பிரிட்டனில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில்
ஒன்றான போன்மோத் பல்கலைக்கழகத்தில், கடந்தவாரம் தமிழ்த் திரைப்பட விழா இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் ஆறு தென்னிந்திய தமிழ்த் திரைபடங்கள் திரையிடப்பட்டன. சுட்டகதை, விடியும் முன்னே, முதல் முதல் முதல் வரை, நேரம், நீதானே என் பொன் வசந்தம் மற்றும் நீர்ப்பறவை போன்ற திரைப்படங்கள் மேற்குலக பார்வையாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டிருந்தன.

முற்றிலும் புதிய பார்வையாளர்களைக் கொண்ட இத்திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவிற்கான சர்வதேச அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், மேற்குல பார்வையாளர்களுக்கும் தமிழ் திரைத்துறை சார்ந்த இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கிடையிலான உரையாடலை ஏற்படுத்தும் வகையிலும் இந்த விழா ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. லண்டனைச் சேர்ந்த, போன்மோத் கலைப் பல்கலைக்கழகத்தின் 3ம் ஆண்டு திரைத்துறை மாணவரான ஷாஷி வில்சன் மற்றும் 200க்கு மேற்பட்ட தமிழ் திரைப்படங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த றேக்ஸ் இருவரும் இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேவேளை, மேற்குல பர்வையாளர்களைக் கொண்ட இந்த திரைப்படவிழாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டமை தொடர்பாக எழுத்தளரும், ஆய்வாளரும் திரை விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் அவர்கள் கருத்து வெளியிட்டார், மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த விழாவில் , ஆறு திரைப்படங்கள் காட்சிப்பட்டுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்கைப் இணையத் தொடர்பாடல் மூலமாக ஒவ்வொரு படத்தினுடைய இயக்குனர், நடிகர் மற்றும் படக்குழுவினருடனான கேள்வி பதில் இடம்பெற்றிருந்தது. இந்த தமிழ் திரைப்படங்கள் சார்ந்த வெளியுலக பார்வையாளர்களின் கருத்துப்பரிமாற்றங்களினால் உலக சினிமாக்களின் பொதுமைக்குள் தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்காலத்தில் கொண்டுவரப்படலாம் என்று ஒழுங்கமைப்பாளர்கள் கருதுகின்றார்கள்.