மறக்க முடியுமா- இலங்கையின் பதிலுக்குப் பதில் அதிரடி - TK Copy மறக்க முடியுமா- இலங்கையின் பதிலுக்குப் பதில் அதிரடி - TK Copy

  • Latest News

    மறக்க முடியுமா- இலங்கையின் பதிலுக்குப் பதில் அதிரடி


    இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி
    15 டிசம்பர் 2009 ஆண்டு அன்று இலங்கை அணியுடன் தனது முதல் ஒரு நாள் போட்டியை விளையாடியது. ராஜ்கோட்டில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அதிரடி வீரர் ஷேவாக் (102 பந்துகளில் 146 ஓட்டங்கள்), அணியின் நட்சத்திர வீரர் சச்சின் (63 பந்துகளில் 69 ஓட்டங்கள்) இலங்கை அணியின் பந்து வீச்சுகளை சிக்சரும், பவுண்டரிகளுமாக புரட்டி எடுத்தனர். அடுத்து களம் கண்ட இந்திய அணியின் அணித்தலைவர் டோனியும்(53 பந்துகளில் 72 ஓட்டங்கள்) இலங்கை பந்துவீச்சாளர்களை விட்டு வைக்கவில்லை. இதன் மூலம் அணியின் ஓட்டங்கள் கடகடவென உயர்ந்தது. 

    50 ஓவர் முடிவில் இந்திய அணியின் ஓட்டங்கள் நினைத்து பார்க்க முடியாத 414 என்ற அதிகபட்ச ஓட்டகளில் முடிந்தது. 415 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. வெற்றி நமக்குத் தான் என்ற இந்திய அணியின் கனவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்தது இலங்கை அணியின் தொடக்க ஆட்டம். தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தரங்கா (60 பந்துகளில் 67 ஓட்டங்கள்), டில்ஷான் (124 பந்துகளில் 160 ஓட்டங்கள்) இந்திய அணியின் தொடக்க வீரர்களின் அதிரடிக்கு பதிலடி கொடுத்தனர். 

    அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சங்ககாராவும் (43 பந்துகளில் 90 ஓட்டங்கள்) அதிரடியில் அசத்த தவறவில்லை. இதன் காரணமாக கடினமான 415 ஓட்ட இலக்கை நோக்கி முன்னேறியது இலங்கை அணி. ஆனால் கடைசி நேரத்தில் முக்கிய வீரர்கள் ஓட்டங்கள் எடுக்கையில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, இந்திய வீரர்கள் பந்து வீச்சில் சிக்கி தவித்தது இலங்கை அணி. பரபரப்பான கடைசி ஓவரில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் 400 ஓட்டங்களை கடந்து திரில் வெற்றி பெற்ற போட்டிகளில் இதுவும் மறக்க முடியாத போட்டியாகவே இருக்கும்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மறக்க முடியுமா- இலங்கையின் பதிலுக்குப் பதில் அதிரடி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top