ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சாத்தியமா -திருமலை நவம் - TK Copy ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சாத்தியமா -திருமலை நவம் - TK Copy

  • Latest News

    ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சாத்தியமா -திருமலை நவம்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


    இலங்­கையின் 7 ஆவது ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய
    எதிர்­பார்ப்­புக்கள் எதிர்வு கூறல்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச பார்­வை­ய­ள­விலும் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

    அது­மட்­டு­மன்றி இலங்கை வர லாற்றுப் போக்கை மாற்­றி­வி­டக்­கூ­டிய தேர்­தலாக இது அமைந்து விடுமோ என ஆச்­ச­ரி­யப்­ப­டு­ம­ள­வுக்கு இத்­தேர்தல் பற்றிய எதிர்வு கூறல்கள் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆளும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக மூன்­றா­வது தட­வையும் கள­மிறங்­க­வுள்ளார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ.

    மூன்­றா­வது பதவிக் காலத்­துக்­கு­ரிய ஜனா­திபதி தேர்­தலில் போட்­டி­யிட இருக்கும் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட ணியாரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட வைப்­பது என்­பது பற்­றிய தெரி­விலும் வேட்­பாளர் வேட்­டை­யிலும் தீவி­ரமும் அவ­ச ­ரமும் காட்டிக் கொண்­டி­ருப்­பதை நாளாந்த ஊடகச் செய்­தி­களும் தக­வல்­களும் தெரி­விக்­கின்­றன.

    இலங்­கையின் ஆறு ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளிலும் இடம்­பெற்­றி­ருக்க முடி­யாத போட்­டிகள், விமர்­ச­னங்கள், ஆர­வா­ரங்கள் கட்சி இணை­வுகள் என்ற பல பக்க முனைப்­புக்கள் கொண்ட தேர்­த­லாக இத்­தேர்தல் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

    அடுத்த வருட முற்­ப­கு­தி­யி­லேயோ அல்லது அதற்கு முந்­திய நாளொன்­றிலோ ஜனா­திபதித் தேர்தல் நடத்­தப்­ப­ட­லா­மென்ற ஊகத்தின் அடிப்­ப­டையில் எதி­ரணிக் கட்­சிகள் ஆர­வா­ரப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

    மேற்­படி தேர்­தலில் பொது வேட்­பாளர் தெரிவு பற்­றியும் அவர்­க­ளுக்­கு­ரிய வெற்றிச் சாத்­தி­யப்­பாடு பற்­றியும் சிறு­பான்மை சமூகம் உட்­பட வாக்குப் பலம் பற்­றி­யெல்லாம் தாறு­மா­றான கணிப்­பீ­டு­களும் விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் வந்த வண்­ண­மே­யுள்­ளன.

    இவற்றில் எது சரி. எவை தவறு என்ற அள­வீ­டு­க­ளுக்கு மேலாக இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையில் எதிர்த்­த­ரப்­பி­னரின் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­ப்போ­கின்ற நபர் எதிர்­கொள்ளக் கூடிய சவால்கள் சாத்­திய, அசாத்திய நிலை பற்றி ஊடு­ரு­விப்­பார்க்க வேண்டிய தேவை­யுள்­ளது.

    இலங்­கையின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக வரக் கூடிய சாத்­திய நிலை­யொன்று எதிர்க்­கட்சி சார்ந்த ஒரு­வ­ருக்கு அல்­லது நிறுத்­தப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு கிடைக்­கு­மாயின் அவர் எதிர்­கொள்ளக் கூடிய பிர­தான சவால்­க­ளாக அடை­யா­ள­மிட்டு சொல்லக் கூடி­யவை.

