2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை
6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்:
இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் வகித்துள்ளார்:
2000ம் ஆண்டு மே மாதம் 17ம் நாள் :
மே 17 காலை 8.46 க்கு இலங்கை அமைச்சர் பாலித கோகன்ன லண்டனில் உள்ள மேரி கொல்வின் ஊடாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார். வெள்ளைக்கொடியை பிடித்தபடி நடந்து வந்து சரணடைய வேண்டும் என்று.
15:29 மாலை (3.29) க்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ் மேரி கொல்வினுக்கு வருகிறது. அதனை அவர் நடேசனுக்கு பார்வேட் செய்கிறார். அதேவேளை பின் புலத்தில் பாரிய வெடிச் சத்தங்கள் கேட்ப்பதாக மேரி கொல்வின் தெரிவிக்கிறார்.
16:30 (மாலை 6.30) க்கு நடேசன் கொழும்பில் உள்ள சந்திர நேருவை தொடர்புகொண்டு, தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் , உத்தரவு தந்துவிட்டார் என்றும் தாம் இனி சரணடையலாம் என்றும் கூறுகிறார். பசில் ராஜபக்ஷவை தொடர்புகொண்டு இச்செய்தியை சொல்லுமாறு கூறுகிறார்.
19.00(மாலை 7.00) மணிக்கு சந்திர நேரு பசில் ராஜபக்ஷவை தொடர்புகொண்டு, நடேசன் சுமார் 3,000 போராளிகள் மற்றும் 22,000 ஆயிரம் காயப்பட்ட பொதுமக்களோடு சரணடைய இருப்பதாக கூறுகிறார். புலிகளின் அரசியல் துறை மட்டும் இந்த வேளையில் சரணடைய நினைப்பதாகவும் தெரிவிக்கிறார். உடனே பசில், நான் இதனை தான் எதிர்பார்த்தேன். இது நல்ல செய்தி ஆனால்.... மிகவும் கால தாமதமாக நடைபெறுகிறது. முன்னரே இவர்கள் சரணடைந்திருக்கலாம். எதற்கும் நான் எனது சகோதரர் மகிந்தரோடு பேசுகிறேன் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து சந்திர நேரு, பிரித்தானியா , அமெரிக்கா, மற்றும் நோர்வே தூதுவர்களை தொடர்புகொண்டு நடேசன் சரணடைவு குறித்து விளக்கிச் சொல்கிறார்.
19.30 ( மே 17 மாலை 7.30 மணி) நடேசன் மீண்டும் நேருவுக்கு கால் பண்ணுகிறார். நான் பசிலுடன் பேசிவிட்டேன். அவர் ஒத்துக்கொண்டுள்ளார் என்று கூறுகிறார் நேரு. ஆனல் சரியாகப் பேச முடியவில்லை. காரணம் நடேசன் இருக்கும் பகுதியில் இருந்து பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
19: 30 நேரு பசிலை தொடர்புகொள்ள பார்கிறார் ஆனால் பசில் தொலைபேசி ஆப் செய்யபப்ட்டு உள்ளது. உடனே மகிந்தரின் அலுவலகத்திற்கு நேரு தொடர்புகொள்ள பார்கிறார் ஆனால் முடியவில்லை.
19.30 இந்தவேளை பசில் ராஜபக்ஷவிடம் இருந்து நேருவுக்கு அழைப்பு வருகிறது. ஓகே நாங்கள் ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறோம். நான் மகிந்தருடன் பேசிவிட்டேன். மகிந்தார் நடேசனின் சரணடைவை ஒப்புக்கொண்டு விட்டார். என்று சொல்கிறார் பசில். இதேவேளை லண்டனில் உள்ள மேரி கொல்வினுக்கு நடேசன் தொலைபேசி அழைப்பை விடுத்து, நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம். ஓபாமா அரசாங்கம் மற்றும் பிரித்தானிய அரசாங்கம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமா ? என்று கேட்க்கிறார் ! எங்களால் இலங்கை அரசோடு பேசி, இனி ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவர முடியாது. எனவே ஐ.நா அதிகாரி விஜய் நம்பியாரை, தொடர்புகொண்டு, இலங்கை ஆரசோடு பேசச்சொல்ல முடியுமா ? என்று நடேசன் கேட்க்கிறார்.
