18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் ஒர் வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்கால சந்ததியினரைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களையும் ஒரே இரவில் அல்லது ஒர் அரமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் உடைய தேர்தலாக கருதப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஒரு தசாப்த காலமாக நாட்டில் நல்லாட்சி மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்பட உள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் காணப்படும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பலர் இந்த ஊடக அறிக்கையில் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.