கருணா அம்மானின் பிரிவு – 1 - TK Copy கருணா அம்மானின் பிரிவு – 1 - TK Copy

  • Latest News

    கருணா அம்மானின் பிரிவு – 1

    மூன்றாம் ஈழப்போராட்டக் காலத்தில் இலங்கை இராணுவத்தால்
    வன்னி பேர் நிலப்பரப்பை நோக்கி பெருத்த எடுப்பில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையே ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை . இதன் முக்கிய இலக்கு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான 76KM தூரமான நெடுஞ்சாலையை கைப்பற்றுவதும் அத்துடன் முடியுமானவரை புலிகளை அழிப்பதுமேயாகும்.

    இந்த இராணுவ நடவடிக்கையே மூன்றாம் ஈழப்போராட்டக் காலத்தில் பெரியதும் அத்துடன் நீண்டதுமான இராணுவ நடவடிக்கையாகும் . இந்த நடவடிக்கை 1997.05.13 ஆரம்பிக்கப்பட்டு வன்னியின் கணிசமான பரப்பளவை தக்கவைத்து இராணுவம் மாங்குளம் , ஓட்டிசுட்டான் பகுதிகள் வரை உட்புகுந்து புலிகளை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர் . விடுதலைப்புலிகள் வாழ்வா? சாவா ? என்று இருந்த நிலையில் கிழக்கில் இருந்து ஜெயந்தன் படையணியுடன் வந்திறங்கி இராணுவத்தின் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதியே கேணல் கருணா ஆவார்.

    விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்களில் கேணல் கருணாவின் பங்கு இல்லாத சண்டை இல்லை என்றே கூறலாம் . மேலும் ஓயாதஅலை மூன்று தாக்குதல் மூலம் முக்கிய இராணுவ இலக்குகளை தாக்கியழித்த வண்ணம் கிழக்கின் ஜெயந்தன் படையணி பரந்தன் சந்தியிலிருந்து ஆனையிறவை நோக்கி நகர்ந்த்தது . ஆனால் இறுதியாக நடந்த வெற்றிவிழாவில் கிழக்குப்பிராந்திய போராளிகளுக்கு புலிக்கொடியை ஏற்றும் விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது . 

    இந்த புலிக்கொடியை கேணல் கருணா ஏற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறினார் . ஆனால் தலைமைப்பீடம் கேணல் பானுவை புலிக்கொடி ஏற்ற பரிந்துரைத்தது . இந்த இடத்தில் ஒரு விடயத்தை கூறவேண்டும் ஆணையிரவு இராணுவ முகாம் தாக்கியழிப்பின் பின்னணியில் புலிகளின் முன்னணி தாக்குதல் தளபதியான பிரிகேடியர் பால்ராஜின் பங்கு முக்கியமானது. இவர் கிட்டத்தட்ட 1500 ஆன், பெண் போராளிகளுடன் இராணுவ முகாமின் பின்புறமாக உள்ள நீர்தொடுவையை கடந்து இத்தாவில் பகுதியில் தரையிறங்கி . தனித்து நின்று ஆனையிறவு முகாமை கைப்பற்றும் வரை சண்டை செய்தவர் ஒயாதாஅலை மூன்று சமர்களில் ஜெயந்தன் படையணியினரால் கைப்பற்றப்படும் இராணுவத்தின் உடைமைகள் , உணவுப் பொருட்கள் எல்லாம் புலிகளின் நிதிப்பிரிவினரால் சேகரிக்கப்பட்டு களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்படாது.

    களத்திலே நிற்கும் போராளிகளுக்கு உணவுவகைகள் கொடுக்கப்படாது களஞ்சியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதனால் ஜெயந்தன் படையணி போராளிகளுக்கும் நிதி பொறுப்பாளருக்குமிடையில் அடிக்கடி கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் களமுனைகளில் ஜெயந்தன் படையணியால் கைப்பற்றப்படும் உணவுபொருட்கள் அனைத்தும் உடனுக்குடனே ஜெயந்தன் படையணியால் அழிக்கப்பட்டது . ஒரு கட்டத்தில் வன்னி மாவட்ட நிதிப் பொறுப்பாளரான குட்டி என்பவரால் களமுனையிலிருந்து இராணுவத்தின் பொருட்கள் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட ஜெயந்தன் படையணி அந்த லொறியை துரத்தி சென்று கேப்பாபிளவு வீதியில் வைத்து சுட்டுள்ளனர்.

