அஞ்சும் அரசாங்கம் - செல்­வ­ரட்ணம் சிறி­தரன் - TK Copy அஞ்சும் அரசாங்கம் - செல்­வ­ரட்ணம் சிறி­தரன் - TK Copy

  • Latest News

    அஞ்சும் அரசாங்கம் - செல்­வ­ரட்ணம் சிறி­தரன்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


    செல்­வ­ரட்னம் சிறி­தரன் ஊடக சுதந்­திரம்
    என்­பது ஒரு ஜன­நா­யக நாட்டின் அடிப்­படைத் தேவை­யாகும். ஊடக சுதந்­திரம் அடக்­கி­யொ­டுக்­கப்­ப­டு­வதன் மூலம், கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்ற சுதந்­திரம் மட்­டு­மல்­லாமல், கருத்­துக்­களை அறியும் உரி­மையும், உண்­மை­யான தக­வல்­களைப் பரி­மாற்றம் செய்யும் அடிப்­படை உரி­மையும் அற்றுப் போக வழி சமைக்­கப்­ப­டு­கின்­றது.

    இன்று நாளுக்கு நாள் தகவல் பரி­மாற்றத் தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து சென்று கொண்­டி­ருக்­கின்­றது. இதனால், ஊட­க வி­ய­லா­ளர்கள் மட்­டு­மல்­லாமல் சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­ன­ராலும், தகவல் பரி­மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

    பத்­தி­ரிகை, தொலைக்­காட்சி, வானொலி என்ற வழ­மை­யான ஊட­கங்­க­ளுக்கு மேல­தி­க­மாக இணையம் வழி­யான ஊடகச் செயற்­பாடு இன்று அதி முக்­கிய இடத்தைப் பிடித்­தி­ருக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல் சமூக ஊட­கங்கள் என்ற புதிய பிரிவும் இணையம் வழி­யாக உரு­வாகி தகவல் பரி­மாற்­றத்தின் பரப்­ப­ளவை அதி­க­ ரிக்கச் செய்­தி­ருக்­கின்­றது.

    மொத்­தத்தில் பொது­ மக்­களின் தகவல் பரி­மாற்றம், கருத்துப் பரி­மாற்றம் என்­ப­வற்றில் பத்­தி­ரிகை, வானொலி, தொலைக்­காட்சி போன்ற மர­பு­வ­ழி­யான ஊட­கங்கள் செலுத்­தி­யி­ருந்த ஏக­போக உரிமை இன்று வேக­மாக மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றது. இதில் சமூக ஊட­கங்கள் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாகத் திகழ்­கின்­றன.

    இந்த நிலை­மை­யா­னது, ஒரு வகையில் பொது ஊட­கங்­களின் செயற்­பா­டு­க­ளையும், மற்­று மொரு வழியில் அவற்றின் இருப்­பை­யும்­கூட கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றதோ என்று சந்­தே­கிக்கச் செய்­தி­ருக்­கின்­றது என்­று­கூடச் சொல்­லலாம் போல தெரி­கின்­றது.

    தகவல் பரி­மாற்­றத்தின் தொழில்­நுட்ப வளர்ச்­சியும், அது தொடர்­பான சாத­னங்­களில் குறிப்பாக கைத்­தொ­லை­பே­சி­களில் ஏற்­பட்டு வரு­கின்ற நவீன முறை­யி­லான பல­த­ரப்­பட்ட வச­தி­களும், ஊட­க­வி­ய­லாளர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு சவா­லாக அமைந்­தி­ருக்­கின்­றன என்றும் கூறலாம்.

    இந்த வச­தி­களைப் பயன்­ப­டுத்தி ஊட­கவி­ய­லா­ளர்கள் தமது செயற்­தி­றன்­களை மேம்­ப­டுத்திக் கொள்­ளவும், வேக­மாகச் செயற்­ப­டவும் வழி­யேற்­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

    இத்­த­கைய ஊடகப் போக்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் புதிய புதிய உத்­தி­களை, செயன் முறை­களை, நவீன தொழில்­நுட்­பங்­களைப் பயில வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

