தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து
போட்டிகளும், குழிபறிப்புக்களும், காட்டிக்கொடுப்புகளும், கழுத்தறுப்புக்களும் இருந்து வந்தது. அது இன்றுவரை தொடர்வதாகவே இருக்கின்றது. விடுதலைப்போராட்ட காலங்களில் விடுதலைப்புலிகள் பல வீரவரலாறுகளை நிகழ்த்தி வெற்றியின் உச்சிக்கே சென்றபோது உண்மையிலேயே விடுதலைப்புலிகளைவிட அவர்களின் ஆதரவாளர்களும் ஆதரவாக எழுதிவந்த எழுத்தாளர்களும் பெருமைப்பட்டார்கள் புகழ்ந்து திரிந்தார்கள்.
இன்று நிலமை மாறியநிலையில் அதே விடுதலைப்போரையும் போராட்ட வழியையும் அதே விடுதலைப்போரின் பெயரில் சுகவாழ்வு அனுபவித்துவந்த சில ஊடக நண்பர்கள் எவ்வாறு துரோகிகளாக மாறினார்களா அல்லது முன்னரே புலி வேசமிட்ட துரோகிகளா என்பதை வாசகர்கள் பார்வைக்காக விடுகின்றோம். இவ்வாறு மாறியவர்கள் எதிரியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொடர்ந்தும் இடம் பெறும் இது தொடர்பான வாசகர்களின் கருத்துக்களும் கட்டுரையின் கீழ் இணைக்கப்படும். எனவே இது தொடர்பிலான உங்கள் கருத்துக்கள் பதிவுகளை அனுப்பி வையுங்கள்.
துரோகம் -1
இயக்கச்சியை சேர்ந்த சிவராசா கருணாகரன் என்பவர், முன்பு விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் வெளியீடான வெளிச்சம் இதழின் ஆசிரியராக இருந்தவர். விடுதலைப்புலிகளினால் தமீழீழ தேசியத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப்புலிகள், சுதந்திரப்பறவைகள், ஈழநாதம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவாசல் பாலன், மக்ஸ்வெல் மனோகரன், பிரகலாத கேமந் என்ற பெயர்களில் ஏராளமான கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிக் குவித்த்தார். ஆனையிறவுச்சமரை நினைவுகொள்ளும் வகையில் வெளிவந்த ஆனையிறவு கவிதை நூலை உருவாக்குவதிலும் இவரது கணிசமான பங்கிருந்தது.
இயக்கச்சி கருணா என்ற பெயரில் அறியப்படாத ஒருவராக இருந்த இவரை விடுதலைப்புலிகள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் 2008 ஆண்டில் விடுதலைப்புலிகளை பகைத்துக் கொண்ட இவர் அன்றிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக மறைமுகமாக செயற்பட்டுவந்தார். 2009 ஏப்பிரல் மாதத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த கருணாகரன் தென்மராட்சியில் உள்ள அல்லாரை என்னுமிடத்திலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கிருந்து விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து அநாமதேயன் என்ற பெயலில் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் காலச்சுவடு இலக்கிய சஞ்சிகையில் வெளியாகியிருந்தன.
ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் இவரது மைத்துணராவர் இவர் உறவினர் மூலமாக ஈபிடிபியில் இணைந்து செயற்படும் கருணாகரனும், முன்னர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவரான அன்ரன் அன்பழகன் என்பவரும் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடைய ஊடகவியலாளர்கள், மற்றும் ஆக்க இலக்கியவாதிகளை அச்சுறுத்திவருவதாக பெயர்குறிப்பிட விரும்பாத ஆனால் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட இலக்கியவாதி ஒருவர் தெரிவித்தார்.
