கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி மருத்துவமனையில்
வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த உதயகுமார் அன்பழகனின் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று மாலை அவரது பெற்றோர், உறவினர், நண்பர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
படுகொலை இடம்பெற்ற சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக நேற்று மாலை 5.00 மணிக்கு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து மீசாலை சந்தி வரை அவர்கள் சென்றனர்.
ஊர்வலத்தில் பங்குபற்றியோர் பல்வேறு சுலோகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கியவண்ணம் சென்றனர். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனின் உருவப் பொம்மைக்கு அவர்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலத்தில் கொண்டு சென்று புத்தூர் சந்தியில் அதனைத் தீயிட்டு எரித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை அறிந்த பொலிஸார் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வழங்கினர் கடந்த 05 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கச்சாய் அம்மன் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவில் இரு பகுதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திரும்புகையில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கூரிய ஆயுதத்தினால் தலையில் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் தெரிந்தவையே.