அப்பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் பாடல். இதோ வெளியாகியிருக்கின்ற ‘பக்கத்து வீட்டு பெட்டை’ பாடல் அந்த ரகம் தான்.
முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் (வட்டார மொழி) உருவாக்கப்பட்ட பாடல் என்ற பெருமையை இந்த பக்கத்து வீட்டு பெட்டை பாடல் பெற்றுக்கொள்கிறது.கலகலப்பான வட்டார மொழி வார்த்தைகள் பாடலுக்கு பெரும் பலம்!
‘எழுந்திரு மனுஷா எழுந்திரு உன்ர சிறகுகள் விரிக்க பறந்துடு..’
என் ஆரம்பிக்கும் வரிகள் தொடர்ந்து ‘உன்ர மொழியை நீ காத்துட வேண்டும்..’ ‘பக்கத்து வீட்டு பெட்டை பல்லைக்காட்டி சிரிக்கும்.. இழுத்துண்டு ஓடென்று நாலு நாள் சொல்லும்..’ என அனைத்து ஏரியாக்களிலும் இறங்கி விளையாடியிருக்கிறார்கள்.
ஊரு உலகத்தில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் அசத்தலாக சொல்லுகிறது பாடல்!தீசன் வேலாவின் குரல் பாடலுக்கு ஏக பொருத்தம். மொழிவழக்கு அசத்தலாக வருகிறது. கிடைத்த இடத்தில் எல்லாம் கலகலப்பாக்கியிருக்கிறார். பாடலுக்கு இசை இன்னுமொரு பலம்.
நுணுக்கமான நோட்ஸ் எதுவும் இல்லாமல், பாடலுக்கு தேவை எவ்வளவோ அதை மட்டும் சேர்த்திருப்பது அசத்தல் ஐடியா…!!பாடல் போலவே விஷுவல் கலகல காக்டெய்ல்! ‘சொக்ஸ்’ அணியாமல் கேன்வாஸ் ஷூ மாத்திரம் அணிந்துகொண்டு பாடலின் ஹீரோ அறிமுகமாகும் ஆரம்பக்காட்சியே அட்டகாசம்!
தொடந்து வரும் விஷுவல் ‘கவர் வீடியோ’ ஃபீலை தருவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.பாடல்களில் அபூர்வமாக தென்படும் ஈழத்து பேச்சு வழக்குகளை, ’பக்கத்து வீட்டு பெட்டை ’ பாடல் மூலம் மீண்டும் கொண்டுவந்து ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ராக மாற்றிய பாடல் குழுவினருக்கு சினிஉலகம் ஈழத்திரையின் வாழ்த்துக்கள்.