பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு
மாத சம்பளம் ரூ.1.60 லட்சம் கிடைக்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், 2013ம் ஆண்டு வெளியான தகவலில் பிரதமருக்கான சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த விவரம் இடம் பெற்றுள்ளது.
அதன்படி பிரதமருக்கான மாத சம்பளம் ரூ.1.60 லட்சம் ஆகும். இதில் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம், தினசரி படி என்கிற வகையில் மாதம் ரூ.62 ஆயிரம், எம்.பி. நிதி என்ற வகையில் ரூ.45 ஆயிரம். மேலும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.3 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக கிடைக்கும்.
ஒரு மாதத்துக்கு நமது எம்.பிக்கள் பெறும் சம்பளம் ரூ.50 ஆயிரம். தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுவது தனி. நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போதோ, அல்லது நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நடக்கும்போதோ, அதில் பங்கேற்று கையெழுத்து போட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் தினப்படியாக வழங்கப்படும்.