    1. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு.
    2. 13 ஆவது திருத்­தமும் அது சார்ந்த அதி­காரப் பகிர்வு.
    3. ஜனா­தி­பதி ஒழிப்பு முறை.
    4. சர்­வ­தேசம் சார்ந்த அணிக்­கொள்கை .
    5. ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை சார் சர்­வ­தேச விசா­ரணை.
    6. உள்­நாட்டு பொரு­ளா­தார அமுக்க நிலை.
    7. சிறு­பான்மை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான தேசிய முறி­வுகள்

    போன்ற இன்­னோ­ரன்ன பிரச்­சி­னை­களின் தீர்­வா­ள­ரா­கவோ அல்­லது இவற்­றுக்­கு­ரிய பரி­கார கர்த்­தா­வா­கவோ ஆக வேண்­டிய தேவை வரப்­போகும் ஜனா­தி­ப­திக்­கு­ரிய சவால்­க­ளாக சுட்­டிக்­காட்ட முடியும்.

    இவற்றின் அடிப்­ப­டை­யி­லேயே ஜனா­தி­பதி வேட்­பாளர் மதிக்­கப்­ப­ட­வுள்ளார் என்­பதும் உண்மை. தற்­போ­தைய அர­சியல் சது­ரங்­கத்தில் எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக நான்கு பேர் முன்­னிரல் படுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

    முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமாரதுங்கா, பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ரமசிங்க மற்றும் முன்னாள் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டார நாயக்க, மாதுலுவாவே சோபித தேரர்.

    இதற்கு அப்பால் பொது வேட்­பா­ள­ராக தாமே போட்­டி­யிட வேண்­டு­மென விருப்பம் தெரி­வித்­தி­ருக்கும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா. தனது இரண்­டா­வது பதவிக் காலத்தின் முழுக் காலாண்டு காலத்­தையும் நிறைவு செய்ய போனால் வெற்றி வாய்ப்பை இழந்து விடு­வேனோ என்ற அச்சம் சந்­தேகம்

    தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுந்­துள்­ள­தாக கூறப்­படும் நிலையில் மூன்றாம் பருவக் காலத்தில் வெற்றி பெற்று தமது பத­வியை தக்க வைக்க வேண்­டிய தேவையும் அவ­சி­யமும் அவ­ருக்கு உரு­வா­கி­யுள்ள சூழ்­நி­லையில் மறு­புறம் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செல்­வாக்கு சரிந்து கொண்டு போகி­றது என்ற ஆரு­டமும் கூறப்­ப­டு­கி­றது.

    இதே­வேளை, ஆளும் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்கும் அடுத்த தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவ­ரது அர­சாங்­கத்­தையும் தோற்­க­டிப்­ப­தற்கு இலங்­கைக்கு வெளியே சதி முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்ற பிர­சா­ரங்­களும் செய்யப்­பட்டு வரு­கின்­றன.

    இந்த அபத்­த­மான வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி விட வேண்­டு­மென்­பது எதிர்க் கூட்­ட­ணியின் நம்­பிக்கை வாத­மாகக் காணப்­ப­டு­கி­றது. இருந்த போதிலும் எதிர்க் கூட்­ட­ணியின் வெற்­றியை தீர்­மா­னிக்­கப்­போ­வது மேலே­சுட்டிக் காட்­டிய சவால்­களும் அதற்­கான தீர்­வு­களும் என்­ப­தற்கு மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது.

    தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய தீர்வு விவ­கா­ரத்தில் மேற்படி பொது வேட்­பா­ளர்கள் என்று விதந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கி­ற­வர்­களின் கடந்த கால நிலைப்­பா­டுகள் நிகழ்­கால கொள்­கைகள் கோட்­பா­டுகள் எவ்­விதம் இருக்­கி­றது எதிர்­கா­லத்தில் எப்­படி இருக்க முடி­யு­மென துருவிப் பார்க்க வேண்டும். 

    முதலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்காவின் நிலை­யியல் போக்கை நோக்­கு­மி­டத்து சந்­தி­ரிகாவை பொறுத்­த­வ­ரையில் அவர் மீது தமிழர் தரப்­பினர் முன்­வைக்கும் பிர­தான குற்­றச்­சாட்டு கொடுத்த எந்த வாக்­கு­று­தி­க­ளையும் காப்­பாற்ற அவர் தவறி விட்டார் என்­ப­தாகும்.

    09.11.1994 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தலில் 62.28 வீத வாக்­குளைப் பெற்று இலங்­கையின் முத­லா­வது பெண் ஜனா­தி­பதி யாகிக் கொண்ட சந்­தி­ரிக்கா தமிழ்மக்­களின் நியா­ய­மான அபி­லா­சை­களும் எதிர்பார்ப்­பு­களும் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

    அதை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்­பிக்கை வார்த்தையை தமிழ் மக்­க­ளுக்கு ஊட்­டி­யதன் பேரில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களுக்கும் இவ­ருக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது.

    (03.10.1994) உடன்­ப­டிக்­கை­யொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. (03.01.1995). இனப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான தீர்வுத் திட்­ட­மொன்று நீலன் திருச்செல்­வத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு புதிய தீர்­வுத்­திட்­டத்­துக்­கான யாப்பின் முன் மொழி­வுகள் (1995.08.03) வெளி­யி­டப்­பட்­டன.

    இதனை ஐ.தே.க.வும் பௌத்த குரு­மாரும் எதிர்த்­ததன் கார­ண­மாக திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு மீண்டும் (16.01.1996) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. மீண்டும் எதிர்ப்பும் திருத்­தமும் 03.08.2000 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது.

    இத்­திட்­டத்தின் மீது கடும் எதிர்ப்புக் காட்­டிய ஐ.தே. கட்சி மற்றும் பௌத்த மகா சங்­கத்­தி­ன­ரதும் எதிர்ப்புக் கார­ண­மாக குறித்த தீர்வுத் திட்டம் கைவி­டப்­பட்­டது. இதே­போன்றே ஜனா­தி­பதி முறை­யொன்றை இல்லாது ஒழிப்­பதன் மூலம் பாரம்­ப­ரி­ய­மான பிர­தமர் ஆட்சி முறையை இலங்­கையில் நிறு­வு வேன் என ஜே.வி.பி.யுடன் கைகோர்த்துக் கொண்ட சந்­தி­ரிகா அதை நிறை­வேற்­றாமல் போனதும் ஜே.வி.பி.யின் சூட்சும கயிற்றில் ஆடிக் கொண்­டி­ருந்த அம்­மையாருக்கும் ஜே.வி.பி.க்­கு­மி­டையே ஏற்­பட்ட விப­ரீ­த­மான விரி­சல்கள் எல்லாம் இலங்கை வர­லாற்றுப் பாடத்தில் எழுதிக் கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளாகும்.

    தற்­பொ­ழுது மூன்றாம் பருவ கால தேர்­தலில் தானும் போட்­டி­யிடத் தயா­ரா­க­வுள்ளேன் என்ற தமது விருப்­பத்தை அண்­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் நடைபெற்ற அமெ­ரிக்­காவின் சுதந்­திர தின வைப­வத்தில் கலந்து கொண்­டி­ருந்த போதே முக்­கிய அர­சியல் தலை­வர்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

    இன்­றைய அர­சியல் சூழ்­ நி­லையில் தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் போட்டி நிலைக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய ஒரு­வ­ராக இவர் கரு­தப்­ப­டு­கின்ற போதும் சிறு­பான்மை சமூகம் சார் செல்­வாக்கை மீண்டும் சுதா­க­ரிக்கக் கூடிய பக்­குவம் அவற்­றுக்கு மேலாக அவர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்றும் ஆளுமை கொண்­ட­வ­ராக எதிர்­கா­லத்தில் ஆக முடி­யுமா என்­பதும் ஒரு வகை­யான கேள்­வியே.

    தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் இப்ப­டி­யொன்றும் நடை­பெ­ற­வில்­லை­யென்ற உள்­ளார்த்­த­மான அபிப்­பி­ரா­யமும் அதே போல் முஸ்லிம் மக்கள் மத்­தியில் தற்­போதைய கெடு­பி­டிகள் எது­வுமே உரு­வா­கி­யி­ருக்க முடி­யாது என்ற அபிப்­பி­ரா­யமும் நில­வத்தான் செய்­கின்­றது.

    இரண்­டா­வ­தாக ஜனா­தி­பதி தேர்­தலின் கதா­நா­ய­க­னாக்­கப்­பட்­டி­ருப்­பவர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க. இவ ­ரு­டைய பலம் பல­வீனம் அனைத்­துமே இலங்கை வாக்­கா­ளர்­களால் அறி­யப்­பட்ட விடயமே. குறிப்­பாக தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இவர் எவ்­வ­கை­யான உபா­யங்­களை கையாண்­டி­ருந்தார்.

    அவற்றின் அநு­கூ­லங்­களும் பிர­தி­கூ­லங்­களும் எவ்­வாறு இருந்­தன என்­பது பற்றி எடுத்­துக்­கூற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 05.12.2001 பொது­த்தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­னணி (UNP) என்னும் பெயரில் சில அர­சியல் கட்­சி­களை தம்­முடன் இணைத்துக் கொண்டு கூட்­டணிஅர­சாங்­க­ மொன்றை 19.12.2001 அமைத்து ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ரானார்.

    (19.12.2001 – 07.04.2004) ஆண்­டு ­வ­ரையும் ஆட்சி நடத்­தினார். ஆனால் ஜனா­தி­பதி ஆச­னத்தில் சந்­தி­ரிகா அம்­மையார் அமர்ந்­தி­ருந்தார் 2002 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் கொண்டு வரு­மென்ற சுயா­தீ­ன­மான நம்­பிக்­கையை தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

    இதன் பின்­ன­ணியில் இடைக்­கால அரசு பற்றிய பிரான்ஸ் ஆலோ­ச­னைக்­கூட்டம் (20.08.2003) சுவிஸ் அதி­கா­ரிக­ளு­ட­னான பேச்­சு­வார்த்தை (1.09.2003) மீண்டும் இடை க்­கால அரசு பற்­றிய அயர்­லாந்து பேச்­சு­வார்த்தை (02.10.2003) இடைக்­கால நிர்­வாக ஆலோ­சனை ஒன்­று கூடல் நோர்­வேயில் (31.10.2003) ஐரோப்பிய ஒன்­றிய பிர­தி­நி­தி யின் வன்­னிச்­சந்­திப்பு (26.11.2003) போன்ற பல் நிலைப்­பேச்­சு­வார்த்­தையின் பிதா­ம­கனாக ரணில் விக்­ர­ம­சிங்க விளங்­கினார். 

    ஆனால் எல்­லாமே பூச்­சியப் பெறு­மா­னங்­க­ளாக அமைந்­த­துடன் கிழக்கின் பிள­வுக்கும் நாராசம் வார்க்­கப்­பட்­டது. சுடலை ஞானம் பேசு­கின்ற ஞானிகள் போல் தமிழ்­மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் ஐக்­கிய தேசி ­யக்­கட்­சியும் அதன் ஆத­ர­வா­ளர்­களும் தற்­பொ­ழுது உறு­தி­யாக இருக்­கின்­றார்கள் என்­பது உண்­மையே!

    2005 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­த­லின்போது விடு­த­லைப்­புலி அமைப்பு தீர்க்கதரி­ச­னத்­துடன் செயல்­பட்­டி­ருந்­தால் பிற்­கா­லத்தில் ஏற்­பட்ட எல்­லா­வகை அழி­வு­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொண்­டி­ருக்­க­லா­மென்று விமர்­சனம் கூறு­வோரும் தற்­போது உள்­ளனர்.

