ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையே பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்டுள்ளது என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தப் கொள்கைப் பிரகடனமே முழுக்க முழுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ளது.கொள்கைப் பிரகடனத்தின் அநேகமானவை நடைமுறையில் அமுல்படுத்தப்படக்கூடியவை அல்ல.வெற்றிபெறப் போவதில்லை என புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் இவ்வாறு கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு மக்களிடம் பொய்யுரைக்க ஆரம்பித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.