முதலில் எந்த தேர்தல் நடைபெறும் - TK Copy முதலில் எந்த தேர்தல் நடைபெறும் - TK Copy

  • Latest News

    முதலில் எந்த தேர்தல் நடைபெறும்


    நாட்டில் மீண்டும் தேசி­ய­மட்டத் தேர்­தல்கள் தொடர்­பான தக­வல்­களும் ஊகங்­களும்
    வெளி­வர ஆரம்­பித்­து­விட்­டன. தற்­போ­தைய நிலை­மையில் முதலில் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­றுமா? அல்­லது ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றுமா? என்ற கேள்­விகள் எழுப்­பப்­பட்­டு­வ­ரு­வ­துடன் அதற்­கான ஆரம்­ப­கட்ட தயார் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சியல் கட்­சிகள் தற்­போ­தி­ருந்தே காய் நகர்த்­தலை ஆரம்­பித்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.
    தற்­போ­தைய நிலை­மையில் அர­சாங்­கத்தின் தயார் நிலை­களை பார்க்­கும்­போது ஊவா மாகாண சபைத் தேர்­த­லுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளமை தெரி­கின்­றது. ஆனால் ஊவா மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் நடை­பெ­றப்­போ­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலா? அல்­லது ஜனா­தி­பதி தேர்­தலா? என்­பதே தீர்­மானம் எடுக்­கப்­ப­டாத விட­ய­மாக உள்­ளது. அல்­லது தீர்­மானம் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­ப­டாத விட­ய­மா­கவும் இது இருக்­கலாம். இந்­நி­லையில் அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்­கான ஆயத்­தங்­களில் துரித காய் நகர்த்­தலில் ஈடு­பட்­டுள்­ளன.
    ஜனா­தி­பதித் தேர்தல் விடயம் பேசப்­ப­டு­கின்ற நிலையில் பொது­வேட்­பாளர் விவ­கா­ரமும் வெளியில் வந்­துள்­ளது. பொது வேட்­பாளர் பட்­டியல் தற்­போ­தைய நிலை­மையில் நீண்­டு­கொண்டே செல்­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது.
    எதிர்­வரும் 2015 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் ஏதா­வ­தொரு தேசியக் தேர்தல் நிச்­சயம் நடக்கும் என்­ப­தனை பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி ஆருடம் கூறி­வ­ரு­கின்­றது. அந்­த­வ­கையில் எந்­த­வொரு தேசிய மட்டத் தேர்­த­லா­வது 2015 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் நடக்­கலாம் என்ற எடு­கோளின் அடிப்­ப­டை­யி­லேயே பிர­தான அர­சியல் கட்­சி­களின் அர­சியல் நகர்­வுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.
    இறு­தி­யாக நாட்டில் ஜனா­தி­பதித் தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி நடை­பெற்­றது. எனினும் ஜனா­தி­பதி 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இரண்டாம் பதவிக் காலத்­துக்­காக பத­வி­யேற்­றி­ருந்தார். அந்­த­வ­கையில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்கு 2016 ஆம் ஆண்டு இறுதிப் பகு­தி­வரை அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் கால அவ­காசம் இருக்­கின்­றது. அதே­வேளை பாரா­ளு­மன்றத் தேர்­தலை பொறுத்­த­மட்டில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடை­பெற்­றது. எனவே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு வரை கால அவ­காசம் அர­சி­ய­ல­மைப்­பின்­படி இருக்­கின்­றது.
    கடந்த 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 127 ஆச­னங்­க­ளையும் தேசியப் பட்­டியல் மூலம் 17 ஆச­னங்­க­ளையும் பெற்று மொத்­த­மாக 144 பிர­தி­நி­தி­களை பெற்­றது. பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி 51 ஆச­னங்­க­ளையும் தேசிய பட்­டியல் மூலம் 9 ஆச­னங்­க­ளையும் பெற்று 60 ஆச­னங்­களை மொத்­த­மாக பெற்­றி­ருந்­தது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 13 ஆச­னங்­க­ளையும் தேசியப் பட்­டியல் மூலம் 1 ஆச­னத்­தையும் பெற்று 14 ஆச­னங்­களை மொத்­த­மாக பெற்­றி­ருந்­தது.