மே 17 அன்றைய இரவு அப்படியே செல்கிறது. அதிகாலை 1.30 மணி ஆகிறது (அதாவது மே 18 அதிகாலை) மே 18 அதிகாலை 1.30 மணிக்கு நடேசன் மீண்டும் நேருவுக்கு போன் செய்கிறார். ஆமி மிக நெருக்கமாக வந்துவிட்டார்கள். துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ஆங்காங்கே பெண்கள் கதறும் சத்தமும் கேட்கிறது. 3000 போராளிகள். காயப்பட்ட 22,000 பொதுமக்கள் இருக்கிறார்கள். ஏன் இலங்கை இராணுவம் தொடர்ந்தும் ஷெல் அடிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு யுத்த நிறுத்தம் அல்லது சரணடைவுக்கு ஒப்புக்கொண்டால், அவர்கள் ஏன் இவ்வாறு செய்யவேண்டும் ? நீங்கள் பேசினீர்களா என்று கேட்கிறார்.
ராணுவத்தின் ஷெல்களால் மக்கள் காயமடைந்து சாகிறார்கள் என்றும் அவர் கோபமாக கூறுகிறார். நேரு சொல்கிறார், தயவு செய்து என்னோடு கத்த வேண்டாம், நான் உங்கள் மேல் ஷெல் அடிக்கவில்லையே.... உடனே அந்த தொலைபேசியை வாங்கி, புலித்தேவன் பேசுகிறார்... நீங்கள் சொன்னீர்கள் ஷெல் அடிப்பது நிறுத்தப்படும் என்று. ஆனால் அது நிறுத்தப்படவில்லை. எங்கள் சரணடைவை இராணுவம் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளது என்று சொன்ன புலித்தேவன். மீண்டும் அழைக்கிறோம் என்று சொல்லி போனை கட் செய்கிறார்.
மே 18 அதிகாலை 1.45 க்கு நடேசம் மீண்டும் நேருவோடு தொடர்புகொண்டு, அரசாங்கத்தரப்பில் இருந்து ஏதாவது செய்தி வந்ததா என்று கேட்கிறார். அதேவேளை நான் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் அதிகாரிகளோடு நேரடியாக தொடர்புகொண்டுள்ளே என்று நடேசன் கூறுகிறார்.
மே 18 அதிகாலை 1.56 க்கு பசில் ராஜபக்ஷ நேருவுக்கு அழைத்து, நாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம். சரணடைய வருபவர்களை எப்படி அடையாளம் காணுவது என்று கேட்க்கிறார். அவர்கள் வெள்ளைக்கொடியோடு வருவார்கள் என்று நேரு சொல்கிறார். ஓகே நான் மகிந்தவிடம் அவர்கள் வெள்ளைக்கொடியோடு வருவார்கள் என்று சொல்கிறேன் என்கிறார் பசில். இதேவேளை குறுக்கிட்ட நேரு, நடேசன் என்னை சரணடையும் இடத்திற்கு வரும்படி சொல்கிறார் , என்று கூறுகிறார். ஓகே நான் அதனை பார்த்துக்கொள்கிறேன் என்கிறார் பசில். உரையாடல் முடிகிறது.
மே 18 அதிகாலை 3.30 மணிக்கு, புலித்தேவன் நோர்வேயில் உள்ள அதிகாரி ஒருவரை தொடர்புகொள்கிறார். அதேவேளை அவர் கொழும்பில் உள்ள நோர்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு தமது சரணடைவு தொடர்பாக கூறுகிறார். இதேவேளை ப.நடேசன் லண்டனில் உள்ள தனது சகோதரரை தொடர்புகொண்டு, தன்னிடம் சுமார் 1,000 காயப்பட்ட போராளிகள் உள்ளதாக கூறுகிறார்.
மே 18 அதிகாலை 4.09 க்கு பாலித கோகன்னவுக்கு மேரி கொல்வின் அவர்கள் புலித்தேவன் நடேசன் மற்றும் 40 போராளிகள் சரணடைய உள்ளதாக எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்கிறார்.
மே 18 அதிகாலை 4.36 க்கு நடேசன் நேருவுக்கு கால் செய்கிறார். நேரு தான் பசிலுடன் பேசிய விடயங்களை கூறுகிறார். வெள்ளைக்கொடியோடு வரச்சொல்கிறார். நடேசன் நேருவை பார்த்து, நீங்களும் வருவீர்களா என்று கேட்கிறார்.
