மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களை எதிர்க்கட்சிகளின் கூட்டணி மறுத்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த ஹிருணிகா பிரேமச்சந்திர, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சியின் கூட்டணியில் அண்மையில் இணைந்து கொண்டார்.இதன் காரணமாக ஆளும் தரப்பினரால் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவர் வெளிநாடு சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின.
முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவர் சிங்கப்பூர் சென்றதாக கூறப்பட்டது.இந்த நிலையில், இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் ஹிருணிகா கலந்து கொள்வார் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு அசசுறுத்தல் இருப்பதாகவும், இதன் பின்னணியில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் களுத்துறையில் இன்று நடைபெறும் எதிரணியின் பிரசாரக் கூட்டங்கள் சிலவற்றில் ஹிருணிகா கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.