    இத்­த­கைய பயிற்­சி­களைப் பெறா­த­வர்கள் அல்­லது பெற முடி­யா­த­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாகத் தொடர்ந்து பணி­யாற்ற முடி­யாத நிலை­மைக் குத்தள்­ளப்­பட்டு வரு­கின்­றார்கள். நவீன வச­தி­க­ளுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஊட­கச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு ஈடு­கொ­டுத்துச் செயற்­ப­டு­வ­தற்கு, அவர்­க­ளுக்கு இந்தத் தொழில்­நுட்­பங்­க­ளி­லான பயிற்­சியும்,

    அறிவு மேம்­பாடும் இன்று அவ­சி­ய­மா­கி­யி­ருக்­கின்­றது. காலத்­துக்குக் காலம் இத்­த­கைய பயிற்­சி­களை, ஊடக நிலை­யங்கள் அல்­லது நிறு­வ­னங் கள், தமக்­காகப் பணி­யாற்­று­கின்ற ஊழி­யர்­க­ளான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றன. ஆனால், தொழில்­நுட்­பத்தின் அசுர வளர்ச்­சி­யா­னது,

    இந்த ஊடக நிலை­யங்கள், அல்­லது ஊடக நிறு­வ­னங்­க­ளையும் பின்னால் தள்­ளி­விட்டு வேகமாக முன்­னேறிச் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. இந்த வகையில் ஊடக நிறு­வ­னங்­களும் கூட மாறி வரு­கின்ற உலகப் போக்­கிற்கு ஈடு கொடுக்க முடி­யாமல் திணற வேண்­டிய நிலை­மையும்,

    தங்­க­ளையும் அந்தப் போக்­கிற்கு ஈடு­கொ­டுக்­கத்­தக்க வகையில் மாற்றிக் கொண்டு செயற்­பட வேண்­டிய நிர்ப்­பந்த நிலை­மைக்கும் ஆளாகி வரு­கின்­றன. எனவே, வேகம் மிகுந்த வளர்ச்­சிக்கு, அந்தத் துறையில் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள அல்­லது முன்னோ­டி­யாகத்திகழ்­கின்ற வெளி­நாட்­ட­வர்­களின் உதவி அவ­சி­ய­மா­கின்­றது.

    ஊட­கங்­களும் ஊட­கத்­து­றையும் உலக வளர்ச்சிப் போக்­கி ற்கு ஏற்ப மாற்­ற­ம­டைந்­தி­ருக்க வேண்டும் என்ற தேவை அர­சுக்கு இருப்­ப­தாகத் தெரி­ய­வி ல்லை. அவ்­வா­றான தேவை இருந்­தா­லும்­கூட அத்­த­கைய பயிற்­சி­க­ளுக்­கான உத­வி­களை அர­சாங்கம் உட­ன­டி­யாகச் செய்ய முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

    இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களைச் சேர்ந்த ஊடக வளர்ச்­சிக்­காகச் செயற்­பட்டு வரு­கின்ற நிறு­வ­னங்கள் இலங்­கையின் ஊட­கத்­துறை வளர்ச்­சிக்கு உதவி புரிய முன்­வந்து செயற்­ப­டு­கின்­றன.

    இந்த நிறு­வ­னங்கள், உழைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தொழில் வாண்மை விருத்­திக்­கான பயிற்­சி­களை அவ்­வப்­போது வழங்கி வரு­கின்­றன. அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தொடர்­பான அரசின் அணு­கு­முறை அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் அல்­லது தொண்டு நிறு­வ­னங்கள்

    அர­சாங்கம் மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய சேவை­களில் ஏற்­ப­டு­கின்ற இடை­வெ­ளியை நிரப்­பு­வ­தற்­காகக் கைகொ டுத்துச் செயற்­ப­டு­வ­தற்­காக மக்கள் மத்­தியில் - சமூ­கத்தில் பிர­வே­சிக்­கின்­றன.

    குறிப்­பாக மோச­மான ஒரு யுத்­தத்தின் பின்னர், வசதி படை த்­த­வர்­களும், வச­தி­மிக்க நாடு­களும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக, அரச சேவையில் ஏற்­பட்­டுள்ள இடை­வெ­ளி­களில், இறங்கப் பணி­யாற்றி இந்த நாட்டின் அர­சுக்கும் மக்­க­ளுக்கும் பேரு­தவி புரிந்­தி­ருக்­கின்­றன.