நோர்வேயிலிருந்து இயக்கப்படும் பொங்கு தமிழ் இணையதளத்தில் விதுல் சிவராஜா, சிவ. பாக்கியராஜா, வெண்ணிலா எனப் பல புனைபெயர்களில், அடிபணிவு அரசியலை ஆதரித்து ஊதியம் பெற்று எழுதி வருகிறார். இதுதவிர வெவ்வேறு பெயர்களில் இணைய ஊடகங்களிலும் எழுதி வருகிறார். தினக்குரல் பத்திரிகையில் கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன், ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையில் யோசப் தயாளன் ஆகிய பெயர்களிலும் இவர் கட்டுரைகளை எழுதிவருகிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது அதிருப்தி கொண்டவர்களால் இயக்கப்படும் பொங்கு தமிழ் தான் இப்படியென்றால், எதுவித கொள்கையுமற்ற, பணத்திற்காக எழுதிக்குவிக்கிற எழுத்து விபச்சாரியான கருணாகரனை மக்கள் வானொலி என தன்னை அழைத்துக் கொள்கிற அனைத்துலக உயிரோடை (ஐ.எல்.சி தமிழ்) போன்ற ஊடகங்களும் அணைத்துக் கொள்வதுதான் விந்தையாக இருக்கிறது. இந்த விபச்சாரியின் எழுத்துக்களுக்கு வானொலியில் குரல் வடிவம் கொடுக்கிற பெருமதிப்புக்குரிய தாசீசியஸ் ஐயா அவர்கள் தயைவு கூர்ந்து இதனைக் கவனத்தில் எடுப்பாரா ?
தனது தமிழ் எதிர்ப்பு அரசியலிற்கு தமிழ் நாட்டிற்கு சென்று எழுத்தாளர்களை சேர்க்கும் செயற்பாடுகளிலும் இவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இந்த அரசியல் விளங்காது இவர் வலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக போராளியாக இருந்த தமிழ்கவி அவர்களும் வீழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. அவரும் அண்மைக்காலங்களில் விடுதலைப்புலிகளை தூற்றியும் தேசியத்தலமையை நடுநிலமையோடும் விமர்சித்து வருவது அண்மைக்கால மேடைகளில் காணமுடிகின்றது.
கரிகாலன்
பின்னிணைப்பு: (சரிதம் ஆசிரியர் பீடம்)
சி.கருணாகரன் குறித்து மேலே குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் உண்மையானவை. ஆனாலும் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளில் சிலவற்றில் சில தவறான தகவல்கள் இருப்பதனால் சரியானவற்றையும் மேலதிக தகவல்களையும் கீழே இணைக்கின்றோம்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் இணையத்திற்கான கட்டணப் பதிவினை மேற்கொள்வதற்கு பொதுவான ஒரு நபர் தேவை என்பதற்காக கருணாகரனுக்கு இயக்குநர் என்ற பதவியை பெயரளவில் கொடுத்த விடுதலைப்புலிகள் பின்னர் அவருக்கு செய்தி ஆசிரியர் என்ற நிலையினை வழங்கியிருந்தனர். இறுதியில் அந்தப் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார்.
செய்தியாசிரியாகச் செயற்பட்ட காலத்தில் அவர் அங்கிருந்து தொலைபேசி, இணையத்தின் ஊடாக பெருமளவான தகவல்களை தனது மைத்துணரான சந்திரகுமார் ஊடாக அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
தற்போது இலங்கையின் தேசிய பத்திரிகைகளாகச் சொல்லப்படுகின்ற வீரகேசரி பத்திரிகையில் கிருஷ்ணமூர்த்தி
அரவிந்தன், அரவிந்தன் என்ற பெயர்களிலும், சுடரொளி பத்திரிகையில் “யோசப் தயாளன்” என்ற பெயரிலும் கருணாகரன் எழுதி வருவதோடு, வீரகேசரி பத்திரிகையின் கிளிநொச்சிச் செய்தியாளராகவும் செயலாற்றிவருகின்றார். குறித்த கட்டுரைகள் ஊடாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எழுத்துப் பணியை மேற்கொண்டுவருகின்றார்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் பத்திரிகையான சுடரொளியிலேயே அவர் அங்கம் பெறுகின்ற கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் எதிராக எழுதுகின்ற அரும்பணியை கருணாகரன் (யோசப் தயாளன்) ஆற்றிவருகின்றமை அவரது அசாத்திய திறமையாகும்.
ஈபிடிபியினரின் ஊடகச் செயற்பாடுகளில் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் 20 வரையான பணியாளர்களை இணைத்துள்ள கைங்கரியத்தினையும் கருணாகரன் மேற்கொண்டிருக்கின்றார். (இவர்களில் புலிகளின்குரல், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி, ஈழநாதம், நமது ஈழநாடு உட்பட்ட ஊடகங்களின் பணியாளர்கள் உள்ளடக்கம்).
