முன்னாள் உலக அழகி யுக்தாமுகி. இந்திப் படங்களில்
நடித்து நடிகையானர். தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் யுக்தா முகிக்கும், தொழிலதிபர் பிரின்ஸ் டுலிப்புக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வருடம் ஆவற்குள்ளாகவே யுக்தாமுகி கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பரபரப்பு புகார் கூறி வழக்கு தொடர்ந்தார். பிரின்ஸின் பெற்றோர் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், கணவர் பிரின்ஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறினார்.இதையடுத்து பிரின்சும் அவரது குடும்பத்தினரும் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதில் பிரின்சுக்கு மட்டும் முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது யுக்தாமுகியும், அவரது கணவரும் சமரசம் செய்து கொண்டு சேர்ந்த வாழ காலஅவகாசம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்யுமாறு யுக்தாமுகி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.எச்.பாட்டீல், அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். கணவருடன் சமரசம் செய்து கொண்ட யுக்தாமுகி. அவருடன் சேர்ந்து வாழவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.