ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள்
வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கோச்ச்டையான் படம் கடந்த 23-தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோச்ச்டையான் படம் 2டி மற்றும் 3டி படங்களில் வெளியிடபட்டது.கோச்சடையான் படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் கோச்சடையான் படம் 30கோடி வசூலித்துள்ளது வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது.
சென்னை மாநகரில் மட்டும் இந்த மூன்று நாட்களில் ரூ 4.16 கோடியைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது கோச்சடையான். தமிழகத்தில் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.