ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆறு வருடங்களுக்கான பயண செலவு 380 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் கடந்த வருட இறுதி வரை ஜனாதிபதியின் பயணங்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டு 38 கோடியே 57 லட்சத்து 27 ஆயிரம் ரூபா ஜனாதிபதியின் பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்தின் இறுதியில் அது 117 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் ரூபா ஆகும். இந்த தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
2009 ஆம் போர் முடிவடைந்த காலத்தில் ஜனாதிபதியின் பயண செலவானது 37 கோடியே 96 லட்சத்து 51ஆயிரம் ரூபா என்பது இங்கு முக்கிய விடயமாகும். அதற்கு பின்னர் ஜனாதிபதியின் பயண செலவுகள் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு 38 கோடியே 91 லட்சத்து 47 ஆயிரம் ரூபா.
2011 ஆம் ஆண்டு 67 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரம் ரூபா.
2012 ஆம் ஆண்டு 80 கோடியே 36 லட்சத்து 29 ஆயிரம் ரூபா என ஜனாதிபதியின் பயணத்திற்கான செலவுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீட்டு ஆவணத்தின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. நிதியமைச்சினால், இந்த ஆவணம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனையை வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ இராணுவ வீடமைப்பின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் முப்படையினருக்கு நிர்மாணித்து கொடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மகிந்த ராஜபக்ஷ, பொதுமக்களின் பணத்தை இப்படியாக தனது பயணங்களுக்காக செலவிட்டு வருகிறார்.