எழுத்துமூல சாட்சியங்களை ஒக்ரோபர் 30 இற்குமுன் அனுப்பவும்- ஐ.நா அறிவிப்பு - TK Copy எழுத்துமூல சாட்சியங்களை ஒக்ரோபர் 30 இற்குமுன் அனுப்பவும்- ஐ.நா அறிவிப்பு - TK Copy

  • Latest News

    எழுத்துமூல சாட்சியங்களை ஒக்ரோபர் 30 இற்குமுன் அனுப்பவும்- ஐ.நா அறிவிப்பு

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த
    எழுத்து மூலமான முறைப்பாடுகள், சாட்சியங்களை எதிர்வரும் ஒக்ரோபர் 30ம் நாளுக்கு முன்பாக, சமர்ப்பிக்குமாறு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழு கோரியுள்ளது. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், இந்த விசாரணைக் குழுவின் ஆதாரங்களைத் திரட்டும் முறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி, இந்த விசாரணைக் குழு, 2002ம் ஆண்டு பெப்ரவரி 21ம் நாள் தொடக்கம், 2011ம் ஆண்டு நொவம்பர் 15ம் நாள் வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. சாட்சிகளின் பாதுகாப்புப் பற்றிய கவலைகளைத் தீர்க்கும் வகையில், விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிப்பவர்களுக்குப் பாதுகாப்பளிக்க சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணைக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

    சாட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும், சிறிலங்காவில் இருந்து விசாரணைக்குழுவுடன் தொடர்பு கொள்ளும் ஏனையவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் உள்ளது.

    விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளும் நபர், துன்புறுத்தப்படவோ, அச்சுறுத்தப்படவோ, மிரட்டப்படவோ, பதிலடியான தவறாக நடத்தப்படவோ கூடாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

    இரகசியத்தன்மையைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், பகிரங்க அறிக்கையில் தனிநபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படாது என்றும் ஐ.நா உறுதியளித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவதற்கு விசாரணைக் குழு தொடர்ந்து, அனுமதி கோரும் என்றும், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனையோரை விசாரணைக் குழு சந்திப்பதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சிறிலங்கா அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.நா விசாரணைக் குழு ஜெனிவாவை மையமாக கொண்டு செயற்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையை ஆரம்பித்த 2002 பெப்ரவரி 21ம் நாள் தொடக்கம், அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 2011 நொவம்பர் 15ம் நாள் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அதேவேளை,

    சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட தகவல், குறித்த சம்பவங்கள் தொடர்பான கூடுதல் புரிதலை வழங்கும் வகையிலானதாக இருக்கலாம் என்பதாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்வதை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் என்பதாலும், இந்தக் காலகட்டத்துக்கு வெளியே நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணையின் போது கருத்தில் கொள்ளப்படும்.

    விசாரணையின் போது, தற்போதுள்ள ஆவணங்கள், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்கள், சாட்சிகளிடம் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், உயிர் தப்பியோர், சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டோரின் சாட்சியங்கள், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பெறப்படும்,

    செய்மதிப் படங்கள், காணொலி மற்றும் ஒளிப்படங்கள், அதிகாரபூர்வ ஆவணங்கள் அனைத்தையும் ஐ.நா விசாரணையாளர்கள், பரிசீலனை செய்வர். சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆராயப்பட்டு, அவற்றின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.

    எந்தவொரு நாட்டைச் சேர்ந்த தனிநபரும், அமைப்புகளும் விசாரணைக் குழுவுக்கு எழுத்து மூலமான முறைப்பாட்டை, வரும் ஒக்ரோபர் 30ம் நாளுக்கு முன்னதாக oisl_submissions@ohchr.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், நடுநிலையாகவும், இந்த விசாரணைக் குழு செயற்படும் என்றும் ஐ.நா உறுதியளித்துள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: எழுத்துமூல சாட்சியங்களை ஒக்ரோபர் 30 இற்குமுன் அனுப்பவும்- ஐ.நா அறிவிப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top