சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணை நீதியானதாக அமையாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
“இது முறையானதொரு விசாரணையல்ல என்பது எமக்குத் தெரியும்.இந்த விசாரணை அரசியல் ரீதியானது – பக்கச்சார்பானது.விசாரணைகள் முடிவுக்கு வர முன்னதாகவே, விசாரணையின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது தான் இந்த விசாரணையின் நிலை.இந்த அனைத்துலக விசாரணை நீதியை வழங்குவதாக அமையாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.