கடந்த 15ஆம் திகதி 3 அகதிகளை மலேசியா அரசாங்கம்
கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் இலங்கைக்கு அனுப்பியது தொடர்பில் மலேசியா நாம் தமிழர் இயக்கத்தினர் புக்கிற் அமான் (தேசிய காவல் படை தலைமையகம்) ஒன்று கூடி ஆர்பாட்டம் செய்தனர்.
கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் இலங்கைக்கு அனுப்பியது தொடர்பில் மலேசியா நாம் தமிழர் இயக்கத்தினர் புக்கிற் அமான் (தேசிய காவல் படை தலைமையகம்) ஒன்று கூடி ஆர்பாட்டம் செய்தனர்.
தேசிய காவல் படை தலைவர் காலித் அபு பக்கர் ஈழ விவகாரத்திலும் விடுதலைபுலிகள் விவகாரங்களில் தலையிடுவது தேவையற்ற செயல் என்று மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார்.
இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லபட்டு, சர்வதேச ரீதியிலும் ஐ.நாவிலும் இலங்கை அரசின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில். வாழ வழியின்றி மலேசியாவுக்கு அகதிகளாக அடக்கலம் தேடவந்த ஈழ அகதிகளை அதே கொலைக்கார அரசிடம் கையளித்திருப்பது, பன்னாட்டு அகதிகள் உரிமை மீறல் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.
விடுதலைபுலிகளின் கொடியும் , புத்தகங்கள் வைத்ததை ஒட்டி இவர்கள் விடுதலை புலிகள் என்று மலேசியா காவல் படை கணிப்பது ஒரு முட்டாள்தனமானது என்றார். அப்படியென்றால், என் வீட்டில் தலைவர் பிரபாகரனின் படம் , விடுதலை புலிகளின் சின்னங்கள் , அதன் வரலாறுகளும் , போராட்டங்களும் தொடர்புடைய பரப்புரை பொருட்கள் உள்ளன , நாங்கள் என்ன விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களா? என்னை கைது செய்யுமா என்று வினவினார் கலைமுகிலன்.
நான் மட்டுமல்ல இந்த மலேசியா மண்ணில் வாழும் ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் வீட்டிலும் தலைவர் பிரபாகரனின் படமும் , அதன் சின்னமும் உள்ளது , அதற்கு எங்களை கைது செய்யுமா என்று மீண்டும் வினவினார். மலேசியா அரசாங்கமும் காவல் படையும் , இலங்கை அரசின் கை கூலிகல் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் கோஷமிட்டனர்.
அந்த மூன்று அகதிகளும் உண்மையிலே தீவிரவாதிகள் கும்பல்களை சேர்ந்தவர்கள் என்றால் , ஏன் அவர்களை மலேசியா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டவில்லை. எதற்காக இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மலேசியா நாம் தமிழர் இயக்க மத்திய செயலவை உறுப்பினர் மு அருச்சுனன் வினவினார் . அபு பாக்கரை சந்திக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் , ஐ ஜி பி சந்திக்க மறுப்பதாகவும் மு . அருச்சுனன் தெரிவித்தார்.
இது தொடர்பாக , நாடு முழுவதும் எழுச்சி பேரணி நடைபெறவுள்ளது குறிப்பாக பினாங்கு , கெடா , பெராக் , செலாங்கூர் போன்ற மாநிலங்களில் ஏற்பாடு செய்யவுள்ளோம் என்று அறிவேந்தன் தெரிவித்தார். இந்த கண்டன கூட்டத்தில் மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி !,நாம் தமிழர் கட்சி,சோராம் – க ஆறுமுகம் ,தமிழ் ஒருங்கமைப்பு – மஹா ,மலேசியா தமிழ் மாணவர்கள் முன்னேற்ற இயக்கம் மற்றும் திராவிட கழகத்திலிருந்து நாகபஞ்சு கலந்து கொண்டார்கள்.
மலேசியா நாம் தமிழர் இயக்கத்தோடு இணைந்து செயல்பட விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசிக்கு தொடர்பு கொள்ளளும்படியும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.