காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது
நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது
நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது
உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால்...
ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும்
தமிழ்க் குருதி வடிந்த பொழுது...
தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது
நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை.
எரியும் வீட்டில் பற்றியெரிந்த கொள்ளிக் கட்டையைப் பிடுங்கி
வீட்டில் இருந்தவனை எரித்த கதையாக
எங்களை எரித்தீர்கள்.

ஜிகாத், முஸ்லிம் ஊர்காவல்படை எனப் போர் பறையடித்து
தென்தமிழீழ மண்ணில் எங்கள் உயிர்களைக் காவு கொண்டீர்கள்.
கல்முனையில் பள்ளி சென்று திரும்பிய
பதினான்கு வயதுத் தமிழ்ச் சிறுமியை
நிர்வாணப்படுத்தி மாறி மாறி வன்புணர்வு செய்தீர்கள்.
பின் அந்தப் பச்சிளம் தமிழ்க் குழந்தையை
கல்லால் அடித்து
இஸ்லாமிய மரபுப்படி ‘வேசியை’க் கொன்றோம்
என்று எக்களாமிட்டீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
வடதமிழீழ மண்ணை சிங்களம் முற்றுகையிட்டுப்
பட்டினி போட்ட பொழுது,
மலக்குண்டுகளை வீசிய பொழுது,
உங்களில் அரைவாசிப் பேர் சிங்கள நாட்டிற்கு ஓடிப் போனீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
பின்னர் பேரீச்சம் பழ வாகனங்களில்
யாழ்ப்பாணத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து
எம்மைக் கொல்வதற்கு மறைத்து வைத்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
வேறு வழியின்றி...
எங்கள் பாதுகாப்பிற்காக...
உங்களின் பாதுகாப்பிற்காகவும்,
உங்களில் எஞ்சியிருந்தோரை எங்கள் புலிமறவர்கள்
புத்தளத்திற்கு அனுப்பி வைத்தார்கள் - சிங்கள நாட்டிற்கு அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகக் கருதியதால்!
ஆனால் புத்தளம் தமிழீழத்தின் பகுதி என்பதை
நீங்கள் மறந்தீர்கள்.
உங்கள் ஊரை விட்டு வேரடி மண்ணோடு
புலிகள் பிடுங்கியெறிந்ததாக அரற்றித் திரிந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
மேற்குலகம் வந்து சமாதானம் பேசிய பொழுது...
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசிய பொழுது,
உங்களுக்கும் அதில் சரி பாதி பங்கு வேண்டும் என்றீர்கள்.
இடைக்கால நிர்வாகத்திலும் பங்கு கேட்டீர்கள்.
பேச்சுவார்த்தை மேசையில் குந்தியிருக்க வேண்டும் என்று
நாண்டு பிடித்து நின்றீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
வடதமிழீழத்திற்கும் மீண்டும் வாருங்கள்:
வந்து குடியமருங்கள் என்று
உங்களுக்கு நேசக்கரம் நீட்டினோம்.
கிளிநொச்சியில் உங்களைக் கட்டியணைத்து
மட்டின் பிரியாணி தந்தோம்.
வெறும் மட்டின் பிரியாணி அல்ல.
ஹலால் மட்டின் பிரியாணி!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
இருந்தும் என்னவாயிற்று!
ஜிகாத் குழு என்ன கலைந்தா போயிற்று?
ஓசாமா குழு என்ன ஓடியா போனது?
முத்தலீப் என்ன சிங்களப் படையிலிருந்தா விலகினான்?
எங்கள் தலைவனுக்கு அருகிருந்து
மட்டின் பிரியாணி தின்ற உங்கள் ஹக்கீம்
தின்ற வாசனை அடங்கு முன்பே
தமிழ் இறைச்சியும், பிரியாணியும் தின்பதற்காக
மகிந்தவுக்கு அருகில் கொலுவிருந்தான்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
புதையுண்டு போன பொழுது நீங்கள் கண்மூடி நின்றீர்கள்.
நந்திக்கடலில் எங்கள் குருதி வழிந்தோடிய பொழுது
நீங்கள் மகிந்த பண்டாவுடன் கூத்தாடினீர்கள்.
