதபுரம் மற்றும் காலி வைத்தியசாலைகளில் கதிரியக்க அயடீன் சிகிச்சைப் பிரிவுகள் விரிவாக்கப்படவுள்ளன. பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ரூபா 700 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றேன்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைவாக பாரிசவாதம் தொடர்பான மருத்துவ பராமரிப்பினை முகாமை செய்வதற்கு தேசிய பாரிசவாத நிலையமொன்றினை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன மருத்துவ வசதிகளுடன் அநுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, அம்பாறை, மாத்தறை மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் விசேட பாரிசவாத நிலையங்களை உருவாக்குவதற்கு ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
21.3 தாய் பராமரிப்பிற்கு விசேட கவனம் செலுத்த வேண்டுமென்ற வகையில் தாய் பராமரிப்புக்கான சிறந்த மையங்களாக கறாப்பிட்டிய, கொழும்பு, கண்டி, அநுராதபுரம் தாய் பராமரிப்பு வைத்தியசாலைகளை உருவாக்குவதற்கும் தாய், சேய் பராமரிப்பு விசேட நிலையங்களாக பதுளை மற்றும் பெலியத்தை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குமாக ரூபா 1,500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
அடுத்த 10 வருடங்களுக்கு எமது நாட்டின் சிறுவர் பராமரிப்பு தேவையினை நிறைவேற்றுவதற்கும் சிறுவர் பராமரிப்பு தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குமான வசதிகளைக் கொண்ட சிறந்த நிலையங்களாக இரண்டு தேசிய சிறுவர் வைத்தியசாலைகளையும் நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய துணை வசதிகளையும் விரிவுபடுத்தும் வகையில் வெளி நோயாளர் பராமரிப்பு ஆற்றல் 2017இல் நிறைவு செய்யப்படும்.
21.4 நடமாடும் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் அனைத்து பிரசைகளினதும் துரிதப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை செயற்படுத்துவதற்கும் நோய் தடுப்பு பராமரிப்பினை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை தொடர்பான வசதிகளை விரிவாக்குவதற்கும் ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். அத்தகைய சிகிச்சைகளை ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஏற்பாடு செய்வதற்காக அனைத்து விகாரைகளினதும் ஒத்துழைப்பினை நான் எதிர்பார்க்கின்றேன். திடீரென நோய்வாய்ப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக அவசர பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் மூலம் பிரதான வைத்தியசாலைகளில் நடமாடும் அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
22. சுதேச மருத்துவத்துறை
22.1 ஆயுர்வேத வைத்தியசாலைகளை புனரமைத்தல் மற்றும் சுதேச மருத்துவ ஆராய்ச்சியினை முன்னேற்றுவதற்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன். அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்ற சுதேச மருத்துவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5,000 ரூபாவினை வழங்குவதற்கு முன்மொழிகின்றேன். சுதேச மருத்துவ தொழில் புரிநர்கள் தமது மருந்தகங்களை மேம்படுத்துவதற்கும் சுதேச மருத்துவத் துறையினை விருத்தி செய்வதற்குமாக 6 சதவீத வட்டியில் 500,000 ரூபா வரை கடன் திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கும் முன்மொழிகின்றேன்.
23. முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி
23.1 சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி என்பவற்றிற்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியுள்ளது. சிறுவர் அபிவிருத்தி உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி பாடசாலைகளுக்கான பொருட்களுடன் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். அத்தகைய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஏதேனும் அவசர செலவினங்களுக்காக ரூபா 10,000 கடன் வசதியுடன் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபாவினை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் முன் பள்ளிக்கூட கல்வி தொடர்பான பயிற்சி வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படும். ஆரம்ப பாடசாலை வசதிகள் காணப்படாத பிரதேசங்களிலுள்ள ஒவ்வொரு ஆரம்ப பாடசாலையிலும் முன்பள்ளிக்கூடங்களை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்நடவடிக்கைகளுக்காக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
24. கல்வி
24.1 சிறுவர் நட்பு பாடசாலை முறைமை, மஹிந்தோதய ஆய்வுகூடங்களினை நிறுவுதல், ஆசிரியர் பயிற்சி, பாடசாலைப் புத்தகங்களின் தர மேம்பாடு, கற்பித்தல் சாதனங்கள் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான தொழில்நுட்ப பாடங்களை அறிமுகம் செய்தல் என்பவற்றுக்கு நடுத்தரக் காலத்தில் அரசாங்க முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 1,000 மஹிந்தோதய ஆய்வுகூடங்களுடன் 3 வருடங்களுக்குள் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசாலைகளை உருவாக்குவதற்கு ரூபா 15,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றேன். கிராமியப் பாடசாலைகளில் துப்புரவேற்பாடு மற்றும் ஏனைய வசதிகளை தரமுயர்த்துகின்ற முன்னெடுப்புகளுக்காக ரூபா 1700 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்களின் வருடாந்த எண்ணிக்கையினை 25,௦௦௦ ஆக அதிகரிப்பதற்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கொடுப்பனவினை ரூபா 5௦௦ இலிருந்து ரூபா 1,5௦௦ ஆக அதிகரிப்பதற்கும் முன்மொழிகின்றேன்.
24.2 அனைத்து பாடங்களுடன் மஹரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரியினை அபிவிருத்தி செய்வதற்கும் ஆசிரியர் பயிற்சிக்கான உபகரணங்களை கொண்ட நாடு முழுவதிலுமுள்ள ஏனைய அனைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் தரமுயர்த்தப்படுவதற்கும் மேலும் ரூபா 15௦ மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசிரியர்களின் பயிற்சி துறையினை விரிவாக்குவதற்கு முகாமைத்துவ தொழில் முயற்சி அபிவிருத்தி பீடத்தினையும் அதேபோன்று மீபேயில் அமைந்துள்ள பயிற்சிக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினையும் உருவாக்குவதற்கு ரூபா ௩௦௦ மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
24.3 ஆசிரியர் சேவைக்கான புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் பதவியுயர்வுகள், சம்பள அதிகரிப்புகள் மற்றும் சேவை தொடர்பான ஏறக்குறைய 2௦,௦௦௦ நிர்வாகப் பிரச்சினைகளை வினைத்திறன்மிக்க வகையில் முகாமை செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த சேவைப் பிரமாணக் குறிப்பினை செயற்படுத்துகின்ற போது பதவியுயர்வுகளுக்காக செலுத்த வேண்டிய நிலுவைக் கொடுப்பனவுகளை தீர்ப்பதற்கான நிதி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமியப் பாடசாலைகளுக்கு ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், நுண்கலை கற்கைகள் மற்றும் விளையாட்டு போன்ற பாடங்களுக்காக அடுத்த வருடத்திலிருந்து 5௦,௦௦௦ ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். அவர்கள் கல்விச் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு முன்னரான ௫ வருடங்களுக்குள் கல்வித் துறையில் பட்டப் படிப்பினை நிறைவு செய்வதற்கு வேண்டப்படுவதுடன் அதே பாடசாலையில் மேலும் ௫ வருடங்களுக்கு சேவையாற்றுதல் வேண்டும். அவர்களுக்கு 2,5௦௦ ரூபா மாதாந்த பயிற்சிக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
25. பிரிவெனா கல்வி
25.1 ௨௦௧௬ ஆண்டளவில் பிரிவெனா கல்விக்கான மாணவர் தொகையினை ௨௫ சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் பிரிவெனா கல்வி விருத்தி செய்யப்படும். பிரிவெனா கல்விக்கான வசதிகளை தரமுயர்த்துவதற்கு வகுப்பறைகள், நூலகங்கள், கணினிக் கூடங்கள், தளபாடம் மற்றும் உபகரணம் என்பவற்றிற்காக ஒவ்வொரு பிரிவெனாக்கும் ௫௦௦,௦௦௦ ரூபாவினை தொடர்ந்து வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். பிரிவெனா ஆசிரியர்களுக்கு இடர் கடன்கள், ஆதனக் கடன்கள், அக்ரஹார காப்புறுதி நன்மைகள், புகையிரத ஆணைச்சீட்டுக்கள் போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதுடன் பிக்குகள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான கொடுப்பனவினை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