மே 18 அதிகாலை 5.00 மணிக்கு மீண்டும் நடேசன் அவரசமாக நேருவுக்கு அழைக்கிறார். எங்கள் மேல் இராணுவம் பாரிய தாக்குதலை தொடுத்துள்ளது. பலர் மேலும் கயப்பட்டு இருக்கிறார்கள் என்று பதட்டமாக கூறுகிறார். 5.11 அதிகாலை மீண்டும் நடேசன் நேருவுக்கு கால் செகிறார். அரசாங்கம் ஏதாவது சொன்னதா என்று கேட்கிறார். ஆனால் படு பயங்கர துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது என்று நேரு விபரித்துள்ளார்.
அதிகாலை 5.28 க்கு நேரு அமெரிக்கா தூதுவரை தொடர்புகொள்கிறார். தாம் கடுமையாக வேலைசெய்துகொண்டு இருப்பதாகவும் , இந்த சரணடைவு குறித்து தாம் ஆழ்ந்த கருசணை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
காலை 5.30 மணிக்கு நல்ல தூக்கத்தில் இருந்த விஜய் நம்பியாரை , போன் மேல் போன் அடித்து எழுப்புகிறார் மேரி கொல்வின். நான் மகிந்தருடன் பேசிவிட்டேன். சரணடையும் புலிகளை தான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று மகிந்தர் என்னிடம் கூறியுள்ளார். எனவே நான் இலங்கை சென்று இந்த சரணடைவை நேரில் கண்காணிக்க தேவையில்லை என்று அவர் மேரி கொல்வினிடம் தெரிவிக்கிறார். உடனே மேரி கொல்வின், இது சரியான முடிவா ? உங்களுக்கு இது சரி என்று தென்படுகிறதா என்று சந்தேகம் எழுப்புகிறார் !
காலை 5.51 க்கு பிரித்தானிய தூதுவர் அலுவலகத்தில் உள்ள 2ம் நிலை அதிகாரி ஒருவர் , நேருவை தொடர்புகொண்டு இந்தச் சரணடைவு தொடர்பாக பிரித்தானிய அரசு இலங்கை அரசுடன் பேசிவிட்டது என்றும், இதனை இலங்கை அரசு சரியாக செய்யவேண்டும் என்று தமது அரசு அழுத்தம் கொடுத்துள்ளது என்றும் கூறுகிறார்.
5.45 க்கு மேரி கொல்வின் நேருவுக்கு அழைப்பை விடுத்து பேசி, மீண்டும் தான் விஜய் நம்பியாரை தொடர்புகொள்கிறேன் என்று கூறுகிறார்.
5.56 க்கு முன்னர் மேரி கொல்வின் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதில் போடுகிறார் பாலித கோகன்ன " தாங்ஸ்" என்று
6.02 க்கு நடேசன் மீண்டும் நேருவை அழைக்கிறார். பலர் இறந்துகொண்டு இருப்பதாக கூறுகிறார். அரசாங்கம் ஏதாவது சொன்னதா என்றும் கேட்க்கிறார். ஆனால் இல்லை என்று சொன்ன நேரு. பசில் ராஜபக்ஷவின் மோபைல் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து அவருக்கே நீங்கள் நேரடியாக அடித்து பேசுங்கள் என்று கூறுகிறார். காலை
6.09 க்கு புலித்தேவன், தான் பாலம் ஒன்றுக்கு அருகாமையில் வெள்ளைக்கொடியுடன் செல்கிறேன் என்று மேரி கொல்வினுக்கு சொல்கிறார். தனது சட்டலைட் தொலைபேசியை தான் துண்டிக்காமல் அப்படியே செல்கிறேன் என்று அவர் கூறுகிறார். ஆனால் சுமார் 2 நிமிடங்களுக்கு பின்னர், அவர் தொலைபேசி இணைப்பு தானாகவே துண்டிக்கப்படுகிறது !