    இருந்­த­போ­திலும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக அர­சாங்கம் கடைப்­பி­டித்­தி­ருந்த உத்­திகள் மற்றும் செயற்­பா­டுகள் பற்­றிய தக­வல்கள் விப­ரங்கள் வெளியில் தெரிய வராமல் பார்த்துக் கொள்ள வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

    ஆனால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளிலும், யுத்த பிர­தே­சங்­க­ளிலும் பொது­மக்­க­ளு­டைய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காகப் பணி­யாற்­றிய தொண்டு நிறு­வ­னங்கள் மற்றும் அரசசார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஊடாக அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்கள் பல அப்­போது வெளிச்­சத்­திற்கு வந்து கொண்­டி­ருந்­தன.

    யுத்த முனை பிர­தேசங்­களில் இருந்தும். அவற்றை அண்­டிய பிர­தே­சங்­களில் இருந்தும் அவ்­வாறு கசிந்­தி­ருந்த அர­சாங்கம் மற்றும் அரச படை­களின் இர­க­சி­யங்கள் வெளி­யு­லகில் பெரும் பாதிப்பை அர­சுக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

    தனது இர­க­சி­யங்கள் இவ்­வாறு வெளியில் கசி­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் யுத்த முனை பகு­தி­களில் பணி­யாற்­றிய பல தொண்டு நிறு­வ­னங்­களை அதி­ர­டி­யாக வெளி­யேற்­றி­யி­ருந்­தது.

    சர்­வ­தேச செஞ்­சி­லு­வைக்­குழு, யு.என்.எச்.சி.ஆர். என்ற அக­தி­க­ளுக்­கான ஐ.நா. நிறு­வனம் உள்­ளிட்ட ஐ.நா. மன்ற நிறு­வ­னங்­க­ளை­யும்­கூட அர­சாங்கம் இவ்­வாறு யுத்த முனை பகு­தி­களில் இருந்தும், இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்குத் தஞ்­ச­ம­ளிக்­கப்­பட்ட பகு­தி­களில் இருந்தும், பின்னர் மீள்­கு­டி­யேற்றப் பகுதி­களில் இருந்­தும்­கூட வெளி­யேற்­றி­யி­ருந்­தது.

    அர­சாங்­கத்தின் பல நட­வ­டிக்­கைகள் குறித்த தக­வல்கள் வெளி­யு­ல­கத்­திற்கு இத்­த­கைய அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் அல்­லது தொண்டு நிறு­வ­னங்ளின் ஊடா­கவே வெளி­வந்­தி­ருந்­தன என்­பதை மறுக்க முடி­யாது.

    இவ்வாறு இர­க­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டதை, அர­சாங்கம் தேசிய பாது­காப்­புக்கு ஏற்­பட்ட ஒரு பாதிப்­பாக, தனது கௌர­வத்­திற்கு அதி­கார பலத்­திற்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஓர் இழுக்­காகக் கருதி ஒரு வகையில் ஆத்­தி­ரமும் கொண்­டி­ ருந்­தது. இந்தப்பின்­ன­ணி­யி­லேயே ஜனா­தி­பதி செய­ல­ணிக்­குழு என்ற அமைப்பை உரு­வாக்கி,

    யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­க ளில் பணி­யாற்­றிய அல்­லது அவ்­வாறு பணி­யாற்­று­வ­தற்கு முன்­வந்­தி­ருந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் எண்­ணிக்­கை­யையும், அவற்றின் செயல் வகை­க­ளையும், அவைகள் செயற்­பட வேண்­டிய பிர­தே­சங்­களைக் கிராம ரீதி­யா­கவும் மட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

    இவ்­வாறு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­களை மட்­டுப்­ப­டுத்­தி­ய­தற்கு தேசிய பாது­காப்பே காரணம் என்று எவரும் எதிர்த்து வாதாட முடி­யாத வகையில் காரணம் காட்­டி­யி­ருந்­தது. இப்­போதும் அதனைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றது.

    தேசிய பாது­காப்­புக்குப் பாத­க­மான முறையில் நிறு­வ­னங்கள் செயற்­பட்­டி­ருக்­கலாம். இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. எரி­கின்ற வீட்டில் பிடுங்­கி­யது இலாபம் என்று, யுத்­தத்தின் பின்­னரும் ஒரு குழப்­ப­க­ர­மான நிலை­மையில் நாட்டின் இரா­ணுவ, அர­சியல், பொரு­ளா­தார இர­க­சி­யங்­களை இலங்கை மீது ஆர்வம் கொண்­டுள்ள நாடுகள் அறி­வ­தற்கு முனைந்­தி­ருக்­கலாம்.

