போர்க்குற்றவாளி ராஜபக்­சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே - மாணவர் அமைப்புக்கள் - TK Copy போர்க்குற்றவாளி ராஜபக்­சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே - மாணவர் அமைப்புக்கள் - TK Copy

  • Latest News

    போர்க்குற்றவாளி ராஜபக்­சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே - மாணவர் அமைப்புக்கள்

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச‌­ இந்தியாவுக்குள் காலடி எடுத்து
    வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக மாணவர் அமைப்புக்கள் நேற்றுப் போராட்டம் நடத்தின.   தமிழ் நாடு மாணவர் இயக்கம், பாலசந்திரன் மாணவர் அமைப்பு, தமிழக முற்போக்கு மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.  

    சென்னை தி நகர், தணிகாசலம் வீதியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் கமலாலயம் அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட உள்ளதாக இந்த அமைப்புக்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன.   இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் இடை வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவர்கள் வழியில் இருந்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   

    இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழ் நாடு மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, "சிங்கள அரசுடன் உறவை கொண்டாடிய காங்கிரஸ், தமிழ் நாட்டில் இருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்டது போல் பாரதீய ஜனதா கட்சியும் தமிழகத்தில் விரட்டப்படும் என்று தெரிவித்தார்.   தமிழனிப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்­ச‌வை இந்தியாவுக்கு அழைக்கக் கூடாதென்றும், அவ்வாறு அழைப்பது என்று எடுக்கப்பட்ட முடிவை பா.ஜ.க. திரும்பப்பெற வேண்டும் எனவும் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தாக தமிழக முற்போக்கு மாணவர் முன்னணி தலைவர் மாறன் சுசீந்திரன் தெரிவித்தார்.   

    போராட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச‌­வுக்கு எதிராகப் பல்வேறு கோ­ச‌ங்கள் எழுப்பப்பட்டதுடன், தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் வகையில் பல்வேறு பதாகைகளையும் தாங்கியிருந்தனர். வழமைபோன்று பொலிஸார் இவர்களை கைது செய்து சென்றனர். 
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: போர்க்குற்றவாளி ராஜபக்­சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே - மாணவர் அமைப்புக்கள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top