கோடிக்கணக்கான, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டுவதற்கு அரச ஊழியர்கள் மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல மில்லியன் விளம்பர போஸ்டர்களை அச்சடித்து, அரச ஊழியர்களால் ஒட்டப்பட்டு வந்த விளம்பரங்களையும், போஸ்டர்களையும், அரச ஊழியர்களையும் ஊடகங்கள், காணொளி மற்றும் செய்திகள் மூலம் வெளிக்கொண்டு வந்தனர்.
இதனால் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் பொருளாதார அமைச்சை சேர்ந்த ஊழியர்களும் இந்த வேலைகளை செய்ய மறுப்பதால் பல கோடி மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட ஆட்களை வாடகைக்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.