வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் -திருமலை நவம் - TK Copy வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் -திருமலை நவம் - TK Copy

  • Latest News

    வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் -திருமலை நவம்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம
    செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சார்பில் உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட பதில் மனுவில் ஜூலை மாதம் 28 ஆம் திகதி­யன்று ஆலோ­சனை வழங்கிய உச்ச நீதி­மன்றம் மாகாண சபையின் பிர­தம செய­லா­ள­ருக்கு உத்­த­ர­வு­ பிறப்­பிக்கும் அதி­காரம் பொதுச்­சே­வைகள் ஆணைக்­கு­ழு­வுக்கே உண்டு.

    மாகாண முத­ல­மைச்சர் ஒருவர் இந்த உத்­த­ர­வு­களை பிறப்­பிக்க முடி­யாது என கடந்த 4 ஆம் திகதி உத்­த­ரவு வழங்­கி­யுள்­ளது. இந்த உத்­த­ரவின் மூலம் மாகாண சபை­யொன்றின் அதி­காரம் ஆதி­பத்­திய வலு, அது பாயக்­கூ­டிய எல்­லைகள் நிர்ண­யத்துக் காட்­டப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

    இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்­கான ஒரு பெறு­ம­தி­மிக்க முன் தீர்­வாக இலங்கை இந்­திய உடன்­ப­டிக்­கையின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை முறை இன்று பிள்­ளையார் பிடிக்­கப்போய் குரங்கு பிடித்த கதை­யாக ஆகிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதும், உரிக்க உரிக்க ஒன்றுமில்­லாத வெங்­காய உள்­ளீ­டா­கவும் பார்க்­கப்­ப­டு­கி­றது என்­பதும் புரிந்து கொள்­ளப்­பட வேண்டிய விடயம்.

    வட மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து ஆளுநர் சார்ந்த அதி­காரம் பிர­தம செய­லா­ளரின் கடமைக் கூறு­களும் அவரின் பணிப்­ப­தி­காரி முத­ல­மைச்­சரா? ஆளு­நரா? என்ற வாதப் பிர­தி­வா­தங்கள் வளர்ந்து கொண்டு வந்த நிலை­யில்தான் வடமாகாண முதல் அமைச்­ச­ருக்கும் பிர­தம செய­லா­ளருக்கும் இடை­யி­லான பனிப்போர் உரு­வா­கியது.

    முத­ல­மைச்சர் பிர­தம செய­லாளர் விடு­முறை எடுத்தல் மாகா­ணத்­துக்கு வெளியே செல்­லுதல், வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லுதல் போன்ற காலப்­ப­கு­தி­களில் முதல் அமைச்­ச­ருக்கு முன்­ன­றி­வித்தல் வழங்­கப்­பட வேண்டும். முதல் அமைச்­ச­ரி­னதும் அமைச்­சர்­க­ளி­னதும் சட்­ட­பூர்­வ­மான கட்­ட­ளை­க­ளு க்கு கீழ்ப்­ப­ணிந்து மாகாண நிர்­வா­கத்தை எந்த வகை­யிலும் பாதிக்­காத வகையில் நடந்து­கொள்ள வேண்­டு­மென

    சட்­டக்­கோ­வை­யொன்று முத­ல­மைச்சரால் வெளி­யி­டப்­பட்ட நிலையில், இச்­சட்டக் கோவை (சுற்­று­நி­ருபம்) மூலம் தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக பிர­தம செய­லாளர் விஜ­ ய­லக் ஷ்மி ரமேஸ், வட மாகாண முதல் அமைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் அடிப்­படை மனித உரிமை மீறல் மனு­வொன்றை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

    இம்­மனு மீதான விசா­ரணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம், 28 ஆம் திகதிகளில் உயர் நீதி­மன்றில் இடம்­பெற்­ற­போது பிர­தி­வா­ தி­யான வட­மா­காண முதல் அமைச்சர் விக்­கினேஸ்­வரன் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி கள் பதில் மனு­வொன்றை தாக்கல் செய்­திருந்­தனர்.