    ஆனால், இத்­த­கைய நிறு­வ­னங்­களை அடை­யாளம் கண்டு அல்­லது சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் அகற்­றி­யி­ருக்க வேண்டும். ஆனால் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை வெளி­யேற்ற வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் பொது­வான நட­வ­டிக்­கை­யா­னது,

    உண்­மை­யான சேவை அடிப்­ப­டையில் பணி­யாற்­றிய தொண்டு நிறு­வ­னங்கள் அல்­லது பாதிக்­கப்­பட்ட மக்­களின் அத்­தி­யா­வ­சிய அடிப்­படை தேவை­களைப் பூர்த்தி செய்த நிறு­வ­னங்­க­ளையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் இருந்து வெளி­யேற்றச் செய்­து­விட்­டது.

    யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் அரச சார்­பற்ற நிறு­வ­னங் கள் அதைச் செய்­யக்­கூ­டாது, அங்கு செல்லக் கூடாது, இங்கு செல்­லக்­கூ­டாது என்ற வகை யில் கெடு­பி­டி­களைப் பிரயோ­கித்து வரு­கின்­றது.

    இவ்­வ­ள­வுக்கும் எந்­தெந்த நிறு­வ­னங்கள் மக்கள் மத்­தியில் பணி­யாற்­றலாம், என்ன பணிகளில் ஈடு­ப­டலாம் என்­பதை முன்­கூட்­டியே தீர்­மா­னித்து அர­சாங்க அமைப்­பா­கிய ஜனா­தி­பதி செய­ல­ணிக்­கு­ழுவே அனு­மதி வழங்­கி­யி­ருக்­கின்­றது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது, இந்த வகை­யில்தான் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு,

    அவர்­களின் தொழில் விருத்­திக்­கான பயிற்­சி­களை அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் வழங்கக் கூடாது என்ற புதிய கட்­டுப்­பாட்டை அரசாங்கம் கொண்டு வந்­தி­ருக்­கின்­றது. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றது என்ற கார­ணத்­திற்­காக இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமக்­கு­ரிய தொழில் பயிற்­சியைப் பெறு­வது எந்த வகையில் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­கலாம் என்ற கேள்­விக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பதி­லில்லை.

    ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க விளக்­கமும் இல்லை. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் ஊட­கப்­ப­யிற்சி வழங்கக் கூடாது என்று அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் அல்­லது அமெ­ரிக்கா போன்ற வல்­ல­ரசு நாடு ஒன்றின் சந்­தே­கத்­திற்­கு­ரிய வகை­யி­லான நிதி­யு­த­வி­யி­லான பயிற்சி வழங்­கு­கின்ற குறிப்­பிட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்கம் கட்­ட­ளை­யி­டு­வது அல்­லது கட்­டுப்­ப­டுத்­து­வது என்­பது ஒரு விடயம்.

    ஆனால் குறிப்­பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஊடகப் பயிற்சி பெறக் கூடாது, பெற்­று­விடக் கூடாது என்று மறை­மு­க­மாகத் தடை­போ­டு­வதை என்­னென்று சொல்­வது? தேசிய பாது­காப்பில் உண்­மை­யான அக்­கறை கொண்­டுள்ள ஓர் அர­சாங்கம் இவ்­வாறு இன ரீதி­யாகச் செயற்­ப­டு­வது என்­பது ஒரு ஜன­நா­யக நாட்டில் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஒரு நட­வ­டிக்­கை­யாகத் தெரி­ய­வில்லை.

    இது இன ரீதி­யான ஓர் அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­யா­கவே அப்­பட்­ட­மாகத் தெரி­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் யுத்தம் ஏற்­ப­டு­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருந்த இனப்­பி­ரச்சினைக்கு ஓர் அர­சியல் தீர்வு கண்­டிருக்க வேண்­டிய கட­மையில் இருந்து அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கின்­றது.

    அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்கும், சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­ ப­தாக அர­சாங்கம் கூறலாம்.

