'இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேசும்போது
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நான் குறுக்கிட்டு, இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.குண்டுச் சத்தம் தொடர்ந்தால் மேலும், குண்டுவெடிப்புகள் தொடர்ந்தால் இரு நாட்டு பேச்சுவார்த்தையின் சத்தமும் அதில் காணாமல் போய் விடும். எனவே குண்டுவெடிப்புகள் முதலில் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாம் என்ன பேசுகிறோம் என்பது நமக்கு முதலில் புரியும். தொடர்ந்து நடைபெறவும் வழி பிறக்கும் என்றும் மோடி வலியுறுத்தினார். தமிழக மீனவர் பிரச்சினை ராஜபக்சேவுடன் மோடி பேசுகையில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசினார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது குறித்து விவாதித்தார். தமிழ் மீனவர்கள்.. நான் இந்தப் பிரச்சினை குறித்த பேச்சின்போது இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன். 13வது அரசியல் சட்ட திருத்தம் குறித்தும் ராஜபக்சேவிடம் பேசப்பட்டது என்றார் சுஷ்மா.