தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள்-பெபரல் - TK Copy தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள்-பெபரல் - TK Copy

  • Latest News

    தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள்-பெபரல்

    தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.


    கடந்த காலங்களை விடவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மிகக் கடுமையான அளவில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் கலண்டருக்கு அமைய இலங்கையில் தேர்தல் நடத்தப்படுவதில்லை.இலங்கையின் பொருளாதார சமூக சூழ்நிலைகள் தெரிந்த 35 அனுபவம் மிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எமது அழைப்பினை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாரியளவில் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதுடன், அரச வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    இது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 73 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    இவ்வாறான நிலைமைகளின் போது பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் மாத்தறை போன்ற பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத சுவரொட்டிகளும் கட்அவுட்களும் அகற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள்-பெபரல் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top