    இச் செயற்பாடுகள் அனைத்தும் புலிகளின் தலைமை பீடம் வரை சென்றது . ஆனால் ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படவில்லை . ஓயாத அலை மூன்றின் பின்னர் கருணா தனது ஜெயந்தன் படையணியுடன் மணலாறு காட்டுப்பகுதிக்கு சென்றார் . இம் முறை கருணாம்மான் ஜெயந்தன் படையணியை வைத்து திருகோணமலை நோக்கியொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை செய்ய இருந்தார் . இதற்காக வேவுகள் பார்க்கப்பட்டன இதன் பின்னர் இத் திட்டமானது மற்றைய தளபதிகளினால் நிறுத்தப்பட்டது இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஆட் லேறிக்கு தேவையான ஷெல்கள் இல்லை என்பதாகும். இத்திட்டம் நடைபெற்றிருக்குமாயின் கருணாவின் புகழ் மேலும் ஒரு படி மேலோங்கியிருக்கும் என்று பின்னர்தான் தெரியவந்தது . 

    இதனை நிறுத்தியது வன்னியிலுள்ள தளபதிகளின் சதியாக காட்டப்பட்டது . இத்திட்டம் கைவிடப்பட்டபினன்ர் கேணல் கருணா தனது போராளிகளுடன் கிழக்கு நோக்கி சென்று தனது படையணிகளை மேலும் விஸ்தரித்தார் . சமாதான காலப்பகுதியில் ஒருமுறை திருகோணமலை மாவடத்திலுள்ள புலிகளின் முகாமுக்கு கருணாம்மான் விஜயம் செய்தார் . அக் காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக கேணல் பதுமன் இருந்தார் . புலிகள் மத்தியில் கருணாம்மான் "ஒன்றுக்கும் ஜோசிக்க வேண்டாம் சண்டை தொடங்கினால் உங்களுக்கு போராளிகளை தருகின்றேன் ஆயத்தமாக இருங்கள் " என்று கூறினார் . கருணாவின் இந்த விசுவாசம் பிரிந்து செல்லும் வரை உறுதியாகவே இருந்தது . மேலும் கருணாம்மான் ஐந்தாங்கட்ட பேச்சுவார்த்தயின்போது புலிகளின் அணியின் முக்கிய உறுப்பினராக பலமுறை வெளிநாடு சென்று வந்தார்.

    அங்கு வைத்து இவரை மட்டக்களப்பின் மண்ணின் மைந்தர்கள் என்று கிழக்கு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமிழ்மக்கள் கருனா அம்மானை சந்தித்து கிழக்கின் அபிவிருத்திக்கு போதிய நிதியை நாங்கள் தருகிறோம் என்று கூறியுள்ளனர் . இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கிழக்கு மாகான புலம்பெயர் மக்கள் அவரை மாத்திரம் பிரத்தியோகமாக சந்தித்ததிலிருந்து சில பிரிவினைவாதக் கருத்துக்களை முன்வைத்திருக்கலாம் . மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல புத்திஜீவிகள் உட்பட பல்கலைகழக விரிவுரையாளர் மட்டத்தில் கருனாம்மானின் பிரிவை சரியென வாதிட்டுள்ளனர் . கருனாம்மானுக்கு ஆதரவை வழங்கியதன் மூலம் தமது யாழ்ப்பான எதிர்ப்பை மறைமுகமாகக் காட்டியுள்ளனர் . 

    கருணா அம்மானின் பிரிவால் விடுதலைப்போராட்டம் . அழிந்தது உண்மை அத்துடன் வடகிழக்கு என இணைந்த தனி மாகான அலகும் அழிந்துவிட்டது என்பதும் உண்மை. இவரின் பிரிவால் ஏற்பட்ட தாக்கம் வடபகுதியிலுள்ள தமிழ் மக்களைவிட கிழக்கு பகுதியிலுள்ள தமிழ் மக்களே கூடியளவு தாக்கத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்குவர் . 

     "ஈழத்தின் வலி " 
    DR. மகேஸ்வரன் உமாகாந் விரிவுரையாளர் (மருத்துவம் )

    வாசகர்களுக்கு-

    இந்த கட்டுரையின் தகவல்கள் கட்டுரையாளரின் பார்வையிலும் அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கருணா அம்மானின் பிரிவு – 1 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top