    காரணம் அந்த தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்க 1.86 வீத வாக்­கு­களால் தோல்வி கண்­டி­ருந்­தமை சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். 1994ம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட காமினி திசா­நா­யக்­காவின் படு­கொ­லையால் பயந்­து­போன ரணில் அச்சம் கார­ண­மாக பின்­வாங்­கவே திரு­மதி வஜிரா ஸ்ரீமா திசா­நா­யக்கா போட்­டி­யிட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

    1999 ஆம் ஆண்டு நடை­பெற்ற 4 ஆவது ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டு 42.71 வீத வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார் ரணில். ஏலவே 62.28 வீத வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­பதிக் கதி­ரையைக் கைப்­பற்றிக் கொண்ட சந்­தி­ரிகா 1999 ஆம் ஆண்டு தேர்தலில் 51.12 வீத வாக்­கு­க­ளையே பெற ­மு­டிந்தது. இதற்­கு­ரிய கார­ணங்களை உய்த்­து­ணர்ந்து கொள்ள முடியும்.

    ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஒவ்­வொரு காலப்­போட்டி நிலைவ­ரங்­களும் அவ­ருக்கு சாத­க­மாக அமையும் சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்­க­வில்­லை­யென்­பது வெளிப்­படை. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உள்­கட்சி முரண்­பா­டுகள் தலை­மைத்­துவ பல­வீ­னங்கள் கட்­சியின் அடிப்­படை வாதி­க­ளுக்கும் புதிய தலை­மு­றை­யி­ன­ருக்­கு­மிடை­யே­யுள்ள முரண்­பா­டு­களும் இடை­வி­ல­கல்­களும் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கு நேரொத்த காத்­தி­ர­மான போட்­டித்­தன்­மையை உரு­வாக்க முடி­யாத நிலை அக்­கட்­சியின் வாக்­கு­வங்­கி­யையும் மக்கள் ஆத­ர­வையும் கரைத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

    இதன் கார­ண­மா­கவே பொது வேட் ­பாளர் என்ற வியூ­கத்தை வகுத்த ஐக்­கிய தேசியக் கட்சி தீவிர ஆர்வம் காட்டி வரு­வ­தாக பேசப்­ப­டு­கின்­றது. 2010 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­கா­வுக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆத­ரவு நல்­கி­யமை அதில் தோற்றுப் போன­மை­யெல்லாம் மறந்து போகப்­பட்­ட­வை­யல்ல.

    முன்னாள் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. அண்­மையில் கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் கோட்டே நாக விகா­ரா­தி­பதி வண. மாது­லு­வாவே சோபித தேரரின் தலை­மையில் நடை­பெற்ற எதிர்­கட்­சி­களின் கூட்­டத்தில் இந்த அழைப்பு விடப்­பட்­ட தாக கூறப்­ப­டு­கின்­றது.

    கலா­நிதி ஷிராணி பண்­டார நாயக்க இந்­தக்­களப் பரீட்­சைக்கு பொருத்த­மா­னவர் என எதிர்த்­த­ரப்­பி­னரால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கு­ரிய கார­ணங்கள் இவை­யாக இருக்­கலாம். இவரின் பதவி வழி கௌரவம், கல்­வித்­தரம், இவ­ருக்கு இழைக்­கப்­பட்ட தீங்கு, சர்­வ­தேச அளவில் பேசப்படும் ஒரு நீதி தேவ­தை­யாக எண்­ணப்­ப­டு­வதும் மதிக்­கப்­ப­டு­வதும் இவரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கு­ரிய கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.

