ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர
அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்ஜி கிஹாரா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட மகிந்த மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது.
இந்த உண்மையை பிற நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் மகிந்த, ஜப்பான் துணை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஜப்பான் அமைச்சர் கூறுகையில்: இத்தீர்மாணம் இலங்கைக்கு எந்தவிதத்திலும் உதவாது. மேலும், இலங்கை அதன் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா உட்பட 5 நாடுகள் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
24 நாடுகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தன.