அச்சவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 4ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாயிலுள்ள வீட்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தாய், மகள், மகன் ஆகிய மூவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்து நீண்டநாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான தனஞ்செயனின் மனைவி தர்மிகா நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில்,
அம்மா, தம்பி, நான் மூவரும் ஒரு அறையில் படுத்திருந்தோம் அக்காவும் அக்காவின் கணவர் யசோதரனும் எனது மகளும் அடுத்த அறையில் படுத்திருந்தனர்.
அக்கா வன்னியில் இருந்து திருமணம் முடித்து வீட்டிற்கு முதல்நாள் வந்திருந்தார். ஆகையினால் நாம் எல்லோரும் கூடி இருந்து கதைத்துவிட்டு இரவு 11 மணியளவில் படுக்கைக்குச் சென்றோம். படுக்கைக்கு சென்று ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சம்பவம் நடைபெற்றது.
அப்பொழுது எனது முகத்தில் வெட்டு விழுந்த நிலையில் துடிதுடித்து எழுந்தேன். எனது முகத்தில் விழ்ந்த வெட்டினால் இரத்தம் வடிந்துகொண்டிருந்து. கையால் முகத்தை தொட்டபோது இரத்தம் தோய்ந்திருந்தது.
அம்மாவையும் தம்பியையும் வெட்டிய பின்னரே என்னை வெட்டியுள்ளார். நான் கண்விழித்தபோது தம்பியும் அம்மாவும் கேர வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குளறும் சத்தம் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.
எனக்கு வெட்டு விழுந்த நிலையில் வாளை கையால் இறுக்கிப்பிடித்துக்கொண்டு இழுபறிப்பட்டோம் அப்பபோது கையில் ஏற்பட்ட காயத்தை காண்பித்தார். கையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தால் இடது கைவிரல் ஐந்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று விரல்கள் செயலிழந்துள்ளன.
தொடர்ந்தும் என்னை வெட்டினார். எனது உடம்பில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. அதனால் நான் தொடர்ந்தும் வேதனையுடன் வாழ்கின்றேன். என்னை தனஞ்செயன் தொடர்ந்தும் வெட்டிய நிலையில் தப்பிப்பதற்காக அறையிலிருந்து வெளியே ஓடினேன். அப்போது எனது முதுகிலும் வெட்டு விழுந்தது. இனி எழுந்திருக்க முடியாது என நினைத்துகொண்டு எழும்புவதற்கு முயன்றேன். தப்பியோடி முற்றத்தில் விழுந்துவிட்டேன். எனது தலைப்பின்னல் வாள்வெட்டில் சிக்கிக்கொண்டதால் முள்ளம் தண்டில்பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என நினைத்தேன்.
என்னையும் எனது தம்பி, எமது அம்மா, எனது அக்கா ஆகிய மூவரையும் வெட்டியது எனக்கு முன்னால் எதிரிக்கூட்டில் நிற்கும் தனஞ்செயன்தான் என நீதவானிடம் கூறினார். இந்த வழக்கின் மூலம் எனது உறவுகளை வெட்டிக் கொலை செய்த எதிரி தனஞ்செயனுக்கு ஆகக்கூடிய தண்டனை வழங்கப்படவேண்டும். தம்பி, அம்மா, அக்கா ஆகியோரின் மரணம் பாரிய வெட்டுக்காயத்தினால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கால் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும் சுமார் 20 தினங்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகவும் தனது உடம்பில் ஏற்பட்ட பாரிய வெட்டுக்காயங்களுக்கு நூறுக்கு மேற்பட்ட கட்டுக்கள் போடப்பட்டிருப்பதாகவும் வெட்டுக்காயங்களினால் உடம்பில் தொடர் உபாதை இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சாட்சிக் கூண்டில் கதிரையில் அமர்ந்திருந்து தர்மிகா சாட்சியம் அளித்தார். அச்சுவேலி பொலிசார் சாட்சியத்தை நெறிப்படுத்தினர்.