    ஆனால் களத்தில் போட்­டி­யி­ட­வுள்ள சாணக்­கி­ய­னுக்கு சம­மான அர­சியல் ஞானம், சாணக்­கியம், வியூ­க­வ­குப்பு, ஆளுமை, ஆற்றல் என்­பவை இவ­ரிடம் இருக்­குமா? இது ஒரு அக்­கினிப் பரீட்­சை­யாக ஆக­வி­டாதா? 40 வருட அர­சியல் ஞானம் யுத்­த­வெற்றி ஜனா­தி­பதி தேர்­தலில் களங்­கொண்ட அனு­பவம் முதிர்ச்­சி­யான அர­சியல் படை­க­ளுடன் அணி ­வ­குத்து நிற்கும் ஒரு­வரை எதிர்­கொள்­வதும் தோற்­க­டிப்­பதும் சாதா­ரண ஒரு விட­ய­மாக கருதி விட­மு­டி­யாது.

    எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஷிரா­ணியின் பத­விக்­கா­லத்தில் இவ­ரது குடும்பம் நிதி­சார்ந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவற்றின் உண்­மைத்­தன்மை, பொய்­தன்மை பற்றி யாரும் அலட்டிக் கொள்­வ­தாக தெரி­ய­வில்லை.

    மிகத்­த­கு­தியும் தரமும் வாய்ந்த ஒரு­வ­ராக ஷிராணி மதிக்­கப்­பட்­டாலும் சாதா­ரண பாம­ர­மக்கள் மத்­தியில் பேசப்­படும் ஒரு­வ­ராக இன்னும் ஆக்­கப்­ப­ட­வில்லை. இது ஒரு புற­மி­ருக்க சிறு­பான்மை சமூகம் என்று கோடிட்டுக் காட்­டப்­ப­டு­கின்ற தமிழ், முஸ்லிம் சமூகம் சார்ந்த அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் ஆற்றல் கொண்ட­வ­ராக இவரை பரிந்­து­ரைக்கும் எதிரணித் தரப்பினர் அந்த வாக்குறுதிகளை அளிக்க முடியுமா என்பதெல்லாம் வினாவாக்கப்படலாம்.

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி அமைப்பை இல்லாது ஒழிக்க வேண்டுமென்ற தீவிரத்துடன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ள கோட்டே நாக விகாரையைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி தேர்தலில் தானும் போட்டியிட விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார்.

    இங்குசுட்டிக் காட்டப்படவேண்டிய விடய மென்னவென்றால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இந்த ஆட்சிமுறை உரு வாக்கப்பட்ட காலத்திலிருந்து ஜனாதிபதி முறை இல்லாது ஒழிக்கப்பட வேண்டு மென்ற கோஷம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டுக்களும் உருவாக்கப்பட்டன.

    ஆனால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் தட்டி கழிக்கப்பட்டு வந்துள்ளன. ஜனாதிபதி ஒழிப்பினால் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்து விடுமென்பதில் தமிழர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக எப்பொழுதும் இருந்ததில்லை. இருக்கவும் போவதில்லை.

    இதற்கு மறுபுறம் பௌத்த அடிப்படை வாதத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகமும் இதை அங்கீகரிக்கப் போவதில்லை. இவ்வாறான அசாத்திய சூழ்நிலையில் ஜனாதிபதி அழிப்பு முறை யொன்றை முன்வைத்து களத்தில் இறங்கப் பார்க்கும் தேரர் ஒருவரின் வார்த்தை ஜால ங்களில் சிறுபான்மை சமூகம் நம்பிக்கைக் கொள்ளும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு விடயம்.

    7ஆவது ஜனாதிபதித் தேர்தலில் உள்ள பல்வேறு சவால்களில் அரசியல் தீர்வை எவர் ஒருவர் முதன்மைப்படுத்தி அதற்கு பரிகாரம் காணப்பட வேண்டுமென உண்மைத் தன்மையோடு வருகிறாரோ அவருக்கு ஆதரவு தரவேண்டியது சிறுபான்மை சமூகத்துக்குள்ள தார்மீக கடமையாகும்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சாத்தியமா -திருமலை நவம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top