    அதில் வட­மா­காண சபையின் பிர­தம செய­லாளர் விடு­முறை எடுத்தல் மாகா­ணத்­துக்கு வெளியே செல்­லுதல் உட்­பட்ட விட­யங்­களில் முத­ல­மைச்­ச­ருக்கு முன்­ன ­றி­வித்தல் வழங்­கப்­பட வேண்­டுமென மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

    இதனை விசா­ரணை செய்த உயர் நீதி­மன்றம் வடக்கு மாகாண சபையின் நல்­லாட்­சிக்கு பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைக்க வேண்­டு­மென ஆலோ­சனை நல்­கி­ய­துடன், அடிப்­படை மனித உரிமை மீறல் தொடர்­பான மனு மீதான தீர்ப்பை கடந்த 4 ஆம் திகதி வரை ஒத்­தி­வைத்து கடந்த 4 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்று உத்­த­ரவு வழங்­கி­ய­போது பிரதம செய­லா­ள­ருக்கு உத்­தர­விடும் அதி­காரம் முதல் அமைச்­ச­ருக்கு இல்­லை­யென்ற உத்­த­ரவை உயர் நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்­தது.

    இந்த உத்­த­ரவின் மூலம் மீண்டும் தெளி­வு ­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள் யாதெனில் வட­மா­காண முதல் அமைச்­சரும் பிர­தம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் சமா­தா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும். ஏனைய மாகா­ணங்­களை போன்று பிர­தம செய­லா­ளரை நிய­மனம் செய்யும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கே உள்­ள­தோடு, அரச அதி­காரி ஒரு­வரை நிய­மிப்பது அல்­லது இடம்­மாற்­று­வது அரச சேவை ஆணைக்­கு­ழுவின் ஊடா­கவே நடை­பெற வேண்டும்.

    அந்த அதி­காரம் ஆணைக்­கு­ழு­வுக்­கே­யுள்­ளது என விளக்கம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. மாகா­ண­சபை முறை­யொன்று உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அதன் அதி­காரவலு, அதி­காரப் பகிர்வு, அதி­காரப் பிர­யோகம் சம்­பந்­த­மாக திருப்­தி­க­ர­மான முடிவு எதுவும் காணப்­ப­டாத நிலை­யி­லேயே தவிர்க்க முடி­யாத நிர்ப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் மாகாண சபை முறை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

    இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் பிள்­ளை­யாக பிறப்­பெ­டுத்த 13 ஆவது திருத்தம் அதன் அதி­கா­ரங்கள் தொடர்பில் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பினர் தமது கடு­மை­யான ஆட்­சே­ப­னையை அன்­றைய கால கட்­டத்தில் தெரி­வித்­தி­ருந்­தார்கள்.

    இந்­திய இலங்கை ஒப்­பந்தம் உரு­வா­கு­வ­தற்கு சில வாரங்­க­ளுக்கு முன் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தி­ விடு­தலைப் புலி அமைப்­பி­னரை தமது இல்­லத்­துக்கு அழைத்து ஒப்­பந்­தத்தை ஏற்­றுக்­கொள்­ளும்­படி நிர்ப்­பந்­தித்த போது அவர்கள் மாகாண சபை வடி­வ­மைப்­பி­லுள்ள வரை­ய­றை­க­ளையும் குறை­பா­டு­க­ளையும் சுட்­டிக்காட்­டி­ய­துடன் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் என்­பது ஒன்­றாக இணைந்­தவை.

    தமிழ்மக்­களின் தாயகம் இந்த ஐக்­கிய ஒன்­றி­ணைவை ஒப்­பந்­தத்தில் கூறு­வ­துபோல் கருத்து வாக்­கெ­டுப்­புக்கு விடு­வது அபா­ய­மா­னது என்றும், 13 ஆவது சரத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்கும் அதி­காரப் பகிர்­வா­னது தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு போது­மா­ன­தல்­ல­வென்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

    ஆனால் இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­ காந்­தியோ தமிழ்­மக்­களின் அபி­லாஷையை நோக்கி நகரும் பெறு­ம­தி­மிக்க தீர்வின் முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு அதை நோக்கி விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா எப்­பொ­ழுதும் துணை நிற்கும் என்று கூறி­யி­ருந்தார்.

    சில நெருக்­க­டிகள் நிர்ப்­பந்­தங்கள் கார­ண­மாக விடு­தலைப் புலிகள் ஒப்­பந்­தத்தை ஏற்­றுக்­கொண்­ட­போதும் பின்­னாளில் அவை முறி­வ­டைந்து அவர்கள் விலகிக் கொண்­டதும் இவர்­களின் எதி­ர­ணியைச் சார்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்­.டி­.எல்.எப்., ரெலோ போன்ற அமைப்­புக்கள் இந்­திய அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து விடு­பட்­டுப்­போக முடி­யாத சூழ்­நி­லையில் மாகாண சபையை ஏற்­றுக்­கொண்­ட­மையும் வர­லாற்று ரீதி­யான உண்­மைகள். 

    இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­யொன்றின் அமைப்பு முறை­யி­னையோ அதிகார வலு­வையோ வளர்த்­தெ­டுக்கும் எந்த கைங்­க­ரி­யத்­தையும் இலங்­கை­ய­ர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்­லை­யென்­பதே கசப்பான உண்­மை­யாகும்.

    மாறாக, மாகாண சபையின் அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்து­ விட்டு அதை­யொரு வெற்றுக் காகித இராச்சிய­மாக்க அர­சாங்கம் எடுத்­துக்­கொண்ட முயற்­சி­களே அதி­க­மாகும். இதன் முதல் அத்­தி­யா­ய­மா­கவே 2006 ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்ற தீர்ப்­பின் படி வட­கி­ழக்குப் பிரிக்­கப்­பட்டு அதன் இன ரீதி­யா­னதும் பூகோள ரீதி­யான பலம் குறைக்­கப்­பட்­டது.

    1987ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதிய இலங்கை இந்­திய உடன்­ப­டிக்­கைக்கு அமைய தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் 16 வரு­டங்கள் இயங்கி வந்த நிலையில் இம்­மா­கா­ணங்­களின் இணைப்­பினை இரத்து செய்ய வேண்டு­மெனக்கோரி ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜயந்த விஜ­ய­சே­கர எல்.கே.வசந்த மற்றும் ஏ.எல்.முஹமட் புஹாரி ஆகி­யோ­ரினால் உச்ச நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டது.

    மேற்­படி வழக்கை விசா­ரணை செய்த முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா, நீதி­ய­ர­சர்­க­ளான நிஹால் ஜய­சிங்க, என்.கே.உத­ல­கம, ராஜ­பெர்­னாண்டோ அம­ர­துங்க ஆகி­யோரை உள்­ள­டக்­கிய உச்ச நீதி­மன்றில் வட­கி­ழக்கு மாகா­ணத்தின் இணைப்பு செல்­லு­ப­டி­யா­கா­தென தீர்ப்பு (16.10.2006) அன்று வழங்­கப்­பட்­டது.

    இவ்­வா­றா­ன­தொரு தீர்ப்பு வழங்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே மாகாண சபை முறையின் உள்­ள­டக்­கமும் அதி­கார வலுவும் சிதை­வ­டையத் தொடங்கி விட்­டன என்­பது மறை­மு­க­மான உண்மை.

    இதன் மறு­ப­திப்­பா­கவே திவு­நெ­கும சட்ட மூலத்தை நிறை­வேற்­றி­யமை மற்றும் வட மாகாண தேர்­த­லுக்­குமுன் 13 ஆவது திருத்­தத்­தி­லுள்ள அதி­கா­ரங்­களை குறைத்து விட வேண்­டு­மென்ற பிர­யத்­த­னங்கள், மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையோ, காணி அதி­கா­ரங்­க­ளையோ வழங்க நாம் தயா­ரா­க­வில்­லை­யென அர­சாங்கம் பகி­ரங்­க­மாக அறி­வித்த எத்­தனம் என்­ப­வற்றின் இன்­னு­மொரு வடி­வ­மாக இன்று பிர­தம செய­லாளர் விவ­காரம் அமைந்துள்ளது. 

    மேலே எடுத்­துக்­காட்­டப்­பட்ட எல்­லா­வகை எத்­த­னங்­களும் மாகாண சபை முறையின் இருப்­பு­மு­றையை இல்­லாது ஒழிப்­ப­தற்கோ அல்­லது பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்காக எடுத்த முயற்­சி­க­ளா­கவே கரு­தப்­பட வேண்டும்.

    2012 ஆம் ஆண்டு திவி­நெ­கும சட்­ட­மூ­லத்தால் ஏற்­பட்ட பிரச்­சினை மாகாண சபையின் அதி­கார வன்­மையை குறைக்கும் ஒரு முயற்­சி­யா­கவே கரு­தப்­பட்ட கார­ணத்­தினால் எதிர்க்­கட்­சிகள் அனைத்தும் ஒன்­று­கூடி அச்­சட்­ட­மூ­லத்தை எதிர்க்க முற்­பட்­டன.

