இந்திய பிரதமராக நரேந்திரமோடி கடந்த மாதம்
26ம்தேதி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அந்த விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்தார். நவாஸ் ஷெரிப்பும் விழாவுக்கு வந்து கவுரவித்தார். அப்போது, நவாஸ் ஷெரிப்பின் தாய்க்கு, மோடி ஒரு சால்வையை பரிசாக கொடுத்தனுப்பினார்.இதற்காக ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நவாஸ் ஷெரிப், மோடியின் தாய்க்கு சேலையொன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி இன்று செய்துள்ள ட்விட்டில், "நவாஸ் ஷெரிப் ஜி, அருமையான ஒரு வெண்ணிற சேலையை எனது தாய்க்காக அனுப்பி வைத்துள்ளார்.
இதற்காக நெகிழ்ச்சியடைகிறேன். எனது தாயாருக்கு இந்த சேலையை விரைவில் அனுப்பி வைப்பேன்" என்று கூறியுள்ளார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.