௨௬. திறன் கல்வி ௨௬.௧ எமது இளைஞர்களுக்கான துரிதப்படுத்தப்பட்ட திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமான வருடத்திற்கு 1௦௦,௦௦௦ டிப்ளோமா பட்டதாரிகளையும் சான்றிதழ் பெறுநர்களையும் உருவாக்குவதாகும். இந்நோக்கத்திற்காக, டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் தொழில்நுட்ப கல்லூரிகள், அரசாங்க தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவகங்கள், வேலைத் தளங்களுடன் இணைந்த நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மாணவர் அனுமதியினை மேற்கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ௨௬.௨ தொழில் பயிற்சிக் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளில் சித்தியடைந்து மேலதிக கற்கைக்காக பல்கலைக்கழகங்களுக்கு அல்லது ஏனைய உயர் கல்வி நிறுவகங்களுக்கு செல்ல முடியாதிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த வருடமொன்றிற்கு 5௦,௦௦௦ மாணவர்களுக்கு புதிய மாணவர் புலமைப் பரிசில் ஒன்றினை செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்த கொடுப்பனவாக ௩,௦௦௦ ரூபா வழங்கப்படும். இப்புலமைப் பரிசில் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு காணப்படுகின்ற துறைகளில் தேசிய தொழில் தகமை மட்டத்திற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா சான்றிதழுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக அரசாங்கத்துறை அதேபோன்று தனியார் துறை தொழில் பயிற்சி நிறுவகங்கள் இரண்டினாலும் பயன்படுத்தப்படும். அப்பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான காரணியாக வேலைவாய்ப்பு காணப்படும். மாணவர் புலமைப் பரிசில்களை வருடமொன்றிற்கு 5௦,௦௦௦ ஆக அதிகரிப்பதற்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலுகின்ற மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ௩,௦௦௦ ரூபாவினை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
௨௭. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ௨௭.௧ எமது சிறுவர்களுக்கு அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை வழங்குவதுடன் எமது நாட்டினை உயர் ஆராய்ச்சி வசதிகளைக் கொண்ட நாடாக மாற்றுகின்ற உயர் கல்வி முறைமை ஒன்றினை உருவாக்குவது எமது தூர நோக்காகும். ௨௭.௨ எனவே, ௨௫,௦௦௦ மாணவர்களுக்கான விடுதி நிர்மாண நிகழ்ச்சித் திட்டத்தினை துரிதப்படுத்தப்பட்ட வகையில் நாம் செயற்படுத்தியுள்ளோம். மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குகின்ற பல்கலைக்கழக சூழலிலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நிதி ஊக்குவிப்புகள் வழங்கப்படும். மாணவர்கள் தமது அன்றாட செலவினங்களை கவனிப்பதற்காக அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவினை மாதமொன்றுக்கு ரூபா ௪,௦௦௦ ஆக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
௨௭.௩ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம், களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிலையம், பேராதனை பல்கலைக்கழகத்தின் உயர் மருத்துவ பீடம், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல், பெற்றோலிய மற்றும் விமானப் பொறியியல் பீடங்கள் என்பவற்றினை விரிந்த பாடவிதானங்களுடன் தாபிப்பதற்காக நடுத்தர கால அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, வயம்ப, யாழ்ப்பாணம், ரஜரட்ட, கிழக்கு, ஊவாவெல்லஸ்ஸ, சப்ரகமுவ மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவம், உணவு தொழில்நுட்பம், மிருக விஞ்ஞானம் மற்றும் விவசாயப் பீடங்களின் பாடவிதானங்களை விரிவுபடுத்துவதற்கான ஆற்றல்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. ஆயுர்வேத போதனா வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் சுதேச மருத்துவத்தில் உயர் பட்டப்படிப்பு, தொற்றாத நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்படவுள்ளன. ௨௭.௪ எமது கற்றறிந்த பிக்குகள், வரலாற்று துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எமது கலாசார பௌத்த பெறுமானங்களை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள முடியுமான வகையில் பாலி, பௌத்த கற்கைகளுக்கான பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு தேவையான வதிவிட மற்றும் ஆராய்ச்சி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா ௧ பில்லியனை நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
27.5 எமது உயர் கல்வியின் நன்மைகளை விரிவுபடுத்தும் வகையில் பொருளாதாரம், பொருளியல், சட்டம்,பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பல்துறைப் பாடங்களை ஒரே பட்டப்படிப்பில் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களுக்கு கலை, வர்த்தகம் மற்றும் விஞ்ஞான பாடங்களை வழங்குகின்ற பொருளியல் மற்றும் அபிவிருத்தி பொறியியல் பாடசாலை ஒன்றினை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தினால் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியினையும் பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களினால் சிறுநீரகங்கள் பற்றிய ஆராய்ச்சியினையும் றுகுணு பல்கலைக்கழகத்தினால் நீரிழிவு நோய் பற்றிய ஆராய்ச்சியினையும் மேற்கொள்வதற்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் ஏனைய துறைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தேசிய ஆராய்ச்சிப் பேரவைக்கு ரூபா 500 மில்லியனும் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
28. நெனசல
28.1 2020இல் அறிவு மைய பொருளாதாரத்தினை நோக்கிய எமது பயணத்தை அடைவதற்கும் 2015இல் முழு வசதிகளுடன் கூடிய நெனசல நிலையங்களை உருவாக்குவதற்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளேன்.
28.2 பாற்பொருள் உற்பத்தி, கோழி இறைச்சி, மீன்பிடி, உணவு தொழில்நுட்பம் மற்றும் கைத்தறிப் பொருள் வடிவமைப்பு, வீட்டு அலங்காரம், பரிசில் பொருட்கள் துறைகளில் வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களுடன் கிராம மட்டத்தில் நெனசல வலையமைப்பினூடாக மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழகங்களினால் கள மட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகூட வசதிகள் உபகரணங்கள் என்பவற்றிற்காக ரூபா. 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
29. கலை மற்றும் கலாசாரம்
29.1 பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் பரந்தளவிலான அபிவிருத்தியுடன் கலை மற்றும் கலாசார துறைகளுக்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டியது கட்டாயமாகும். இப்பின்னணியில் எனது கடந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் கண்டி மற்றும் அநுராதபுரத்தில் கலை மற்றும் கலாசார நிலையங்கள் இரண்டினை நிறுவுவதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்மொழிந்தேன். மேலும் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் காலியில் நவீனமயப்படுத்தப்பட்ட கலாசார நிலையங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
லயனல் வென்ற் கலா நிலையம் மற்றும் லும்பிணி கலை அரங்கம் என்பவற்றினை நவீனமயப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. எமது கலாசார மற்றும் மரபுரிமை தலங்களில் பொது வசதிகள், துப்புரவேற்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவம் என்பவற்றிற்காக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன். மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு ஊடகத்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டத்தினை விரிவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
30. கலைஞர்களுக்கான விடுமுறை விடுதிகள்
30.1 கலைஞர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட 5 விடுமுறை விடுதிகளை நிர்மாணிப்பதற்கு எனது கடந்த வருட வரவு செலவுத் திட்ட உரையில் நான் முன்மொழிந்திருந்தேன். இந்த விடுதிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணிப்பதுடன் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும். சினிமாக் கைத்தொழிலினை சர்வதேச ரீதியில் சிறந்து விளங்கும் வகையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெறும் திரைப்படங்களையும் நாடகங்களையும் தயாரிக்கின்ற திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 5 வருடத்திற்கு அரைவாசி வரி விடுமுறையினை நான் முன்மொழிகின்றேன்.