    ஜன­நா­யகக் தேசியக் கூட்­டணி 5 ஆச­னங்­க­ளையும் தேசியப் பட்­டியல் மூலம் 2 ஆச­னங்­க­ளையும் பெற்று 7 பிர­தி­நி­தி­களை பெற்­றி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். பின்னர் அர­சாங்கம் ஆளும் கூட்­ட­ணியின் எம்.பி. க்களின் எண்­ணிக்­கையை 160 ஆக உயர்த்­திக்­கொண்­டது. அந்­த­வ­கையில் தற்­போது மீண்டும் முதலில் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­று­மாயின் இவ்­வா­றான தொரு தேர்தல் முடிவு வருமா? அல்­லது இத­னை­விட வித்­தி­யா­ச­மான முடிவு வருமா என்­பது இன்று பல­ராலும் எழுப்­பப்­படும் முக்­கிய விட­ய­மாக அமைந்­துள்­ளது.
    எனினும் எமது நாட்டைப் பொறுத்­த­மட்டில் அர­சியல் சூழ்­நிலை கள­நி­லை­வ­ரங்­க­ளுக்கு அமை­யவே தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன. தேசிய மட்டத் தேர்­தல்கள் எப்­போதும் ஆளும் கட்­சிக்கு சாதக­மான காலப்­ப­கு­தியில் நடத்­தப்­படும் என்­ப­தனை மறுக்க முடி­யாது. அந்த வகையில் அர­சாங்­கத்­துக்கு தனக்கு சாத­க­மான காலப்­ப­கு­தியில் தேசிய தேர்தல் ஒன்றை நடத்த முற்­படும் என்­ப­தனை எதிர்­பார்க்­கலாம்.
    அண்­மையில் நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்­தல்­களில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி குறிப்­பி­டத்­தக்க சரிவை சந்­தித்­தது என்றே கூறலாம். ஆளும் கட்சி தாங்கள் சரிவை சந்­திக்­க­வில்லை என்றும் கூறி­னாலும் பெற்­றுக்­கொண்ட பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையை கடந்த 2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தலில் பெற்ற பிர­தி­நி­தி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் சரிவு ஏற்­பட்­டுள்­ள­மையை புரிந்­து­கொள்ள முடியும்.
    எனவே கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபை­களில் ஏற்­பட்­டுள்ள ஓர­ளவு வீழ்ச்­சி­யா­னது தேசிய மட்டத் தேர்தல் ஒன்றை விரைவில் நடத்­த­வேண்டும் என்ற ஒரு தேவையை ஆளும் கட்­சிக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.
    அண்­மையில் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்க்­கட்­சிகள் கோரினால் எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்­து­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக கூறி­யி­ருந்தார். அதா­வது நாட்டின் எதிர்க்­கட்சி கள் கோரினால் எந்­த­வொரு தேர்­த­லுக்கும் தயார் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். தேசிய தேர்தல் ஒன்­றுக்கு அர­சா­ங்கம் செல்­ல­வேண்டும் என்று எதிர்க்­கட்­சிகள் விடுத்த கோரிக்கை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.
    எனினும் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­னது அடுத்து உட­ன­டி­யான முறையில் ஊவா மாகாண சபைத் தேர்­த­லி­லேயே கவனம் செலுத்­தி­யுள்­ள­துடன் அதன் பின்னர் தேசிய தேர்தல் ஒன்றை குறி வைத்­துள்­ளது என்று கூறலாம். அந்­த­வ­கையில் ஊவா மாகாண சபைக்­கான ஆயத்­தங்­களில் அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றன. குறிப்­பாக எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­துக்கு முன்னர் ஊவா மாகாண சபைத் தேர்­தலை அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் நடத்­த­வேண்­டிய தேவை உள்­ளதால் அதற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. ஊவா மாகாண சபைத் தேர்­த­லுக்குப் பின்­னரே எந்­த­வொரு தேர்­தலும் நடை­பெறும் என்­ப­தனை இவ்­வாரம் தேர்­தல்கள் ஆணை­யா­ளரும் கட்­டியம் கூறி­யி­ருந்தார்.
    கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சீனா­வுக்கு விஜயம் செய்­வ­தற்கு முன்­ன­தாக ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்தை தலைமை தாங்கி நடத்­தி­யி­ருந்தார். இந்தக் கூட்­டத்­தின்­போதும் ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்தே விரி­வான முறையில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. ஊவா மாகாண சபையின் பத­விக்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­துடன் நிறை­வ­டை­கின்ற நிலையில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாத­ம­ளவில் ஊவா மாகாண சபைத் தேர்­தலை அர­சாங்கம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.
