யுத்தத்தால் விரட்டப்பட்ட மக்களை அவர்களது சொந்த நிலங்களில்
மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த கண்டன போராட்டத்தை குழப்பும் வகையில் மக்களுக்கு பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிதரன், வட மாகாண அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம், சபை உறுப்பினர்களான கஜதீபன், சர்வேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதி பாஸ்கரா, பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.