ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக, குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்த இந்தியப் புலனாய்வுத் துறையான சிபிஐ, அண்மையில் அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.இந்தநிலையில், கே.பி தொடர்பான தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம், டுவிட்டரில் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு அவர், ஐதேக அரசாங்கம் நாட்டின் வழக்கமான சட்டங்களுக்கு அமைய, கே.பி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் என்று பதிலளித்துள்ளார்.