சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டின் பிறபகுதிகளில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், பேரணிகளில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நீல நிற மேற்சட்டைகளை அணிந்து கொண்டே பங்கேற்று வந்தார்.
ஆனால், வடக்கு, கிழக்கில் அவர் தான் வழக்கமாக அணியும், வெள்ளை நிற தேசிய உடையுடனேயே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று முன்தினம், முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் நடந்த கூட்டங்களிலும், நேற்று மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் இடம்பெற்ற கூட்டங்களிலும், சிறிலங்கா அதிபர் வெண்ணிற ஆடையுடனேயே பரப்புரையில் ஈடுட்டார்.