    அத்­த­கைய கூற்­றுக்கள் அர­சியல் நோக்கம் கொண்­ட­வை­க­ளாக, அர­சியல் பிர­சார செயற்­பாட்டு உத்­தி­களின் வெளிப்­பா­டா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும் என்ற உண்­மை­யான தேசிய நன்­மையைக் கருத்திற் கொண்ட நாட்­டுப்­பற்­றுள்ள நட­வ­டிக்­கை­யாக அதனைக் கணிக்க முடி­ய­வில்லை.

    பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டுகின்ற அனை த்து நட­வ­டிக்­கை­களும், செயற்­பா­டு­களும் கண்துடைப்பு நட­வ­டிக்­கை­களா­கவே இது­வ­ரையில் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன.

    அது மட்­டு­மல்­லாமல் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள மக்கள் வாழ்­கின்ற வட க்கு கிழக்குப் பிர­தேசங்­களில் அதிலும் குறிப்­பாக கர்ண கடூ­ர­மாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வட­ப­கு­தியில் தேசிய பாது­காப்பைச் சாட்டி, இரா­ணுவ தேவைக்­காக

    பொது­மக்­களின் காணி­களை அப­க­ரிப்­பது, சமூகச் செயற்­பா­டு­களில் அத்­து­மீறி இரா­ணுவ கட்­ட­மைப்பின் ஊடாகத் தலை­யிட்டு சிவில் வாழ்க்­கையில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வது, சிவில் நிர்­வா­கத்தைக் குழப்­பி­ய­டிப்­பது போன்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

    இதனால் அங்­குள்ள மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள். அத்­துடன், அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கைகள் மீது அள­வற்ற வெறுப்­ப­டைந்­தி­ருக்­கின்­றார்கள். இவ்­வாறு சொல்­லுக்கும் செய­லுக்கும் முரண்­பட்ட வகையில் காரி­யங்கள் இடம்­பெற்றுக் கொண்­டிருக்­கின்ற வட­ப­குதி நிலை­மை­களை தமிழ் ஊட­கங்­களும், ஊட­க­வி­ய­லா­ளர்­களும் வெளியில் கொண்டு வரு­கின்­றார்கள்.

    வெளியில் முழு­மை­யாகக் கொண்டு வந்­து­வி­டு­வார்கள் என்ற அச்சம் கார­ண­மா­கத்தான் ஊடக அடக்­கு­முறை நட­வ­டிக்­கையை அரசு அந்தப் பகு­தியில் மேற்­கொண்­டி­ருப்­ப­தாக எண்ண வேண்­டி­யி­ருக்­கின்­றது.

    நாட்டில் யாழ்ப்­பா­ணத்தில் மாத்­தி­ரமே ஒப்­பீ ட்­ட­ளவில் அதிக எண்­ணிக்­கை­யி­லான பிராந்­திய பத்­தி­ரி­கைகள் வெளி­வ­ரு­கின்­றன. பிராந்­திய ரீதி­யி­லான ஊடகச் செயற்­பாடும் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே அதி­க­மாக இருக்­கின்­றது.

    இந்த நிலையில் அந்தப் பிர­தே­சத்தில் இடம்­பெற்று வரு­கின்ற அர­சாங்­கத்தின் மறை­முக நட­வ­டிக்­கைகள், அடக்­கு­முறைச் செயற்­பா­டுகள் பற்­றிய தக­வல்கள் வெளி­வ­ராமல் தடுப்­ப­தற்­கா­கவே ஊட­கங்கள் மீதும், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் அர­சாங்கம் நெருக்­கு­தல்­களைப் பிர­யோகிக்­கின்­றது என்று பலரும் நம்­பு­கின்­றார்கள்.

    அர­சாங்­கத்தின் காணிஅப­க­ரிப்பு நட­வ­டிக்­ கை­யா­னது, வட­ப­கு­தியில் ஒரு கொந்­த­ளிப்­பான நிலை­மை­யையே உரு­வாக்­கி­யி­ருக்­கின்றது. காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராகத் தொடர்ச்­சி­யாக மக்கள் குரல் கொடுத்து வரு­கின்­றார்கள்.