    அர­சியல் கள­நில­வ­ரங்கள் என்­பன அடிக்­கடி நிலை மாறிக்­கொண்­டி­ருக்கும் அம்­ச­ங்­க­ளாகும். எனவே அர­சியல் கள நிலை­வ­ரங்­க­ளுக்கு அமைய பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்­லது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்­புகள் வெளி­வ­ரலாம்.
    அதன்­படி அண்­மையில் தேசிய தேர்தல் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஆளும் கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் விரைவில் பாரா­ளு­மன்றத் தேர்­தலே நடை­பெறும் சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.
    ஆளும் கட்­சியில் உள்ள முக்­கி­யஸ்­தர்கள் பலர் ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்­க­ளி­லேயே உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஒரு­சிலர் முதலில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று கோரு­கின்ற அதே­வேளை ஒரு­சிலர் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று கோரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.
    இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் முதலில் நடை­பெறும் என்ற எடு­கோளின் அடிப்­ப­டையில் எதிர்க்­கட்­சிகள் பொது வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்பில் பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றன. பொது வேட்­பாளர் பட்­டி­யலில் பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.
    மாது­ளு­வாவே சோபித்த தேரர், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க, வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் உள்­ளிட்­டோரின் பெயர்கள் பல­ராலும் உச்­ச­ரிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் மாது­ளு­வாவே சோபித்த தேரர் உறு­தி­யாக இருக்­கின்றார்.
    இது இவ்­வாறு இருக்க பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி யானது எந்தத் தேர்­தலை அர­சாங்கம் நடத்­தி­னாலும் அதனை எதிர்­கொள்ள தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. அண்­மையில் ஐ.தே.க. வின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த கட்­சியின் தேசிய தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமது கட்சி தனி வேட்­பா­ளரை நிறுத்தும் என்று கூறி­யி­ருந்­த­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. இத­ன­டிப்­ப­டையில் பார்க்கும்போது ஐக்­கிய தேசிய கட்சி எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­காமல் கட்­சியின் வேட்­பா­ளரை நிறுத்தும் என்றே ஊகிக்க முடி­கின்­றது.
    எனினும் இந்த விவ­காரம் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்த கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க, ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்­னரே வேட்­பா­ளரை நிறுத்­து­வது குறித்து பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி தீர்­மானம் எடுக்கும் என்றும் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு பொது­வான இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.
    இந்த விடயம் குறித்து மேலும் கருத்து வெளி­யிட்­டி­ருந்த அத்­த­நா­யக்க குறிப்­பி­டு­கையில் '' நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருப்­ப­தோடு, அது தொடர்பில் புதிய அர­சியல் அமைப்பு நகல் ஒன்­றையும் முன்­வைத்­துள்ளோம். மேலும் மாது­ளு­வாவே சோபித்த தேரரும் இந்த விட­யத்­திற்­காக முன்­னிற்­கின்றார். இந்­நி­லையில் அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியே இது தொடர்­பான முடிவை எடுக்­க­வேண்டும். இதற்கு எதிர்க்­கட்சி அர­சியல் கட்­சி­க­ளுடன் இணக்கப்பாட்டை எட்டவேண்டியது முக்கியமாகும்.
    எவ்வாறெனினும் இவை அனைத்தும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே சாத்தியமாகும். அது தொடர்பில் தற்போது எதனையும் கூறமுடியாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
    இதனிடையே மக்கள் விடுதலை முன்ன ணியும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளமை தெரிகின்றது.
    அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் மாதுளுவாவே சோபித்த தேரருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றும் நடைபெற்றிருந்தது. இது எதிர்கால அரசியல் நகர்வுகளில் மிக முக்கியமான நிலைமைகளை உருவாக்குவதாக அமையலாம். மக்கள் விடுதலை முன்னணியும் மாதுளுவாவே சோபித்த தேரரும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
    எது எவ்வாறு இருப்பினும் நாட்டு மக்கள் அரசியல் தூரநோக்குடன் சிந்திக்க முன்வரவேண்டும். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் மிக முக்கிய அம்சமாகும். அந்த ஜனநாயக உரிமையை நாட்டு மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முதலில் எந்த தேர்தல் நடைபெறும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top