ஐ.பி.எல் 7வது தொடரில் மேக்ஸ்வெல்லை விட கொல்கத்தா
அணியின் உத்தப்பா அதிக ஓட்டங்கள் பெற்று அவரிடம் இருந்து ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா- பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது. உத்தப்பா 51 பந்தில் 1 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இவர் இந்த போட்டியில் 66 ஓட்டங்களை தொடும்போது மேக்ஸ்வெல் அடித்த ஓட்டங்களை கடந்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். இதற்கு முன்பு 12 போட்டிகளில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் 533 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தக்க வைத்திருந்தார். ஆனால் மேக்ஸ்வெல்லிடம் இருந்து தற்போது முதல் முறையாக ஆரஞ்ச் தொப்பி கை மாறியுள்ளது. உத்தப்பா 13 போட்டிகளில் விளையாடி 555 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதில் 5 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.