    அதற்கு எதி­ரான போராட்­டங்­களும் தொட ர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிலை­மைகள் பற்­றிய தக­வல்கள் வெளி­வரக் கூடாது. அவ்­வாறு வெளி­வரச் செய்யும் ஊடகச் செயற்­பா­டு­களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்­ப­தற்­காக, ஊட­கங்கள் மீதும்,

    ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் அர­சாங்கம் மறை­மு­க­மான ஒரு போரைத் தொடங்­கி­யி­ருக்­கின்­றதோ என்று யாழ். ஊடக சமூகம் சந்­தேகம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. ஊடகத் தொழில் பற்­றிய பயிற்­சியைப் பெற்று வட­ப­குதி ஊட­க­வி­ய­லா­ளர்கள் நவீன முறையில் செயற்­பட்டால்

    தனது இர­க­சி­யங்கள் பல வெளியில் வந்­து­வி­டுமோ என்று அர­சாங்கம் அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கத்தை, அர­சாங்­கத்தின் நேரடி கட்­டுப்­பாட்டில் இயங்­கு­கின்ற கட்­ட­மைப்­புக்­களின் அண்­மைக்­காலச் செயற்­பா­டுகள் ஏற்­ப­டுத்தியிருக்­கின்­றன.

    யாழ் ஊடக­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ட்ரான்ஸ்­பெ­ய­ரன்சி இன்­டர்­ந­ஷனல் என்ற அரச சார்­பற்ற நிறு­வனம் புல­னாய்வு ஊடகச் செயற்­பாடு தொடர்­பான செய­ல­மர்வு ஒன்றை நடத்­து­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தது.

    இந்தச் செய­ல­மர்வு பொலன்­ன­று­வையில் நடத்­தப்­பட்­ட­போது, அந்தச் செய­ல­மர்வு நடை­பெற்ற இடத்தைச் சுற்றி வளைத்த கும்பல் ஒன்று யாழ்ப்­பா­ணத் தில் இருந்து வந்­துள்ள புலி­க­ளுக்குப் பயிற்­சி­ய­ளிக்­கப்­ப­டு­வ­தாகக் கோஷ­மிட்டு ஆர்ப்­பாட்டம் செய்து அதனை நடக்­க­வி­டாமல் தடுத்து நிறுத்­தி­யி­ருந்­தது.

    இதே­போன்று நீர்­கொ­ழும்பில் நடை­பெற்ற அதே விடயம் சம்­பந்­த­மான மற்­று­மொரு செய­ல­மர்­வையும் கும்பல் ஒன்று ஆர்ப்­பாட்டம் செய்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் ஏற்­பாட்­டா­ளர்­க­ளையும் அச்­சு­றுத்தி குழப்­பி­ய­டித்து தடுத்து நிறுத்­தி­யி­ருந்­தது.

    அதன் பின்னர் கடை­சி­யாக கொழும்பில் உள்ள இத­ழியல் கல்வி நிறு­வ­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த டிஜிட்டல் பாது­காப்பு தொட ர்­பி­லான ஊடகச் செய­ல­மர்­வுக்­காக யாழ்ப்­பா­ணத்தில் இருந்து புறப்­பட்டுச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் பயணம் செய்த வாகனம் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து ஓமந்தை வரையில் பின்­தொ­ட­ரப்­பட்டு,

    பின்னர் ஓமந்­தையில் வைத்து அவர்கள் மீது கஞ்சா கடத்­தி­ய­தாகக் குற்றம் சுமத்தி தடுத்து நிறுத்தி, அவர்கள் கொழும்பு செல்­வதை இராணு­வத்­தி­னரும் பொலி­சாரும் தடுத்­தி­ருந்­தனர்.

    அது மட்­டு­மல்­லாமல் பிர­யாணத் தடை கார­ண­மாகத் தாம­தப்­பட்­டி­ருந்த யாழ். ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வரு­கைக்­காகக் காத்­தி­ருந்த பின்னர் தாம­த­மாகத் தொடங்­கிய செய­ல­மர்வு நடை­பெற்ற இடத்திற்குச் சென்ற கும்பல் ஆர்ப்­பாட்டம் செய்து, அச்­சு­றுத்தி அதனை நடக்­க­வி­டாமல் தடுத்­தி­ருந்­தது.

