அமெரிக்காவின் காலில் வழுந்த இலங்கை - ஒபாமாவிற்கு கதை சொன்ன காரியவசம்! - TK Copy அமெரிக்காவின் காலில் வழுந்த இலங்கை - ஒபாமாவிற்கு கதை சொன்ன காரியவசம்! - TK Copy

  • Latest News

    அமெரிக்காவின் காலில் வழுந்த இலங்கை - ஒபாமாவிற்கு கதை சொன்ன காரியவசம்!


    இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க
    ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற குறுகிய கால நிகழ்வின் போது இந்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அமெரிக்காவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள பிரசாத் காரியவசம் ஒபாமாவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார்.

    இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்தநிலையில் வெள்ளைமாளிகை விருந்தினர் புத்தகத்தில் தமது கருத்தை பதிவுசெய்த பிரசாத் காரியவசம்,

    1931ம் ஆண்டில் இருந்து ஜனநாயக பண்புகளை உள்ளடக்கிய அமெரிக்காவுக்கும் ஜனாதிபதி ஒபாமா, திருமதி ஒபாமா சாஸா மற்றும் மாலியா ஆகியோருக்கு இலங்கையின் நல்வாழ்த்துக்களை முன்கொணர்வதாக எழுதியுள்ளார். 

    இதனையடுத்து இடம்பெற்ற குறுகிய கால சந்திப்பின் போது ஒபாமாவும் பிரசாத் காரியவசமும் இலங்கை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. 

    எனினும் இலங்கை தொடர்பில் ஒபாமா வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அது வெளியிடவில்லை.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அமெரிக்காவின் காலில் வழுந்த இலங்கை - ஒபாமாவிற்கு கதை சொன்ன காரியவசம்! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top