காதலில் தோல்வியடைந்த ஹீரோ கவுதம் கார்த்திக்கும், ஹீரோயின் ரகுல் பிரித்தும், ஒருவரை
ஒருவர் சந்தித்து, தங்களது காதல் தோல்வி சோகங்களை பறிமாறிக்கொள்கிறார்கள். பிறகு நண்பர்களாக பழக, ரகுல் மீது கவுதமுக்கு காதல் வருகிறது. அந்த காதலை ரகுலிடம் கவுதம் சொல்ல முயற்ச்சிக்கும் சமயத்தில் தான் தெரிகிறது, ரகுலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுவிட்டது என்று. இந்த இரண்டாவது காதலிலும் தோல்வியடைந்த கவுதம், மனம் தளராமல் மற்றொரு ஹீரோயினான நிகிஷா பட்டேலை காதலிக்க தொடங்குகிறார்.
இந்த நிலையில், ரகுல் தனது வருங்கால கணவரிடம், எப்போதும் கவுதமைப் பற்றியே பேச, அவரோ,"நீ கவுதமை காதலிக்கிறாய், அதை சோதித்துப் பார்த்துக்கொள்" என்று சொல்ல, இதனால் கோபமடையும் ரகுல், திருமணத்தை நிறுத்தி விடுகிறார். பிறகு, ரகுலும் கவுதமை காதலிக்க தொடங்க, அந்த நேரத்தில் கவுதமோ, நிகிஷா பட்டேலை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தெரிய வருகிறது. இதனால் மீண்டும் காதல் தோல்வியால் ரகுல் மனமுடைந்து போக, மறுபக்கம் கவுதம் - நிகிஷா காதல் டமால் ஆகிறது.
ரகுலின் காதல் டமால் ஆனது தெரியாமல் இருக்கும் கவுதமும், கவுதமின் காதல் டமால் ஆனது தெரியாமல் இருக்கும் ரகுலும் ஒன்று சேர்ந்தார்களா அல்லது வெறு யாருடனாவது ஜோடி சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை.
கவுதம் கார்த்திக்கின் முகம் கதாபாத்திரத்திற்கு ஒட்டவே மாட்டேன், என்று அடம் பிடிக்கிறது. பாஸ்ட் புட்டில் பிரைட் ரைஸ் போடும் நார்த் இந்தியன் போல இருக்கும் கவுதம், நடிப்பில் பெரிதாக ஜொலிக்க வில்லை என்றாலும், நடனம் ஆடுவதில் நன்றாகவே ஜொலிக்கிறார்.
நாயகி ரகுல் பிரித், இளைத்த ரசகுல்லாவைப் போல இருக்கிறார். அழகில் இருக்கும் தாராக்ளம்இவருடைய, நடிப்பில் இல்லை. இரண்டாவது நாயகி என்று சொல்லும் நிகிஷா பட்டேல், ஒரு பாடல் காட்சியில் ஐட்டம் டேன்சர் போல நடனம் ஆடுவதோடு சரி, மற்றபடி காட்சிகள் என்று இவருக்கும் பெரிதாக இல்லை.
பிரபு, அழகம்பெருமாள், அனுபமா குமார் உள்ளிட்ட பல நட்ச்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், நாயகன் கவுதமும், நாயகி ரகுல் பிரித்தும் தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.
இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். மற்றவை சுமார் தான். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ஒகே.
வெறும் காதல் படமாக மட்டும் இன்றி, காமெடிப் படமாகவும் இப்படத்தை இயக்க நினைத்த ரவி தியாகராஜன் ,அதற்காக காட்சிகளை மிக குறைவாகவே வைத்துள்ளார். இறுதிக் காட்சியில் அந்த குடிகார ஐடி ஊழியர் செய்யும் காமெடியில் தான் ரசிகர்கள் கூட்டம் சிறிது சிரிக்கிறது. மற்றபடி படத்தில் ரசிக்க கூடிய அளவுக்கு பெரிதாக ஒன்றுமில்லை.