    எனவே, யாழ். ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொழும்­புக்கு ஊடகப் பயிற்­சிக்­காகச் சென்­ற­போது அவர்கள் அந்தப் பயிற்­சியில் பங்­கு­கொள்­ளாமல் எப்­ப­டி­யா­வது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நன்கு திட்­ட­மிட்ட வகையில் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து கொழும்பு வரை­யிலும் கோர்­வை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தமை வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

    படை­யி­ன­ரு­டைய கோட்­டை­யா­கிய ஓமந்தை சோத­னைச்­சா­வ­டியில் கஞ்சா கடத்­தி­ய­தாக சோடிக்­கப்­பட்ட வகையில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­போது, அந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் துணி­வோடு அதனை எதிர்த்துச் செயற்­பட்­டி­ருந்­தார்கள். இதன் காரணமாகத்தான் ஊடகங்கள் மீதான அடக்குமுறை பற்றிய உண்மையான நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

    அது மட்டுமல்லாமல், இந்த அடக்கு முறை க்கு எதிராக வடக்கும் தெற்கும் இணைந்து ஒற்றுமையாக யாழ். நகரில் ஊடக சுதந்திரத்திற் காகக் குரல் கொடுக்கின்ற ஒரு நிலைமையும் உருவாகியிருந்தது என்று கூற வேண்டும்.

    ஊட­கங்கள் குறிப்­பாக தமிழ் ஊட­கங்கள் மீதும், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் திட்­டமிட்ட வகையில் சிவில் உடை தரித்த கும்­பல்­க ளின் ஆர்ப்­பாட்டச் செயற்­பாட்டு உத்­தியைப் பயன்­ப­டுத்தி அரசு அடக்­கு­மு­றையை ஏவி­விட்­டி­ருக்­கின்­றது.

    அடக்­கப்­பட்­ட­வர்கள் அல்லது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உரி­மைக்­காக ஜன­நா­யக வழியில் குரல் கொடுப்­ப­தற்­காக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட முயன்றால், பொது அமை­திக்குப் பங்கம் ஏற்படும், பங்கம் ஏற்படுத்தப்படுகின்றது எனக்கூறி, பொலி சார் அவர்களை சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றத்தின்உத்தரவில்தடுத்துவடுவார்கள்.

    ஆனால்பொலன்னறுவை, நீர்கொ ழும்பு, கொழும்பு ஆகிய இடங்களில் முன்னே ற்பாடாக பதாதைகளைத் தயார் செய்து கொண்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத் தவும், அவர்களுடைய செயலமர்வுகளைத் தடுத்து நிறுத்தவும் வருகின்ற கும்பல்களை,

    பொது அமைதிக்கு ஏற்படுகின்ற குந்தகம் எனக் கூறி பொலிசார் தடுத்து நிறுத்த நடவடி க்கைகள் எதனையும்எடுக்கவில்லை. சட்டத் தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிசார், அனை­வ­ரையும்சட்­டத்தின் கீழ் பாகு­பா­டின்றி

    பார்க்கவேண்­டிய பொலிசார் பக்­க­ச்சார்­பாக – ஊடக­வி­ய­லா­ளர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்குத் துணை­போ­யி­ருக்­கின்­றார்கள் என்­பது போன்ற விட­யங்கள் வெளிச்­சத்­திற்கு வருவ­தற்கு ஓமந்­தையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வெளிப்­ப­டுத்­திய துணிச்சலே உதவியிருக்கின்றது.

    ஆயினும் யாழ்ப்­பா­ணத்தில் ஊடக சுதந்­தி­ரத்­திற்­காகக் குரல் கொடுத்த நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மற்றும் அரச சார்­புள்­ள­வர்கள் மட்­டு­மல்­லாமல் வேறு தரப்­பி­ன­ரும்­கூட ஏற்­றுக்­கொள்ள மறுத்­தி­ருப்­பது வியப்­பாக இருக்­கின்­றது.

    பல்­வேறு வடி­வங்­களில் தமிழ் மக்கள் மீது அச்­சு­றுத்­தல்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள நிலையில் ஊட­கங்கள் மீதான அச்­சு­றுத்தல் அடக்­கு­மு­றையை சாதா­ரண விட­ய­மாகக் கரு­து­கின்ற போக்கு ஒன்று சமூகத்தில் தலையெடுத்திருப்பது கவலைக்குரியதாகும்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அஞ்சும் அரசாங்கம் - செல்­வ­ரட்ணம் சிறி­தரன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top