'இது நம்ம ஆளு' டப்பிங் விரைவில் ஆரம்பம்…! - TK Copy 'இது நம்ம ஆளு' டப்பிங் விரைவில் ஆரம்பம்…! - TK Copy

  • Latest News

    'இது நம்ம ஆளு' டப்பிங் விரைவில் ஆரம்பம்…!

    கடந்த சில நாட்களாக சிம்பு, நயன்தாரா நடிக்க பாண்டிராஜ்
    இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தைப் பற்றிய வதந்தி அதிகமாக பரவியிருந்தது. இயக்குனர் பாண்டிராஜுக்கும், சிம்புக்கும் பிரச்னை என்றும், அதனால படமே 'டிராப்' ஆகி விட்டதென்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக படத்தின் டப்பிங் நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

    சிம்பு 'வாலு' படத்தை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலேயே 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பை சில வாரங்களுக்குத் தள்ளி வைத்திருந்தார்களாம். 'வாலு' படத்தை சிம்பு முடித்துக் கொடுத்து விட்டதால், மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. சிம்பு, நயன்தாரா பங்கேற்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 

    அதே போல், சிம்புக்கும் நயன்தாராவுக்கும் எந்தவிதமான சண்டையோ, சச்சரவோ இல்லையென்றும் தெரிகிறது. நயன்தாரா மிகுந்த மகிழ்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் புகைப்படத்தையும் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். சிம்பு, நயன்தாரா மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பதைப் பிடிக்காத யாரோ ஒரு சிலர்தான் வேண்டுமென்றே 'இது நம்ம ஆளு' படத்தைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக சிம்புவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் இசை வெளியீட்டை அநேகமாக அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 'இது நம்ம ஆளு' டப்பிங் விரைவில் ஆரம்பம்…! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top