    திவி­நெ­கும சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்ட ஏக காலத்தில் வடக்கு மாகாண சபை உட்­பட்ட அனைத்து மாகாண சபையின் ஆத­ரவு தேவைப்­பட்ட நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் விதப்­பு­ரை­யுடன் சட்­ட­மூ­லத்தை அங்­கீ­க­ரிக்க முடி­யு­மென்ற நிலைப்­பாட்டை அரசு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­த­மையும் இதை ஆட்­சே­பித்துக் கொண்ட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் 2.10.2012 மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்­கல்­செய்த ரிட்­ம­னுவில்,

    திவி­நெ­கும சட்ட மூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்­பதை வட மாகாண ஆளுநர் பிர­தி­ப­லிக்க முடி­யாது. எனவே ஆளுநர் கருத்து வெளி­யி­டு­வதை தடை செய்­யு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்ட ரிட்­ம­னுவும் அதன் பின்னே திவி­நெ­கும சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்ட விதமும் மாகாண சபை­யொன்றின் அதி­கா­ரப்­போக்கு இதன்­மூலம் குறைத்து விடப்­பட்ட நிலையும் வட­கி­ழக்கு மக்கள் தெளி­வாக அறிந்து கொண்ட விவ­கா­ரங்­க­ளாகும்.

    இதற்குப் பின் இன்­னு­மொ­ரு­படி முன்­னேறி வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­னமே, மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பிய்த்து எடுத்­து­விட வேண்­டு­மென்ற தீவி­ரத்­துடன் தென்­னி­லங்கை இன­வாதச் சக்­திகள் பல்­வேறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­ட­மையும் மாகாண சபை முறை­யொன்றின் அதி­கார வலுவை இல்­லாது ஒழிக்கும் ஒரு செயல்­முறை சார்ந்த நட­வ­டிக்கை பாரா­ளு­மன்­றத்தின் மூலம் கொண்­டு­வர வேண்­டு­மென ஒரு குழு சார்ந்­த­வர்கள் எடுத்த முயற்­சி­களும் தெரி­யப்­பட்ட விட­யமே.

    வட மாகாண சபை தேர்தல் நடத்­தப்­ப­டு­மானால் அது இரண்­டா­வது ஈழத்­துக்­கான போர். இதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. மாகாண சபை முறையை முற்­றாக ஒழிக்க வேண்டும் என தென்­னி­லங்கை தீவி­ர­வாத சக்­திகள் குரல் கொடுத்­தமை புலி­களைப் பல­வீ­னப்­ப­டுத்த கொண்­டு­வ­ரப்­பட்ட 13 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­ல­மா­னது புலிகள் ஒழிக்­கப்­பட்ட இப்­போது தேவை­யில்லை.

    இந்­தி­யா­வினால் பல­வந்­த­மாக திணிக்­கப்­பட்ட அர­சியல் திருத்தச் சட்டம் முற்­றாக ஒழிக்­கப்­பட வேண்டும்'' என ஆளும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யும் அமைச்­ச­ரு­மா­ன விமல்­வீ ர­வன்ச உட்­பட்ட, இன­வாதக் குழுக்கள் 13 ஆவது திருத்­தத்தை இல்லாது ஒழிக்க எடுத்த முயற்­சிகள் எல்லாம் வடக்­கு­கி­ழக்கு மக்­க­ளுக்கு உள்ள சின்­ன­ள­வான அதி­காரப் பகிர்வின் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்ச்சி நிலைப்­பா­டு­ களைக் காட்­டு­வ­ன­வா­கவே இருந்து வந்­துள்­ளன.

    இனப்போர் மும்­முரம் அடைந்து போயி­ருந்த கால கட்­டத்தில் (2009) இலங்­கை­ய ­ர­சாங்­க­மா­னது, 13 ஆவது திருத்­தத்­துக்கு மேலாக தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை வழங்­க­விருக்­கி­றோ­மென சர்­வ­தே­சத்­துக்கும் இந்­தியா­வுக்கும் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தார்கள்.

    ஆனால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின் வாக்­கு­று­திகள் கொஞ்சம் கொஞ்­ச­மாக கரைந்­துபோய் ஒன்­று­மே­யில்­லை­யென்ற பூஜ்­ஜிய நிலைக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் இருக்கும் மாகாண சபை முறையின் ஒவ்­வொரு அல­கு­க­ளையும் இடுப்­பொ­டிந்து போடும் நிலை­மை­களே உரு­வா­கி­யுள்­ளன என்­பதை கடந்த கால அனு­ப­வங்கள் காட்­டு­கின்­றன.

