தமிழர் தேசத்தில் விடுதலை முரசமிட்ட கலைஞர்கள், தங்களின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடிச் சாட்சியத்தினை
'காய்ந்து போகாத இரத்தக்கறை' எனும் இசைத்தொகுப்பின் மூலம் பதிவாக்கியுள்ளனர்.
'காய்ந்து போகாத இரத்தக்கறை' எனும் இசைத்தொகுப்பின் மூலம் பதிவாக்கியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலின் பெருவலியினையும், மக்களின் மனவிருப்பினையும், 10 பாடல்களாக பதிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத் தொகுப்பில், தமிழீழத் தாயகக் கலைஞர்களுடன் தமிழக கலைஞர்களும் கைகோர்த்துள்ளனர்.
இசைக்கலைஞர் சாகித்யன் இசையில் சாதுரியன், நிலவன், விஜி மற்றும் காசி ஆனந்தன் ஆகிய கவிஞர்கள் பாடல்வரிகளை எழுதியுள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு, தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று வெளியிடுகின்றது.