மே 18 காலை 6.10 க்கு மகிந்தரிடம் இருந்து நேருவுக்கு அழைப்பு வருகிறது. ஓகே இந்த சரணடைவை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நான் கோட்டபாயவுக்கு கட்டளையிட்டுவிட்டேன். சரணடையும் புலிகளை அவர் ஒன்றும் செய்ய மாட்டார் என்கிறார். நான் அந்தப் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன் என்று கூறுகிறார் நேரு ! இல்லை---- இல்லை அந்தப் பகுதிக்கு நீங்கள் போகவேண்டாம். எங்கள் இராணுவம் மிகவும் கட்டுப்பாடான இராணுவம் ! நாங்கள் ஒரு கட்டளை இட்டால் அவர்கள் அதனை மீற மாட்டார்கள் என்று கூறுகிறார் மகிந்தார். நீங்கள் ஏன் அந்த யுத்த பிரதேசத்திற்கு சென்று உங்களை தேவையில்லாமல் ஆபத்தில் போடுகிறீர்கள் என்று, கேட்கிறார் மகிந்தர். தொலைபேசி உரையாடல் முடிவடைகிறது.
மே 18 அதிகாலை 6.20 க்கு பசில் நேருவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தாம் நடேசனுடன் பேசிவிட்டதாக கூறுகிறார். இனி ஒன்றுக்கும் பயப்பிட தேவையில்லை என்கிறார். அவர்களின் சரணடைவை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்கிறார். எந்த வழியால அவர்கள் வரவேண்டும், எங்கே வரவேண்டும் என்ற விபரங்களை பசில், நேருவிடம் தெரிவிக்கிறார்.
மே 18 அதிகாலை 6.20 முதல் 6.30 க்குள் நேரு நடேசனுடன் தொடர்புகொண்டு பசில் சொன்ன விடையங்களை சொல்கிறார். ஆனால் நடேசன் இருக்கும் பகுதியில் தொடர்ந்தும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. இதனால் நிலை குலைந்து போகிறார். இதேவேளை தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது.
காலை 6.46 க்கு , பாலித கோகன்னவுக்கு நடேசன் பலம் ஒன்றுக்கு அருகாமையில் வெள்ளைக்கொடியோடு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இது நல்ல செய்தி. இனி நாம் பழையவற்றை மறந்து விட்டு நாட்டை கட்டியெழுப்பலாம் என்று அமைச்சர் பாலித கோகன்ன மேரி கொல்வினுக்கு, எஸ்.எம்.ஏஸ் அனுப்புகிறார்.
6.56 க்கு பசில் ராஜபக்ஷ நேருவுடன் தொடர்புகொண்டு, நடேசனிடன் கேளுங்கள் ஏன் புலிகள் தொடர்ந்தும் ஆமியை நோக்கி சுடுகிறார்கள் ? என்று கேட்டுள்ளார் ! இனி நீங்கள் வாயைப் பொத்துங்கள். இனி நீங்கள் இதுதொடர்பாக சர்வதேசத்திற்கு எதனையும் சொல்லக்கூடாது. என்று பசில் மிரட்டியுள்ளார். நடேசனின் சட்டலைட் போன் இலக்கத்தை நேரு பசிலுக்கு கொடுத்து, நீங்கள் நடேசனுடன் நேரடியாக பேசுவது நல்லது என்று கூறுயுள்ளார்.
மே 18 காலை 8.00 மணிக்கு ஜேன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி , நேருவுக்கு தொலைபேசியில் அழைத்து, நடேசன் புலித்தேவன் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார். உங்களுக்கு எப்படி தெரியும் என்று நேரு கேட்டவேளை , எனது நண்பர் ஒருவர் கமாண்டோ படைப்பிரிவில் உள்ளார். அவரே இப்போது எனக்கு சொன்னார் என்று கூறியுள்ளார். அதுமட்டும் அல்ல. சரணடைந்தவர்களுக்கு முதலில் தேனீர் கொடுத்துள்ளார்கள். பின்னர் இரண்டாவதாக சரணடைந்த நடேசன் குழுவுக்கும், தேனீர் கொடுத்துள்ளார்கள். ஆனால் சரணடைவு முடிந்த பின்னர் அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
நடேசனின் மனைவி கமாண்டோ பிரிவின் தளபதியின் கால்களில் விழுந்து கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் அனைவரையும் அப்படியே கொன்றுவிட்டார்கள் என்று, ஜேன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி , தனது நண்பர்(மகாண்டோவில் உள்ளவர்) கூறியதாக சொல்லியுள்ளார். இதனால் இலங்கையில் இருக்க பயந்து உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார் நேரு. இப்படி தான் இலங்கை அரசாங்கமும், அரச படைகளும் சரண்டைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றார்கள்.