    வட­மா­காண சபை உரு­வாக்­கத்­துக்குப்பின் மூன்று விட­யங்கள் மாகாண சபையின் செயற்­பாடு ரீதி­யான போக்­குக்கு தடை விதிக்கும் பிர­க­ட­னங்­க­ளாக ஆகிக்­கொண்­டுள்­ளன. ஒன்று காணி பொலிஸ் அதி­காரம் சார்ந்தவை இன்­னொன்று ஆளு­நரின் அதி­காரம் மற்றொன்று இன்­றைய பிர­தம செய­லா­ளரின் கட­மைப்­பாடு, கட்­டுப்­பாடு சார்ந்த விட­யங்­க­ளாகும்.

    மாகாண சபையின் முழு­மை­யான உரு­வாக்­கத்­துக்கு காணி பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கையை வட மாகாண முதல் அமைச்சர் ஜனா­தி­ப­தி­யி டம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விடுத்­த­ போதும் அது கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

    இவ்­விரு அதி­கா­ரங்­களும் மாகாண சபைக்கு வழ ங்க நாம் தயா­ரில்­லை­யென்ற நிலைப்­பாட்­டி­னையே அர­சாங்கம் பகி­ரங்­க­மாக அறி­வித்து வந்­துள்­ளது. இதற்­குரிய காரணம் இவ்விரு அதி­கா­ரங்­க­ளையும் மாகாண சபைக்கு வழங்கி விட்டால் மத்­திய அர­சாங்­கத்தின் அதி­காரத் தன்மை பல­மி­ழந்­து­விடும் மறு­புறம் வடக்­குக்­கான பூரண சுயாட்­சிக்கு வழி­வ­குத்து விடு­மென்ற அர­சாங்­கத்தின் பயப்பாடு கார­ண­மா­கவே வடக்கு கிழக்கு மாகாண சபை­க­ளுக்கு இவ்­விரு அதி­கா­ரங்­க­ளையும் வழங்க அரசு மறுத்­தது.

    இத­ன் இன்­னொரு முரண்­பா­டாக காட்­டப்­பட்டு வந்த விடயம் வட மாகாண ஆளு­நராக சிவில் அதி­காரி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும். இரா­ணுவ அதி­கா­ரிகள் பொருத்­த­மா­ன­வர்கள் அல்லர் என்ற சுட்­டிக்­காட்­டல்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உட்­பட்ட தமிழ்த் தரப்­பினர் செய்­தி­ருந்த போதும் அவை எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் அர­சாங்­கத்தால் உதா­சீனம் செய்யப்பட்டன.

    மாத்திரமன்றி வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் புதிய ஆளுநராக சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதி மீறப்பட்டு மீண்டும் இரண்டாம் பருவ காலத்துக்கு வட மாகாண ஆளுநருக்கு நீடிப்பு வழங்கப்பட்டமை உட்பட்ட எல்லாக் கைங்கரியங்களும் மாகாண சபை முறையொன்றின் இயங்கு முறையை பல வீனப்படுத்தும் தடை செய்யும் நடவடிக்கைகளாகவே இருந்து வந்துள்ளது.

    இத்தகைய தளம்பல் நிலைப்போக்கு நிலவி வரும் நிலையில்தான் பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமை ச்சருக்கு இல்லையென்ற உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    ஒரு மாகாண சபையின் நீதித்துறை நிர்வாகத்துறை சட்ட வாக்கத்துறை என்ற மூன்று துறைகளிலும் போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படவில்லையாயின் அம்மாகாண சபை முறையானது. ஒரு சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு என எவ்வாறு கூற முடியுமென்பதே கேள்வியாகும்.

    நிர்வாக இயந்திரத்தின் பிரதம கருவியாக விளங்குபவர் பிரதம செயலாளர் என்பது சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விடயமாகும். நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று வாண்மை கொண்ட செயலாளர் மாகாண நிர்வாகத்தை செம்மையாகக் கொண்டு செல்ல வேண்டுமாயின் அவரும் அவர் சார்ந்த அதி காரங்களும் கடமைகளும் மக்கள் மயப்பட்டதாக இருக்க வேண்டும்.

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு வருடன் உடன்பாடு காணப்படாத நிலை யொன்று இருக்குமானால் அது மாகாண சபையின் முழுமையை கெடுத்து விடுவதுடன் மாகாண சபை முறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உண்டு பண்ணும் காரியமாகவே ஆகிவிடும் இந்த நிலையே இன்று உருவாகியிருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் -திருமலை நவம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top