உலகின் மிகவும் விரும்பத்தகாத பிரதமர் என்று வர்ணித்துள்ளது. tony abbott பிரதம மந்திரி ஒரு சர்ச்சை முடிவதற்கு முன்னர் அடுத்த சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்கிறார் என்று வொஷிங்டன் போஸ்ட் கட்டுரை தீட்டியுள்ளது.
ஒரு வானொலி நேர்காணலில் கேள்விகளை எதிர்கொண்ட விதமும், விரக்தியடைந்த நேயரின் தொழிலை பரிகசிக்கும் வகையிலான கண்சிமிட்டலும், மிகவும் கடுமையான செலவுச் சிக்கன பட்ஜெட்டும் ரோனி அபொட்டின் புகழில் கறைபடியச் செய்துள்ளது. அது போன்று இலங்கை அகதிகளையும் உயிர் இருந்தும் நடமாட முடியாத நிலைக்கு தற்ப்போது BVE என்று அழைக்கப்படும் நிபந்தனை விசாவினை வழங்கி வைதிருக்கின்றமையும் ஒரு பாரிய மனிதாபிமானம் அற்ற செயற்பாடாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிசி நிறுவனத்துடனான நேர்காணலில் தம்மை க்ளோரியா என்று அறிமுகம் செய்து கொண்ட மூதாட்டியொருவரின் தொழிலைக் கேட்ட பிரதமர் கண்சிமிட்டி கேலியாக புன்னகைத்தார். அன்றாடச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தொலைபேசி பாலியல் தொழிலாளியாக வேலை செய்வதாக மூதாட்டி கூறியிருந்தார். பிரதமரின் கண்சிமிட்டல் பற்றி இந்தோனேஷிய பத்திரிகைகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. இது பிரதமரின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது என ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளது.