பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்! - நடேசன் வாக்குமூலம் - TK Copy பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்! - நடேசன் வாக்குமூலம் - TK Copy

  • Latest News

    பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்! - நடேசன் வாக்குமூலம்


    ஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத்
    தீர்த்துவைப்பதாய் ரத்தினசாமி செய்த ஒரு விளம்பரத்தின் மூலம் அவரிடம் பேட்டி எடுத்தனர் இந்திய ஊடகமான விகடன் டைம்பாஸ் குழுவினர். ”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார்.

    அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன்.

    முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது. அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள் ஆவியுடன் பேசத் துவங்கி, பின்னர் அதுவே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்று தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுத்தவரிடம், நாங்களும் சில ஆவிகளிடம் பேச வேண்டும் என்றோம்.

    ”அதற்கென்ன ஜோரா பேசிடுவோம். யாரிடம் பேச வேண்டும். உங்க பாட்டியிடமா?” என்றார். ”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்கிட்ட பேசணும் என்றோம். ”அவர் உயிரோடதான் இருக்கார்.

    ஏற்கெனவே ஒருமுறை எனது வழிகாட்டும் ஆவியிடம் அவரிடம் பேச வேண்டும் என்றபோது, அவர் ஆவி உலகத்துக்கு வரவில்லை. பூமியில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்தது. எனவே அவரிடம் பேச முடியாது’ என்றார்.

    ”பின்லேடன்கிட்ட பேசுறீங் களா?” என்றார். ”பேசலாமே” என்றதும் பேப்பரை எடுத்துக்கொண்டு, ”கேள்விகளைச் சொல்லுங்கள். பின்லேடனின் ஆவி எனக்குள் புகுந்து பதில்களை எழுதும்’ என்றார்.

    நாம் கேட்ட கேள்விகளும் அவருக்குள் புகுந்து பின்லேடனின் ஆவி(!) அளித்த பதில்களும்… ”இரட்டை கோபுரத் தாக்குதலை நீங்கள்தான் நடத்தினீர்களா?‘ ”நாங்கள்தான் நடத்தினோம். எங்களின் லட்சியம் அந்தத் தாக்குதலில் நிறைவேறியது.’ ”உங்களின் பாகிஸ்தான் இருப்பிடத்தை அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுத்தது யார்?’

    ”அதுதான் எனக்கும் இன்னும் புரியவில்லை. ஆனால் என் உடன் இருந்தவர்களோ, என் குடும்பத்தினரோ காட்டிக்கொடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.’

    ”அடுத்து யாரிடம் பேச வேண்டும்?” என்றார். நம்முடன் வந்திருந்த நண்பரோ, ”சில்க் ஸ்மிதாவிடம் பேச வேண்டும்” என்றார். ”அந்தம்மாகிட்ட நிறைய முறை பேசியாச்சு சார். வேற யாரையாவது சொல்லுங்க” என்றார்.

    ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடேசனின் ஆவியுடன் பேச முடியுமா” என்று கேட்டோம். 

    யோசித்தவர், ”அவரின் படம் வேண்டுமே… படம் இல்லாமல் பேச முடியாது” என்றார். கூகுளில் இருந்து டவுண்லோட் செய்து நடேசனின் படத்தைக் காட்டினோம். அதன் பின் நமது கேள்விகளுக்கு நடேசனின் ஆவியிடம் இருந்து பெற்ற பதில்கள்…

    ”உங்களைச் சரணடையச் சொல்லியது யார்?’ 

    ”உங்களுக்கு என் வாழ்த்துகள். போரின் இறுதிக் கணத்தில் நாங்கள் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தோம். ஒரே ஒருவரின் தொடர்பு மட்டும் கிடைத்தது. அவர் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் வாரிசு.

    அவரின் மூலமாகப் போராளிகள் தவிர்த்து, அரசியல் பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமாவது காப்பாற்றச் சொன்னோம். அவரின் தந்தையுடன் தொடர்புகொண்டு சொல்வதாகச் சொன்னவர், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு சொன்னார்.

    அவரின் பேச்சை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த எங்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.’ ”ராஜபக்ஷேவுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?’ 

    ”ராஜபக்ஷேவை ஒரு மனிதப் பிறவியாகவே கருத முடியாது. அவர் செய்த அட்டூழியத்திற்கு, கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். மோடியிடம் அவரின் நரித்தந்திரங்கள் பலிக்காது. புலியைக் கண்ட நரிபோல், மோடி ஆட்சிக்கு வரவும் பயந்துபோய் கிடக்கிறார்.’

    ”பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’ ‘தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை. அவர் இறந்திருந்தால், இங்கு வந்திருப்பார். அவர், கடற்புலி தளபதி சூசை, பொட்டம்மான் மூவரும் நாங்கள் இறப்பதற்கு முதல் நாளே தப்பிவிட்டனர்.’

    பேட்டி முடித்து கிளம்பும்போது, ”ஒருநாள் ஃப்ரீயா வாங்க தம்பி. சதாம் ஹூசன், கிருபானந்த வாரியார் ஆவிகளைக் கூப்பிட்டுப் பேசுவோம்’ என்றார்.


    காம்பினேஷனே கன்ஃப்யூஸா இருக்கே?

    இந்த செய்தியின் நம்பகத்தன்மைக்கு இவ் இணையம் பொறுப்பல்ல தகவலுக்காக பதிவிடப்பட்டுள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்! - நடேசன் வாக்குமூலம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top