31. திவிநெகும
31.1 திவிநெகும நிகழ்ச்சித் திட்டமானது 2.5 மில்லியனுக்கு அதிகமான குடும்பங்களை கவர்ந்துள்ளதுடன் இலங்கையிலுள்ள அனைத்து கிராமங்களிலும் தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை வீடுகள்,கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பண்ணைகள், கைத்தறி அல்லது சிறிய முயற்சிகளை உருவாக்குவதற்கு முழு குடும்பத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கிராம சேவை பிரிவுகளிலுமுள்ள 5 சிறந்த வீட்டுத் தோட்டங்களுக்கு எவ்வித பிணைப் பொறுப்புமின்றி 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூபா 50,000 வரை கடன் வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வர்த்தக ரீதியான தொழில் முயற்சியினை உருவாக்குவதற்கு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 5 குடிசைக் கைத்தொழில்களுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஐந்து வருட கடன் வசதியினை செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
31.2 ஓய்வூதியம் பெறுநர் சங்கங்கள், சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்புக்கள், மரணாதார சங்கங்களுக்கு ரூபா 100,000 வரை கடன் வழங்குவதற்கான சுழற்சி நிதியம் ஒன்றினை உருவாக்குவதற்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன். திவிநெகும மற்றும் சமுர்த்தி பயனாளிகளை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கு வங்கிகளில் 50 சதவீத சேமிப்பினை மேற்கொண்டு அதன் மூலம் குழுப் பிணை பொறுப்பின் அடிப்படையில் குறைந்த வட்டி விகிதத்தில் ரூபா 5,000 இலிருந்து ரூபா 250,000 வரைக்குமான சிறிய கடன்களை வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். 4 அல்லது அதிக உறுப்பினர்களைக்கொண்ட குடும்பங்களுக்கு 3,000 ரூபாவும் 3 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 2500 ரூபாவும் ஏனைய குடும்பங்களுக்கு 1,000 ரூபாவும் என்ற வகையில் மாதாந்த திவிநெகும கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். 32. சிறுவர் போஷாக்கு
32.1 சிறுவர்களுக்கான போஷாக்குணவு, தாய் மற்றும் குழந்தைகளின் போஷாக்கு மட்டத்தினை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போஷாக்கு நிபுணர்களை ஈடுபடுத்தி திரிபோஷா மற்றும் சமபோஷா போஷாக்குணவுகளை பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல் சமுதாய மட்டத்தில் நடமாடும் சிகிச்சைகளை மேற்கொள்ளல் என்பவற்றறுக்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகின்றேன். போஷாக்கு விருத்திக்காக வீட்டுத் தோட்ட மரக்கறிகள் பால் மற்றும் முட்டை என்பவற்றின் நுகர்வினை அதிகரிப்பதற்கு திவிநெகும சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்கின்றன. இந்நடவடிக்கைகள் மூலம் தாய் பாலூட்டலினை ஊக்குவிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். லங்கா சதொச விற்பனை நிலையங்களின் மூலம் சிறுவர் பாலுணவுப் பொருட்களை சலுகை விலைகளில் வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன். குழந்தை பாலுணவுப் பொருட்கள் முழுமையாக வரி விலக்களிக்கப்பட்டுள்ளன என்ற வகையில் சிறுவர் பாலுணவின் விலைகளை குறைக்குமாறு சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வியாபாரிகளை வேண்டிக்கொள்கிறேன்.
33. ரட்டவிரு வலுவூட்டல்
33.1 எமது சனத்தொகையில் ஏறக் குறைய 2 மில்லியன் பேர் உயர் வருமானம் தருகின்ற திறன் தொழில்களில் பல்வேறுபட்ட வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர். எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடுகின்ற எமது மக்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதற்காக பதுளை, குருநாகல், ஹம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விசேட தொழில் பயிற்சி பாடசாலைகள் 5 இனை உருவாக்குவதற்கு ரூபா 500 மில்லியனை மேலும் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். அடுத்த வருடத்திலிருந்து விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்தினை ஒத்ததாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
33.2 வதிவிட விசாவினை கொண்டில்லாத வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் எமது தாய் நாட்டிற்கு சேவை செய்வதற்கு இயலுமான வகையில் இரட்டை பிரஜாவுரிமையினை அல்லது 5 வருட தொழில் விசாவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற உயர் வருமானம் பெறும் இலங்கையர்கள் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அதன் பெறுமதியில் 60 சதவீத வெளிநாட்டு செலாவணியை இலங்கை வங்கிகளில் வைப்பிலிடுவதன் மூலம் அரசாங்க ஊழியர்களைப் போன்று சலுகை தீர்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். ஹம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விசேட தொழில் பயிற்சி பாடசாலைகள் 5 இனை உருவாக்குவதற்கு ரூபா 500 மில்லியனை மேலும் ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். அடுத்த வருடத்திலிருந்து விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்தினை ஒத்ததாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். Close