நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. பரத், அட்டக்கத்தி நந்திதா ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர தம்பி ராமையா, கருணாகரன், மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்பட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
கன்னட நகைச்சுவை நடிகர் கோமல் குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். எல்.ஜி.ரவிசந்தர் இயக்குகிறார். படத்தின் கதை இதுதான்: பழனி மலை அடிவாரத்தில் நிறைய சித்த வைத்திய குடும்பங்கள் இருக்கும். எல்லா நோய்க்கும் அவர்களிடம் மருந்து இருக்கும், ஊர் ஊராக சென்றுகூட வைத்தியம் பார்பார்கள். அப்படி ஒரு குடும்பம்தான் சித்தவைத்தியர் சிகாமணி குடும்பம். இளைஞர்களின் அந்த மாதிரியான பிரச்னைகளுக்கு வைத்தியம் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்.
அந்த குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசு வைத்தியர் பரத். எல்லா இளைஞர்களுக்கு அந்த பிரச்னை, பயத்தை போக்கி திருமணம் செய்து வைக்கும் பரத்துக்கு மட்டும் கல்யாணத்துக்கு பொண்ணு சிக்க மாட்டேங்குது. அந்த வெறுப்புல இருக்கும் பரத் கண்ணில் விழுகிறார் நந்திதா. எப்படியாவது அவரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிடனும் என்ற ஆவலில் பின்னாடியே சுத்துறார்.
ஆனா நந்திதாவோ இவன் தன்னை கடத்த திட்டம்போட்டுதான் பின்னாலேயே சுத்துறான்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்பா தம்பி ராமையாகிட்ட சொல்லிடுறார்.