எமக்கென்று யாருமே இல்லையா?
என்று நாங்கள் கதறியழுத பொழுது...
அரற்றிப் புலம்பிய பொழுது
நீங்கள் எங்களை திரும்பியே பார்க்கவில்லை.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்.
‘‘நாம் ஈழத்தமிழர்கள் அல்ல.
அரபு தேசமும், பாரசீகமும், பாகிஸ்தானும், சாவகமுமே
எங்கள் தேசம்’’ என்று நீங்கள் பெருமிதம் கொண்டீர்கள்.
‘‘தமிழ் நாங்கள் பேசும் மொழியேயன்றி
நாம் தமிழர்கள் அல்ல: இலங்கைச் சோனகர்கள்’’
என்று பறைதட்டினீர்கள்.
இப்பொழுது என்னவாயிற்று?
அளுத்கமவில் நீங்கள் அழுவது
எங்களுக்குக் கேட்கிறது.
அச்சத்தில் உறைந்து உங்கள் பெண்களும், குழந்தைகளும் கதறுவதும்,
‘அல்லாவே எங்களைக் காப்பாற்றும்’
என்று உங்கள் ஆண்கள் இறைஞ்சுவதும்
அல்லாவிற்குக் கேட்கிறதோ, இல்லையோ,
நிச்சயம் எங்களின் காதுகளுக்குக் கேட்கிறது.
உங்களுக்காக நாங்கள் ஒரு கணம் இரங்குகிறோம்.
மனிதநேயம் கொண்டு உங்களை நினைக்கின்றோம்.
காலியில் எங்கள் கழுத்து அறுந்ததையும்,
கொழும்பில் நாங்கள் எரிந்ததையும் எண்ணிப் பார்க்கிறோம்.
நீங்கள் கைகட்டியும், வாய்புதைத்து நின்றதையும் அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்க்கின்றோம்.
அராபியர்களாக அல்ல.
பாரசீகர்களாக அல்ல.
பாகீஸ்தானியர்களாக அல்ல.சாவகர்களாகவும் அல்ல.
தமிழ் பேசும் முஸ்லிம்களாக...
இஸ்லாமியத் தமிழர்களாகவே,
உங்களை நாங்கள் பார்க்கின்றோம்.
எங்களுக்காக...
எங்களுக்கு உறுதுணையாக...
எங்கள் மண்ணை மீட்பதற்காக
ஆயுதம் ஏந்திக் களம் புகுந்து
வீரப்போர் புரிந்து மடிந்த
எங்கள் இஸ்லாமியத் தமிழ் சகோதரர்களான
லெப்டினன்ட் ஜுனைதீனையும், லெப்டினன்ட் காதரையும்,
ஆனந்தபுரத்தில் எங்கள் தலைவனைப் பாதுகாத்து
மடிந்த காதரின் அண்ணன் லெப்.கேணல் முகைதீனையும்
நாங்கள் மறக்கவில்லை.
யாழ் மண்ணை சூரியக்கதிர் கொண்டு சிங்களம் சுட்டெரித்த பொழுது
எங்களுக்காகத் தாய்த் தமிழகத்தில் தீமூட்டித்
தன்னுயிரை ஆகுதியாக்கிய
வீரத்தமிழ்மகன் - இஸ்லாமியத் தமிழ்மகன்
அப்துல் ரவூப்பையும்
நாங்கள் எவருமே மறந்துவிடவில்லை.
தமிழர்களோடு முஸ்லிம்கள் கைகோர்த்து நின்றிருந்தால்
எப்பொழுதோ தமிழீழம் மலர்ந்திருக்கும்.
இப்பொழுதும்கூட காலம் கடந்துவிடவில்லை.
ஹக்கீமையும், ஹிஸ்புல்லாவையும்
தூக்கியெறிந்து விட்டு
ஜுனைதீனும், காதரும், முகைதீனும், அப்துல் ரவூப்பும்
நடந்த வழியில் வாருங்கள்.
எங்கள் மண் விடியும் நாளில்
உங்களுக்கும் விடிவு கிட்டும்.
இல்லாது போனால் உங்களுக்கு சிங்களம் சமாதி கட்டும்.

- சேரமான்