ஒட்டுமொத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கான பலமாகத் திகழ்ந்தவர்களை ஈபிடிபியின் பலமாக்கவேண்டும் என்பதே அவரது முனைப்பு. ஆனாலும் தேசியத்தில் கொள்கைப் பற்றுடன் இருந்த எவரையும் அவரது கொள்கைக்குள் இழுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை என்பதை விட அவரால் நெருங்கவே முடியவில்லை என்பதே உண்மையாகும்.
புலிகளின்குரல், தமிழீழ வானொலிகளில் கேட்ட குரல்களை தற்போது நாள் தோறும் இதயவீணையில் கேட்கமுடிகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது, விடுதலைப்புலிகளின் தேசிய எழுச்சிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவைப் புகழ்ந்து பாடவே இல்லை என்றாலும், ஈபிடிபி நடத்திய நிகழ்ச்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்து அவர்களுக்கு தேசத்துரோகிகள் முத்திரை குத்துவதில் கருணாகரன் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
இதனைவிடவும், கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் சகோரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் சகோதரி (வயோதிபர்) ஆகியோர் ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தமது உறவினர்களை விடுதலை செய்யுமாறு கோரியதாக ஈபிடிபி நடத்திய நாடகத்தின் பின்னணியில் கருணாகரனே இருந்திருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு குடும்பத்தில் ஒவ்வொருவர் சேரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்த தவிர்க்கமுடியாத காலகட்டத்தில கருணாகரனின் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகள் விலக்களிப்பு வழங்கியிருந்தனர்.
ஆனாலும் வன்னியில் போர் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தீவிர பரப்புரை நடவடிக்கைகளில் சந்தி சந்தியாக கருணாகரனும் இன்னும் சில எழுத்துலக முக்கியஸ்தர்களாக தம்மைக் கருதிக் கொள்வோரும் செயற்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் காயம் அடைந்தவர்களை ஏற்ற வன்னிக்கு வரும் போது அவர்களுக்கு முன்பாக புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மக்களைத் தூண்டிய பின்னணியிலும் கருணாகரன் ஈடுபட்டிருந்தார்.
கருணாகரன் கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்து, முகாமில் இருந்து வெளியேறி புலத்திலும், தமிழகத்திலும் இருக்கின்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களைத் தொடர்பு கொண்டு வன்னியல் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள், ஊடகர்கள், இலக்கியத்துறை சார்ந்தோருக்கு உதவி செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு கோரி மில்லியன் கணக்கில் நிதியினைப் பெற்றுச் சுருட்டியிருக்கின்றார். இதற்கென ஒரு செயற்குழுவை அமைக்கப்போவதாகக் கோரியபோது அவருடன் ஒட்டி நிற்கும் சில இளைஞர்கள் தவிர பெருமளவானோர் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இந் நிலையில் குறித்த மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம் எங்கே? அதற்கு என்ன நடந்தது? அது அவருக்குத் தான் தெரியும்.
தமிழக சஞ்சிகைகளான காலச்சுவடு உட்பட்ட சஞ்சிகைகளுக்கு தேசியத்திற்கு எதிரான பதிவுகளை தான் மட்டுமல்லாமல் தன்னால் எழுத வைக்கக்கூடியவர்களைக் கொண்டு எழுதியிருக்கின்றார். இவற்றிலும் முக்கியமாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து ஈபிடியுடன் பணியாற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாட்டினையும் கருணாகரனே மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சியில் அன்ரன் அன்பழகன், விஜயசேகரம் உட்பட்ட நெருங்கிய நண்பர்களின் துணையுன் தமிழ்த் தேசிய வேர்களை கண்டறிந்து களைந்தெடுங்கும் அரும்பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றமை தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு பெரும் நெருக்கடியினைக் கொடுத்திருக்கின்றது.
ஈபிடிபி முக்கிய ஊடகச் செயற்பாட்டாளர் ருஷாங்கனுடன் கூட்டுச் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து “சிகரம்” என்ற சஞ்சிகை வெளிவந்த போது அதிலும் கருணாகரன் தேசியத்திற்கு எதிராக பல ஆக்கங்களை எழுதியிருக்கின்றார். எல்லாமாக இன்னமும் ஏராளம் வகைகளுக்குள் அடக்கக் கூடிய கருணாகரனுக்கு “ஊடக விபச்சாரி” என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்பதற்கு அப்பால் அவருடன் தோள் கொடுக்கும் இன்னும் சில தேசியவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரது முகங்களையும் வெளிப்படுத்தக் காத்திருக்கின்றோம்.
தொடரும்....