சரித்திர நாயகன் மோடி - TK Copy சரித்திர நாயகன் மோடி - TK Copy

  • Latest News

    சரித்திர நாயகன் மோடி

    மோடி தர்பார் ஆரம்பம் சரித்திர வெற்றி பெற்று
    உலக தலைவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் 15வது பிரதமர் பதவியை அலங்கரிக்க போகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக்காண்போம்.
     

    பிறப்பு 

    இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் ”தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி” என்பவருக்கும் ”ஹூராபேன்னுக்கும் நரேந்திர மோடி” அவர்களுக்கும் 1950 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி மகனாக பிறந்தார். ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர். 

    ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி 

    தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்த தன்னுடைய தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். தன்னுடைய எட்டு வயதிலேயே, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் 

    உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால் குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். 

    அரசியல் வாழ்க்கை 

    சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிறக்கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-ன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார். 

    குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998ம் ஆண்டு குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

    குஜராத் முதல்வராக மோடி 

    தனக்கு கொடுத்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001ம் ஆண்டு அக்டோபர் 6 ம் திகதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாக் கட்சியின் தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7ம் திகதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். 

    பின்னர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27ம் திகதி 2002 ம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத்தின் முதல்வர் பதவியை அலங்கரித்தார். 

    இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடி மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார். 

    இன்று இந்தியாவின் முதல்வராக 

    2014ம் ஆண்டு 16ம் மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதாகட்சி முதன்மையேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதாகட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

    ஏப்ரல் 2014 முதல் மே 2014வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் எட்டு திக்குகளில் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

    சோதனைகளை கண்டு ஓடாமல் சவால்களை துணிந்து எதிர்க்கொண்டு, கட்சிக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்த மோடி அவர்கள், வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் 15வது பிரதமராக மே 21ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சரித்திர நாயகன் மோடி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top