வட மாகாண சபைக்கு சென்ற வருடம்
நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சிங்கள அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது தலைமை நீதிபதி இதனைத் தெரிவித்தார்.
வட மாகாண சபை நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த மனுவை மேற்கொண்டு விசாரணை செய்வதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்று நீதிபதி கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின்போது முன்வைத்திருந்த விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதக் கருத்துகள் இடம்பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுமந்திரனோ, தமது தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்.
நாட்டில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே தமது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசியல் யாப்பு மீரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாத கருத்துகள் உள்ளடக்கப்படவில்லை என உறுதிச் சான்றிதழ் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்குமானால், வழக்கை முடித்துக்கொள்ள முடியும் என நீதிபதி மொஹான் பீரிஸ் கூறியபோது, சுமந்திரன் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.